இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக் காலம் 2 ஆம் ஞாயிறு

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்

முதல் வாசகம் : எசாயா 40:1-5, 9-11
இரண்டாம் வாசகம் : 2 பேதுரு 3: 8-14
நற்செய்தி வாசகம் :மாற்கு 1:1-8

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் என்ற மையக்கருத்தை இன்றைய இறைவாசகங்கள் வழியாக இறைவன் நம்மிடம் கேட்கின்றார். நல்லதையே விரும்பும் ஆண்டவர் நம்மிடமும் நல்லதையே விரும்புகின்றார். பல நேரங்களில் நமது வாழ்வும் ஆன்மாவும் உலக சுகங்களைக் கண்டு மயங்கி இறைவனுக்கு எதிராக பாங்களில் துவண்டுப் பாலை நிலமாக வறண்டுபோய் இறைவனுடைய அருளை இழந்து காணப்படலாம். ஆகையால்தான் நமது தாய் திருச்சபை தவக்காலத்தையும், திருவருகைக் காலத்தையும் நமக்கு கொடையாக தருகின்றது. இறைவனின் அருள் கொடைகளால் நிறைந்து நமது வாழ்க்கையாகிய பாலைநிலம் அனுதினம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய விருப்பம். நமது ஆன்மாவின் உள்ளத்தின் ஆழத்தில் இறைவன் வாழும் புனித நிலம் என்றும் தூய்மையாக இருந்தால்தான், இறைவனுடைய ஆவியானவர் நம்மில் குடிகொண்டு நன்மைகள் செய்,து நல்லவர்களாக வாழவும் வழிநடத்துவார். நல்லவர்கள் உலகில் வாழும்போது நற்செயல்கள் மட்டும் செய்ய இறைவன் அவர்களை அனுமதிப்பார்.

திருத்தூதர் யோவான் நற்செய்தி வாக்கு மனிதராதல் என்ற தலைப்பில் அவர் இவ்வாறு கூறுகின்றார், “அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” என்று. (யோவான்1:4-5) நானும் நீங்களும் ஒளியின் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால் அமைதி நிறைந்த சூழ்நிலைில் இறைவனுடன் தூய்மையான உறவு கொண்டு நன்கு ஆய்வு செய்து நல்ல நிலத்திற்கு எதிராக உள்ள அனைத்து பாவம் என்னும் களைகளைப் படுங்கி எடுத்துவிட்டு அவருடைய வார்த்தையால் நம்மை நிரப்ப வேண்டும். மேலும் அவருடைய குரலுக்கும் செவி கொடுக்க வேண்டும். இறைவாக்கினர் எசாயா எழுதிய இன்றைய வாசகமும், திருத்தூதர் மாற்கு எழுதிய நற்செய்தியும் ஒரே கருத்தினை நம்முன் வைக்கின்றது. பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள், பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும் கோணலானது நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும் என்று.

இறைவனின் தூதராகிய திருமுழுக்கு யோவானின் சொற்களும் ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்ரயேல் மக்களிடம் முழுங்குகின்றார். இவர் உண்மையை உரைப்பதற்கு தயங்கவில்லை. அஞ்சா உள்ளத்துடன் நற்செய்தியை பறைசரற்றுகின்றார். தன்னிடம் திழுமுழுக்குப் பெற வந்த சதுசேயர்களிடம் கடுமையாக சாடுகின்றார் “விரியன் பாம்பு குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொனன்வர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் என்று யாதொரு தயக்கமின்றி அவர்களை நோக்கி கூறுகின்றார். இன்று நானும் நீங்களும் உண்மையை தயக்கம் இன்றி எடுத்துரைக்க தயங்குகின்றோம். இன்று உண்மையை எடுத்தரைப்பவர்கள் தனித்துவிடப்படுகின்றார்கள். உண்மைக்கு மாறாக செயல்படுபவர்களின் கூட்டத்திற்கு துணைபோகும் உலகத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றோம். உண்மையைச் சொல்பவர்கள் மனிதரால் புறம் தள்ளி, இல்லாது பொல்லாது சொல்லி எத்தனை பேர் இன்று தண்டிக்ப்படுகின்றார்கள். இன்று எத்தனை பேர் நீதிமன்றத்தில கைகூலி வாங்கி கொண்டு தண்டிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் வாழ்கின்றார்கள். இன்று இறைவனுக்கு பயம் இன்றி உண்மைக்கு எதிராக செயல்படும் காரியங்கள் ஆயிரம் ஆயிரம் உண்மைதானே? அவற்றைப்பற்றி எடுத்துக் கூறினால் அவன் பொய்யன், கத்தியால் வெட்டவும் குத்தவும் தயங்குவதில்லை, கொலை செய்யக்கூட தயங்காத மனித சமூகத்தில் வாழந்து வருகின்றோம். உண்மையானவர்களின் கண்ணீரும் அழுகுரலும் ஆண்டவரிடம் எட்டியிருக்கும் அல்லவா? தாழ்மையுடன் உண்மையை எடுத்துரைக்க முயற்சி செய்வோம்.

மறையுரை மொட்டுகள் என்ற நூலில் ஆசியர் கூறுகின்றார், உலகம் திருந்த வேண்டுமென்றால் மக்கள் திருந்த வேண்டும். மக்கள் மனம் மாற வேண்டும். திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டவர். ஆனாலும் அவரிடத்தில் எளிமையும், தாழ்மையும் மிகவும் காணப்பட்டது. அதனால்தான் அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது ‘ என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்கு பின் வருகிறார். குனிந்து அவருடைய மியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகதியில்லை என்று கூறுகின்றார். இந்த வாரம் இறைவனுக்கு நமது வாழ்க்கைப் பாதையை சீராக்கவோம். பள்ளத்தாக்கில் இருக்கும் பாவங்களை வேரோடு களைந்து விடுவோம். கோணலான வழியை நேராக்குவோம். கரடு முரடான குணங்களை சமதளமாக்குவோம்.நாம் யாரும் மறந்துவிடக்கூடாது, ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆணியரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. இறைவன் யாரும் அழிந்த போகாமல் எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகின்றார். மனம் மாற்றம் பெற்று இறை உறவில் வளர்வோம். இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே, மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். திருப்பாடல் 51:6