இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக் பாலம் நான்காம் ஞாயிறு

என்னுடைய வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன்

முதல் வாசகம் : இணைசசட்ட நூல் 18:15-20
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 7: 32-35
நற்செய்தி வாசகம் : மாற்கு 1:21-18

இன்று ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. இறைமக்களாகிய நாம் அனைவரும் இன்று இறைவனுடைய வார்த்தையை அறிவிக்க கடமை பட்டுள்ளோம். நற்செய்தியை மக்களின் மனங்களில் விதைக்க இன்று உண்மையான இறைவாக்கினர்கள் நமது குடும்பம், சமுதாயம், வேலைத் தளம், குழும்பம் ஆகிய இடங்களில் உறுவாக வேண்டும். அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு என்ற இறைவார்த்தை இக்காலக்கட்டத்தில் மிகப் பொருத்தமாக உள்ளது தானே? ஆன்மீக விழுமியங்கள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டு போவதைக் காண்கின்றோம் அல்லவா. இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுக்க நம் அனைவரின் செவிகள் பலநேரங்களில் இடம் கொடுப்பதில்லை. உலகம் காட்டும் வழிகளுக்கு உடனடியாக செவிகொடுத்து அதன்படி வாழ்க்கையை கட்டி எழுப்ப இன்று நமது சிறய உள்ளங்கள் துடிக்கின்றதுதானே? அதனால் ஏற்படும் விளைவுகள் தனிமை. மன அழுத்தம், தீய பழக்கங்கள் நம்மிடையே வளர ஆரம்பிக்கின்றது அதனால் பலருடைய வாழ்வு அமைதி இல்லாமல் திசை திரும்பிக் கொண்டிருக்கின்றது. வார்த்தைக்கு செவி கொடுத்தால் புது வாழ்வு நம்மில் மலரும் என்பது உண்மை.

வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது என்பதையும், வார்த்தையான இறைவன் உலகம் முடிவுவரை நம்மோடு வாழ்கின்றார். அவருடைய வார்த்தையால் உலகமே உண்டாயிற்று என்பதை விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கூகின்றது தானே?. இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நம்மிடம் கூறுவதை நமது இதயத்தில் ஏற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன் என்று கூறும் இறைவனுடைய வார்த்தையை விசுவசித்து நம்பி உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, செவி கொடுத்து அதன்படி வாழ்க்கையை வார்த்தை என்னும் பாறையில் கட்டுவோம் அப்பொழுதான் நமது வாழ்க்கை என்னும் படகு உடையாமல் இருக்கும். திருத்தூதர் யோவான் தனது நற்செய்தியில் மிக அழகாக கூறுகின்றார் ‘தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார் என்று. ( யோவான் திருப்பாடல் 119, 105 இறைவசனம் கூறுகின்றது “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே “என்று திருப்பாடல் ஆசியரியர் கூறகின்றார். இன்று எனக்கும் உங்களுக்கும் வாக்கு காலடிக்கு விளக்காகவும், பாதைக்கு ஒளியாவும் உள்ளதா அல்லது சமூக ஊடகங்களின் வழியாக அனுப்பபடும் பயனில்லாத வாக்குகள், நமது காலடிக்கு விளக்காகவும், பாதைக்கு ஒளியாகவும் உள்ளதா? சிந்திப்போம். இருளின் காலக் கட்டித்தில் பயணிக்கும் நாம் அனைவரும் அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருப்பது மிகவும் அவசியம். எதிராகிய நமது அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. வார்த்தையானவரும் இறைவார்த்தையும் நம் உள்ளத்திலும் உதட்டிலும் இருந்தால் இறைமகன் இயேசுவைப் போல் ‘அகன்று போ சாத்தானே, என்று நம்மால் கண்டிப்பாக கூற முடியும். துணிவுடன் சாத்தானை நம் வாழ்விலிருந்து விரட்டுவோம்.

இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பின் போது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, இதோ இந்நெருப்புபபொறி உன் உதடுகளைத் தொட்டது “ என்றும் “(எசாயா 6:6-7). இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பின்போது இறைவன் கூறுகின்றார் “ ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: இதோ பார் என் சொய்களை உள் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும் இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் “. (எரேமியா 19-10) இறைவாக்கினர் எரேமியா பலமுறை ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது‘என்று கூறுகின்றார். அவருடைய பணிவாழ்வில் துன்பங்கள் வந்தாலும் துணிவுடன் ஆண்டவருக்கு கீழ்படிந்தார். இறைவன் இறைவாக்கினர் மோசேயிடம் கூறுகின்றார் ‘’ மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன், நீ பேச வேண்டியதை உனக்குப் கற்பிப்பேன் என்கின்றார். இறைவன் நன்று அறிந்திருந்தார் மோசே நாவன்மை அற்றவன், அவருக்கு வாய் திக்கும், நாவும் குழறுபவன் என்று ஆனாலும் அவரை அழைத்து அவருக்கு துணையாக நாவன்மை உடைய அவருடைய சகோதரனை அழைக்கும்படி ஏற்பாடு செய்கின்றார். இறைவன் கூறுவதை இன்று ஆழமாக சிந்திப்போம் “ நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன் என்கின்றார். எவ்வளவு அற்புதமானவர் நமது இறைவன் என்பதை சுவைத்து அனுபவிக்க வேண்டும். திருத்தூதர் பேதுரு கூறியது போல் நாம் ஒவ்வொருவரும் கூறவேண்டும். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று மன்றாடுவோம். அவருடைய வார்த்தை என்னும் நெருப்பு நமது உதடுகளை தொடட்டும். இன்று நமது வாட்டாரத்தில் சிறு சிறு நற்செய்ல்கள் வழியாக இறைவார்த்தையை எடுத்துரைக்கும் இறைவாக்கினராக இருக்க முயற்சிப்போம்.

இறைமகன் இயேசு “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்று கூறுகின்றார். நமது சொற்களும் நற்செயல்களும் இறைவனின் வார்த்தையை சார்ந்து இருக்கட்டும். ஆவியானரின் செயல்காடுகளை அனுபவிக்க அருள் தரவேண்டுமென்று வாஞ்சையோடு வார்த்தையானவரை கண்நோக்குவோம். வார்த்தையை துணிவுடன் பறைசாற்றுவோம். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். மத்தேயு 3:11