இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருக் குடும்ப திருவிழா

ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்

முதல் வாசகம் : தொடக்கநூல் 15: 1-6, 21:1-3
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 11: 8, 11-12, 17-19
நற்செய்தி வாசகம் : லூக்கா 2: 22-40

ஆண்டின் இறுதி நாளாகிய இன்று நமது தாய் திருச்சபை திருக் குடும்ப திருவிழாவைக் கொண்டாடுகின்றது. இன்றைய இறைவாசகங்கள் இறைவன்மேல் நம்பிக்கை கொண்ட இரண்டு குடும்பங்களை எடுத்துக் காட்டாக நம்முன் வைக்கின்றது. இறைவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவரின்மேல் ஆழமான விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் ஆபிரகாம், சாராவின் குடும்பம், இறைமகன் இயேசுவின் பெற்றோர்களாகிய அன்னை மரியாள், யோசேப்பின் குடும்பம். ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார், மேலும் ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைமாறு கிடைக்கும் என்ற இறைவார்த்தைகள் ஆபிரகாமிற்கு ஓர் புதிய ஆற்றலையும், நம்பிக்கையும் கொடுத்திருக்கும். ஆகையால்தான் இறைவன் தனக்கு கொடுத்த ஒரே மகனையும் பலியிட முன்வருகின்றார். ஆபிரகாமும் சாராவும் வயதில் முதியவராகவும் இருந்ததால் அவர்களுக்கு குழந்தை பெறாத குறையை இறைவன் நீக்கி வைக்கின்றார். ஆபிரகாம் இறைவனின் வாக்குறுதியையும் உடன்படிக்கையும் நம்பியதால் அவரை விசுவாசத்தின் தந்தை என்று அழைககின்றோம். எனக்கு வாக்களித்தவர் நம்பிக்கைகுரியவர் என அவர் உள்ளத்தின் ஆழத்தில் நம்பியதால் துணிந்து இறைவன் காட்டிய பாதையில் பயணிக்க துணிகின்றார். இறைவன் ஆபிரகாமை அழைத்தபோது இவ்வாறு கூறகின்றார் “உன் நாட்டிலிருந்து உன் இனத்தவரிடமிருந்தும். புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்.நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழுங்குவேன். உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன் உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும் என்று கூறிய இறைவனின் வாக்குறுதி அவருடைய வாழ்க்கையில் முழுமையாக நிறைவேறியது என்பதை திருவிலியத்தில் காண்கின்றோம். இறைவனின் உடனிருப்பும் வாக்குறுதியும் அவரை குணத்திலும் நற்பண்புகளிலும், தாளார மனத்திலும் வளரச் செய்தது. ஆபிரகாம் தாராள மனம் கொண்டதால்தான் லோத்துவுக்கு முதலிடம் தந்து நாட்டைப் பிரிக்க முதல் உரிமையைக் கொடுக்கின்றார். சோதோமுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். சாலேம் அரசர் உன்னத கடவுளின் அர்ச்சகராக விளங்கிய மெல்கிசெதேயின் ஆசீரையும் பெற்று இறைவனுக்கு உகந்தவராக விளங்கினார். இறைவனின் வாக்குறுதியை நம்பி, விசுவசித்து துணிவு நற்பண்பு, தியாகம், பொறுப்பு, கடமை, வழிநடத்துதல், மனுக்குலத்துக்கே மிகஆசீர்வாதமாய் திகழ்ந்தவர் நமது விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம். நானும் நீங்களும் இறைவன்மேல் நம்பிக்கை கொண்டு பிறருக்கு ஆசீயாக விளங்குகின்றோமா?

திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தியில் இயேசுவின் பெற்றோர்களாகிய அன்னை மாரியாவும் யோசேப்பும் மோசேயின் சட்டப்படி குழுந்தை இயேசுவை இறைவனுக்கு அர்ப்பணிக்க எருசலேம் தேவாலத்திற்கு கொண்டு சென்றார்கள். அன்னை மரியாள் இறைவனின் அருளினால் நிறையப்பெற்று இறைமகன் இயேசுவை மீட்பராக நமக்கு கொடுத்த அன்பு தாய். எளியேரின் காணிக்கையை அவர்கள் கொண்டு செல்கின்றார்கள். அன்னை மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர் நேர்மையாளர். ஆனாலும் ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி ,யோசேப்பே தாவீதின் மகனே உன் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயெசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றார் என்பதை மனதில் சிந்தித்து செயலாக்குகின்றார். ஆண்டவரின் தூதர் தமக்கு கூறிய வார்த்தையை நம்பி அன்னை மரியாளை தம் மனைவியாக ஏற்றுக் கொண்டு இறைமகனை உலகிற்கு கொண்டுவர அன்னை மரியாளுடன் ஒத்துழைகின்றார். இறைமகனின் பெற்றோர்களுக்கு தன் அன்பு மகனை உலகில் பிறப்பதற்கு ஏற்ற அரண்மனையோ, வீடோ, சத்திரமோ, தங்கும் விடுதியோ இல்லை ஆனால் அவர்களுக்கு கிடைத்த இடமோ மாட்டுத் தொழுவம். அவர்களுடைய உறவினர்களோ இடையர்கள். எளிமையின் தோற்றம். ஏழ்மையின் பிறப்பிடமாக தோன்றியவர் நமது அமைதியின் அரசர். தாழ்ச்சி என்னும் கொடையை நமக்கு கற்றுத் தரும் அரசர். அவரைப் போல் ஏழ்மையில் வாழ்வதற்கு கற்றுக் கொள்வோம். அன்னை மரியாள் தூய ஆவியால் நிழலிட்டது போல் நமது குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆவியால் நிரம்பிட வேண்டுமென்று முயற்சிப்போம்.

இன்றும் எத்தனையோ இறைவனில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக இரவும் பகலும் அயராது உழைத்து தங்களுடைய குழந்தைகள் அறிவிலும் ஞானத்திலும் வளர வேண்டுமென்று விரும்புகின்றார்கள். மற்றும் சிலப் பெற்றோர்கள் உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க விரும்பும்போது ஞானக்காரியங்களில் ஆர்வம் காட்டுவதில்லை இதனால்தான் பிள்ளைகள் வாழ்க்கையில் திசைதிரும்பி சொல்கின்றார்கள். இறைவாக்கினர் சிமியோனும், பானுவேலின் மகளாகிய அன்னா என்பவரும் குழந்தை இயேசுவைப்பற்றி பாராட்டியபோது மகிழ்ந்திருப்பார்கள்தானே. உமது மகன் பிற இனத்தாருக்கு ஒளியாக இருப்பார் என்று ஆசி கூறிய போதும், அன்னா அவரைப் பார்த்ததும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தும், எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லாரிடமும் அவர்களுடைய குழந்தையைப்பற்றி கூறியபோதும் எவ்வளவு ஆனந்தம் கொண்டிருப்பார்கள். இன்று நம்முடைய குழந்தைகளைக் கண்டு இவ்வாறு கூறுகின்றார்களா? சிந்திப்போம். உலகில்வாழும அனைத்து பெற்றோர்களும் இறைநம்பிக்கையில் ஆழமாக வளர்ந்து அவர்களுடைய இறைஅனுபவத்தை தங்களுடைய குழந்தைகளுடன் பகிர்ந்து அவர்களுடைய வாழ்க்கையை இறைவார்த்தையில் கட்டி எழுப்ப அவர்களுக்கு என்றும் உற்றத் துணையாக இருக்க வேண்டுமென்று ஞாயிறு திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம். உலகில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இறைவன் வாக்குறுதி தந்து, ஓர் அழியாத உடன்படிக்கையை செய்துள்ளார். அவர் வாக்குமாறாத இறைவன் அவரை முழுமையாக நம்பி விசுவசித்து அவர் பாதையில் பயணிக்கும்போது வெற்றி உண்டு என்பது நிச்சயம். இன்று அழியாத உறவில் வாழக்கூடிய குடும்பங்கள் எத்தனையோ பிளவுபட்டு வாழ்வதை அறிந்து இருக்கின்றோம். அவர்களுடைய குடும்பத்தில் அன்பு அமைதி மகிழ்ச்சி ஒற்றுமை மீண்டும் பிறந்திட அமைதியின் அரசரிடம் மன்றாடுவோம். அனைத்து இளம் உள்ளங்கள் இறைஉறவிலும் இறைவார்த்தையிலும் தங்களுடைய வாழ்வை கட்டி எழுப்பி இறைமகன் இயேசு வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தது போல் இவர்களும் வாழ்வதற்கு உதவிக்கரம் கொடுப்போம்.

இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். லூக்கா 2:52