இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

கிறிஸ்து பிறப்பு

ஒளியான இறைவன்

முதலாம் வாசகம் : எசாயா 52:7-10
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 1: 1-6
நற்செய்தி வாசகம் : யோவான் 1: 1-18

ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. இன்று ஒளியான இறைவன் உலகில் வாழும்போது ஏன் நானும் நீங்களும் இன்று இருளில் நடமாட வேண்டும்? நானே உலகின் ஒளி, என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார், வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். யோவான்: 8;12 நம்மிடம் வாழ்வுக்கு வழிகாட்டும் ஔி உண்டு என்று நம்பும் நானும் நீங்களும் ஏன் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்? காலம் நெருங்கி வந்துவிட்டது. விழிப்போடு முன்மதியோடு வாழ்வுக்கு வழிகாட்டும் இறைமகன் இயேசுவை பின் செல்வோம். கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம். உண்மைக்கேற்ப வாழாதவராவோம். 1யோவான் 1:5a-6 இறைவனிடம் இருளில்லை ஆனால் அவரை அன்பு செய்யும் நானும் நீங்களும் ஏன் இருளான பாதையில் நடக்க வேண்டும்? இறைமகன் நமது உள்ளத்தில் வாழ்வதற்கு தடையாய் உள்ள முடிச்சுக்களை கழற்ற ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக அவருடன் முழுமையாக ஒப்புரவாகுவோம். எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இதோ ! இருள் பூவுலகை மூடும், காரிருள் மக்களினங்களைக் கவ்வும், ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார், அவரது மாட்சி உன்மீது தோன்றும். எசாயா 60:1-2 உலகு அவரால் உண்டானது ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை…… உண்மைதானே! இன்று உலகையும் அதில் வாழ்வோரையும் இருளானவன் கவ்விக் கொண்டுதானே உள்ளான். அமைதி அமைதி என்று கூறுகின்றோம் இன்று எங்கே உள்ளது அமைதி? கலவரம், வன்முறை, பயங்கரவாதம்,யுத்தம், நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி, கொடூரமான கொலைகள், பாலியில் தொல்லைகள், போதைப் பொருட்கள், இறைபயம் இல்லாத உலகம், உண்மையைக் கூற பயப்படும் மனிதன், பொய்சாட்சிக்கும், அநீதிக்கும் துணைபோகும் மனிதன், மனிதால் எல்லாம் முடியும் என்ற தற்பெருமை, கோபம், பழிவாங்குதல், இறைநம்பிக்கை, இறைவிசுவாசம், குறைந்து போகின்ற காலக்கட்டம், பணத்தால் மனிதனையும் விலைக்கு வாங்கும் கொடுமைகள் போன்றவை மனிதனை பயத்திலும், கவலையிலும் இருளான உலகில் வாழ்கின்ற அவலம். ஒரு நாளும் இருள் அதன்மேல் வெற்றி கொள்ளாது என்று இறைவார்த்தை கூறுகின்றது. ஏன்னெறால் ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது. அவருடைய திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர். அவருடைய காலத்தில் அமைதி நிலவும். அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது. இறைமகன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் இந்நாளில் அவருடைய வார்த்தையின்படி வாழ்வதற்கு வார்த்தை மனுவான இறைவனிடம் வேண்டுவோம். அமைதியான தூய்மை நிறைந்த குழந்தையின் உள்ளத்தை நம் அனைவருக்கும் தரவேண்டும் என்றும். இனிவரும் நாட்களில் உண்மைக்காக மட்டும் துணை போவோம் என்று உறுதி எடுப்போம். “அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் என்ற வார்த்தையினை வாழ்வாக்க வேண்டுமென்று இறைமகன் இயேசுவிடம் தாழ்பணிந்து பயனுள்ள பணியாள்களைத் தந்திட மன்றாடுவோம் இப்புனித நாளில். தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள். உரோமையர் :12;21