இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலம் முதல் ஞாயிறு

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

முதல் வாசகம் தொடக்கநூல் 9: 8-15
இரண்டாம் வாசகம் 1 பேதுரு 3:18-22
நற்செய்தி வாசகம் மாற்கு 1:12-15

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ஏனெனில் காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது “என்ற மையக்கருத்தினை வழங்குகின்றது. திருமுழக்குப் பெற்று, கிறிஸ்துவின் நாமத்தை சுமந்து கொண்டிருக்கும் நமக்கு தாய் திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் என்னும் நாட்களை கொடையாக கொடுக்கின்றது. மனம் மாற்றத்தின் காலம். அருளின் காலம். மன்னிப்பின் காலம். சிறப்பாக இறைவனுடன் ஒப்புரவாகும் காலம். பிளவுபட்ட உறவுகளை புதுப்பிக்கும் காலம். எனவேதான் மனம் என்னும் பாலைவனத்தில் பயணிக்க இறைவன் அருளின் காலத்தை நமக்கு கொடுக்கின்றார். நாற்பது நாட்களையும் இறைஅருள் நிறைந்த புனித நாட்களாக இருக்கவும், சிறு சிறு நற்செயல்களைச் செய்து அருளின் காலத்தை செலவிக்க முயற்சிப்போம்.

நாற்பது நாட்களை கடந்து செல்லும் போது, நின்று நிதானமாக, மனம் என்னும் மண்ணில் வேராகப் படர்ந்திருக்கும் பாவம் என்னும் வேர்களுக்கு மன்னிப்பு என்னும் இறைவனுடைய அருள் நீரை பாய்ச்சிட ஒவ்வொரு நாளும் முயற்சி எடுப்போம். இறைவேன்மேல் ஆழமான நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கவும். அவர் காட்டிய அன்பின் மன்னிப்பின் பாதையில் பயணிக்க அருள்வேண்டி மனம் மாற்றத்தின் காலத்தில் இறைமகன் இயேசுவுக்கு சிறந்த மகனாக மகளாக வாழுவோம் அவ்வாறு நாம் வாழும்போது அவருடைய நற்குணங்கள் நம்மில் மிளிரும். இறைமகன் இயேசு எவ்வாறு இறைவார்த்தையால் அலகையின் சூழ்ச்சியை வென்றாரோ அதுபோல நீங்களும் நானும் இறைவர்த்தையின் வழியாக அலகையின் சூழ்ச்சியிலிருந்து வெற்றி பெறுவோம். வாழ்வு தரும் வார்த்தையானவர் நம்மோடு இருக்கும் போது பயம் ஏன்?

உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! 1பேதுரு 2:4-5a