இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக

முதல்வாசகம் : லேவியர் 13:1-2,44-46
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 10:31, 11:1
நற்செய்தி வாசகம் : மாற்கு1:40-45

இன்று ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு. இன்று நாம் அனைவரும் உலக நோயாளர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இன்று நோய்கள் நீங்குவதற்கு மனிதன் தேடும் வழிகள் ஏளாரம். இன்று மருத்துவமனைகளில் நோயாளிகள் நிறைந்து காணப்படுகின்றார்கள். நோயுற்ற ஒரு மனிதன் தனது நோய் நீங்குவதற்காக மருத்துவரைக் காணச் செல்கின்றான். மருத்துவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நம்புகின்றான். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கடைபிடித்து நலம்பெற முயற்சி எடுக்கின்றான். உலகிலே பெரிய மருத்துவரான இறைவனின் சொற்களை கடைபிடித்து வாழ்ந்தால் நமக்கு நோய்கள் வருவதை தடுக்கலாம் அல்லவா? .லூர்து அன்னையின் திருவிழாவினை சிறபிக்கும் இந்த நாள் மிகவும பொருத்தமானதாக உள்ளது. அன்னையின் புனித தளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குணம் பெறுவது அனைவரும் அறிந்த உண்மை. இன்று மக்கள் தங்களுடைய நோய்கள் குணம் பெறும்படி புனித தளங்களுக்கும், தியான இல்லங்களுக்கும் செல்கின்றார்கள். அப்படிச் சென்றவர்களில் அனேகம் பேர் குணம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றதையும் அறிந்திருக்கின்றோம். மனிதர்களாகிய நம் அனைவரும் துன்பங்களிலிருந்து விடுதலைபெற்று மகிழ்ச்சியுடன் வாழத்தான் ஆசைப்படுகின்றோம். ஏங்கே செல்வது? எப்படி குணம் பெறுவது? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைப்பது ஆண்டவரிடத்தில். அனைத்து துன்பங்களிலிருந்து நமக்கு உண்மையான விடுதலை கொடுக்கக் கூடியவர் இறைவன் ஒருவர் மட்டுமே எனவேதான் அவர் நானே உன்னை குணமாக்கும் இறைவன் என்று வாக்கு கொடுக்கின்றார். இறைவன் மோசேயிடம் கூறுகின்றார் “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்கின்றார். (வி.ப15:26) ஆண்டவரின் குரலுக்கு மனிதன் செவி கொடுப்பது குறைவு ஆகையால்தான் பல பிரச்சனைகளுக்கு மனிதன் உள்ளாகின்றான். தவக்காலத்தை தொடங்க இருக்கும் நாம் அனைவரும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து அவருடைய விதிமுறைகளை கருத்தாய் கடைபிடிக்க முயற்சிபோம்.

