ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்

ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கி இருப்போர் பேறுபெற்றோர்.

சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2, 21-24
லூக்கா 2:41-52

இன்று திருச்சபை புனித அருளப்பரின் திருநாளைக் கொண்டாடுகிறது. இயேசுவின் அன்புச் சீடரான இவர் இயேசுவை உளமார அன்பு செய்தவர். இறுதி உணவு நேரத்தில் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்து அவரது இதயத் துடிப்போடு கலந்தவர். கல்வாரி பயண முடிவில் அன்னை மரியாளின் அருகில் இருந்தவர். கல்லறை நோக்கி வேகமாகச் சென்ற இவர் முதலில் நுழையும் உரிமையை பேதுருவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ஆனால் பேதுரு குழம்பிய போதும் அருளப்பர் கண்டார் நம்பினார் என சொல்கிறது. அவருடைய நற்செய்தி இயேசுவின் உடலை கடவுள் வாழும் நற்செய்தி என சொல்கிறது. அருளப்பர் போன்று ஆழமான விசுவாசிகள் உயிர்ப்பின் மறை பொருளை இலகுவாக புரிந்து கொள்வர்.

இன்றைய வாசகங்களில் இறைவன் மேல் கொண்ட நம்பிக்கை நாளாந்த வாழ்வில் பல நன்மைகளையும் மாற்றங்களையும் கொண்டு வருகின்றது என்பது பற்றி சொல்கிறது. அன்னா கரு உற்று மகனுக்கு சாமுவேல் எனப் பெயர் இட்டது நான் கேட்டதை இறைவன் தந்தார் என்பதை குறிக்கிறது. அதே போல இயேசு சொன்னபடி ஒருவர் ஒருவர் மேலே அன்பு கொண்டு அவர் வழி நடப்பவர் தூய ஆவி அருளால் நல்ல வாழ்வைப் பெறுவார் என எடுத்துச் சொல்கிறது.

இன்றைய நற்செய்தியில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான புரிந்து உணர்வு சித்தரிக்கப்படுகிறது. ''பின்பு இயேசு தம் பெற்றோர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்'' (லூக்கா 2:51) இயேசு தம் தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார். அதாவது, தந்தையின் விருப்பப்படி நடப்பதே இயேசுவின் வாழ்க்கை முறையாக இருந்தது. ஏனெனில் அவர் தந்தையோடு எந்நாளும் இணைந்திருந்தார். இயேசு தம் பெற்றோராகிய யோசேப்பு, மரியா ஆகிய இருவருக்கும் கூட ''பணிந்திருந்தார்'' என்பதன் பொருள் என்ன? முதன்முதலில் இங்கே நாம் காண்பது இயேசுவின் மனிதப் பண்பு. அவர் கடவுளின் மகனாக இருந்த போதிலும் மனிதருள் ஒருவராக மாறினார்; மனிதப் பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார். எனவே இயேசு தம் தாய் மரியாவுக்கும், வளர்ப்புத் தந்தை யோசேப்புக்கும் பணிந்திருந்தார். இந்த வெளி நாட்டு வாழ்க்கையில் குறிப்பாக பெற்றோர் பிள்ளைகளை மதித்து அவர்களுடைய கருத்துக்கு மதிப்புக் கொடுப்பதும் அவசியமானது. இரு தரப்பும் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாக மன மகிழ்ச்சி அடையலாம். இறைவனின் திட்டத்தை உணர்ந்து ஏற்று அதன் வழி நடப்பதன் மூலம் மனச் சாந்தி அடையலாம்.