லேவியர் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் தொழுநோய் உடையவர்கள் தீட்டுள்ளவர்கள் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை ஆண்டவர் மோசேயுடனும், ஆரோனிடமும் எடுத்துரைக்கின்றார். வெள்ளைத் தழும்போ அல்லது வெள்ளைப் புண்ணைக் கண்டால் உடனே குருவிடம் காண்பிக்க வேண்டும். குரு அவரை பார்த்த பிறகு அவர் தீட்டுடையவர் அல்லது தூய்மையானவர் என்று தீர்ப்புச் சொல்லுவார். அதிகாரம் 13 முழுவதிலும் தொழுநொய் உள்ளவரை குரு எவ்வாறு சோதனை செய்து தீர்ப்பிடுவதைப் பற்றி விளக்குகின்றது. அன்று தொழுநோய் என்றாலே பயம், சாபம், சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைப்பார்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழிந்த உடை அணிந்து தலைவாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு தீட்டு தீட்டு என்று குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர் என்று கருதப்படுவர் என்று காண்கின்றோம். குரு சந்திப்பு கூடாரத்தில் குற்றம் நீக்கும் பலியாக ஒப்புக் கொடுப்பார். இன்று தொழுநோயாளர்களால் சமுதயாத்தில் வாழ முடிகின்றது. அவர்களுக்கு பணிசெய்யவும் எத்தனையோ பேர் முன்வருகின்றனர். அவர்களின் கனி நிறைந்த சொற்களால் அவர்களுடைய நோய் குணம் பெறுகின்றது. ஐந்து வருடங்கள் தொழுநோயாளர்களுடன் பணி செய்ய இறைவன் எனக்கு சந்தர்ப்பம் கொடுத்து போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் உன்னமானது. தொடக்கத்தில் எனக்கு பயம் இருந்தது ஆனாலும் அவர்களுடைய எளிமை, தாழ்ச்சி என்னை மிகவும் தொட்டது. விடுமுறைக்கு செல்லும்போது சிலரை நான் காண்பது உண்டு. அப்போது இருந்த அதே சிறிப்பும் நன்றியுனர்வும் அவர்களுடைய வாழ்வில் உண்டு என்பதை என்னால் நன்றாக உணரமுடிந்தது. இறைமகன் இயேசு பிணியாளர்களை தொட்டது போல் நாமும் நம்முடன் வாழும் அன்பு உள்ளங்களை பராமரித்து அரவணைக்கும் போது உண்மை மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தில் கிடைக்கும். திருத்தூதர் பவுலடிகளார் கூறுகின்றார் நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள் என்று. மகிழ்சியின் காலமாகிய புனித நாட்களில் பயணம் செய்யும் போது சிறு சிறு காரியங்களை ஆண்டவரின் மாட்சிக்காக செய்வோம் என்று முடிவு எடுப்போம். உள்ளத்தின் ஆழத்தில் இறைவனுக்கு எதிராக உள்ள பாவங்கள் என்னும் நோய்களை மன்னிக்குமாறு வேண்டுவோம். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்பு பெறுவர். ஆம் நம்பிக்கையோடு இறைவன் காலடி அமர்ந்து மன்னிப;பு பெறுவோம்.

நமது இறைவன் மன்னிக்கும் இறைவன். அவர் மன்னிப்பும் இரக்கமும் பேரன்பும் கொண்டதால்தான் தனது ஒரே மகனை நமக்காக சிலுவை மரணத்தை ஏற்கச் செய்து நம் அனைவருக்கும் மீட்பு வழங்கினார். தன்னை சிலுவையிலே அறைந்தவர்களுக்காக இறைவனிடம் மன்றாடிய பரமன் அவர். துன்ப வேளையில் தன்னை தனியாக விட்டு விட்டு ஓடிச் சென்ற அன்புச் சீடர்களையும் மன்னித்து இறையாட்சிப் பணியை தொடரும்படி ஆசி வழங்கியவர். ஆகவே அவருடைய பேரன்பும் இரக்கமும் நேற்றும் இன்றும் என்றும் நமக்கு உள்ளது. மனம் மாற்றம் பெற்று ஓப்புரவு அருள் கொடைகளைப் பெற்று உள்ளத்தில் படிந்து கிடக்கும் தொழுநோய்களை அப்புறப் படுத்துவோம். இறைமகன் இயேசு தனது பணிவாழ்வில் நோயாளர்களை தொட்டு குணமாக்குகின்றார். இன்றைய நற்செய்தியில் தொழுநோயளார் இயேசுவை அனுகி வந்து, நீ விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று வேண்டினது போல் நாமும் வேண்டுவோம். அவர் நம் அனைவர்மீதும் பரிவுகொண்டு நம்மை தொட்டு நான் விரும்புகின்றேன் உமது நோய் குணம் பெறும் என்று சொல்லும் குரலைக் கேட்க நம்மை முழு உள்ளத்தொடு ஆயத்தம் செய்வோம்.

ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர். (திருத்தூதர் பணிகள் 2:21)