இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக் காலம் 1ஆம் வாரம்

நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்

முதல்வாசகம் - எசாயா 63: 16b-17, 64: 1, 3b-8
இரண்டாம் வாசகம் - 1 கொரிந்தியர் 1: 3-9
நற்செய்தி வாசகம் - மாற்கு 13: 33-37

திருவகைக் காலம் முதலாம் வாரும். ஆண்டின் இறுதி நாட்களை எதிர்நோக்கி பயணக்கின்ற நமக்கு திருவருகைக் காலத்தை இறைவன் கொடையாக கொடுத்து அவருடைய வருகைக்காக ஆவலுடன் தயார் செய்ய அழைக்கின்றார். அவருடைய வருகைக்காக கவனமாயிருக்கவும் விழிப்போடு இருக்கவும், அவருடைய வருகை எப்போது, எந்நேரம் என்பது நமக்கு யாருக்குமே தெரியாது என்று அறிவிக்கின்றார். நம்முடைய மரணமும் அப்படித்தானே? உடல் நலம் செல்வம் முதலியவைகளுடன் நன்றாக சந்தோசத்துடன் வாழ்ந்தவர்கள் ஒருநொடியில் உலகத்தில் இல்லை என்பதை அறிந்துள்ளோம். கடந்த மாதங்களில் பல நாடுகளில் ஏற்பட்ட சூறாவளிப் புயல், நிலநடுக்கம் அனைத்தும் மனிதர்கள் எதிர்பாராத சமயத்தில் நடந்தது. இவைகள் அனைத்தும் இறைவன் நமக்கு தரும் ஓர் அறிங்குறியும், எச்சரிக்கையும் எனலாம். இறைவனின் நாள் எப்போது வரும் என்று மனிதர்களாகிய நமக்கு தெரியாது ஆகையால் நுன்மதி உள்ள கன்னியர்கள் போல் தயார் நிலையில் இருக்க வேண்டும். இன்றும் ஆண்டவர் ஒவ்வொரு நொடிப் பொழுதும் வந்து கொண்டேதான் இருக்கின்றார். இன்று நானும் நீங்களும் அவரை எதிர்கொள்ள தயாராக உள்ளோமா? அவரை எதிர் கொள்ளுவதற்கு முன்பு நமது வாழ்க்கை பாவம் இன்றி இருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பாவங்களை எண்ணி இறைவனை நோக்கி குரல் எழுப்புகின்றனர் . ஆண்டவரே நாங்கள் அனைவரும் தீட்டுப் பட்டவரைப் போல் உள்ளோம்? அன்றுபோல் இன்றும் நாம் அனைவரும் இறைவனுக்கு எதிராக பாவம் செய்து அருள் நிறைந்த வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் உணர்ந்து கூறியதுபோல் இன்று நாமும் மனம் திரும்பி ஆண்டவரே நீரே எங்கள் தந்தை நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன் நாங்கள் அனைவரும் உம் கைவேளைப்பாடுகளே என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து மனம் மாற்றத்தின் காலமாகிய திருவருகை காலத்தை நல்ல முறையில் பயன் படுத்தி அருள் வாழ்வை இலவசமாக பெறுவோம். இறைவனாகிய குயவன் கையில் நமமை முழுமையாக கொடுத்தால் அவருடைய விருப்பம் போல் நம்மை வடிவமைத்து புதிய படைப்பாக மாற்றுவார். இறைவன் கையில் கொடுத்து பார்ப்போமே?

இரண்டாம வாசகத்தில் திருத்தூதர் பவுல் நம் அனைவரையும் நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அமைதியும் அருளும் உரித்தாகுக என்று வாழத்துகின்றார். கிறிஸ்துவர்களாகிய நாம் அனைவரும் அருட்சாதனங்களின் வழியாக கிறிஸ்துவோடு ஒன்றாக இணைக்கப்பெற்று சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வந்தர்கள் ஆகியுள்ளோம் என்பது உண்மை. இறைவன் தன்னுடைய அன்பு மகன் வழியாக கொடுத்துள்ள ஆன்மீகச் செல்வங்களை எவ்வாறு பயன் படுத்துகின்றோம் என்று சிந்திப்போம். நம்முடைய வீடுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் தொலைக் காட்சியோ? கைகளில் கேடயமாக வைத்துள்ள நமது கைபேசிகளோ? இரவும் பகலும் அயராமல் உழைத்து சம்பாதிக்கும் பணமோ, செல்வமோ ? நம்முடைய பட்டம், பதவி, உலக செல்வாக்கு அனைத்தும் நம்மை இறைவனிடம் கொண்டுப் போகப் போவதில்லை? இவ்வுலகில் வாழும் மட்டும்தான் அதை உபயோகிக் முடியும். ஆனால் நம்முடைய நல்ல மனம், நற்குணங்களின் வழியாக செய்யும் நற்செயல்கள் மற்றும் ஆண்டவருடைய திருச்சட்டங்களின்படியும், அவருடைய வார்த்தைகளின்படியும் வாழ்ந்து அவரில் அன்றாட வளர்ந்து மாசு இல்லாமல் இருக்கும் போது அவருடைய வருகையை துணிவுடன் எதிர் கொள்ளலாம். இறைமகன் இயேசு பேதுருவிடம் கூறகின்றார் மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன ‘ (மத்தேயு 16:26) சிந்திப்போமா? நமது ஆன்மிகப் பயணம் முன்னோக்கி உயர்ந்து கொண்டே போகின்றதா? அல்லது பின்னே நோக்கி சரிந்து கொண்டே போகின்றதா? இஸ்ரயேல் மக்கள் இறைவன்முன் கதறி அழுதது போல் மனம் வருந்தும் காலமாகிய அருள் நிறைந்த நாட்களில் விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி இறைவா, நாங்கள் பாவம் செய்தோம், நாங்கள் அனைவரும் ஆன்ம வாழ்வில் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் வாழ்க்கையை மாற்றும், நீர் வாழும் எங்கள் உள்ளத்தை கறைபடியாத உள்ளமாக மாற்றும் என்று வேண்டுவோம். அவர் கொடுத்துள்ள கடமைகளை நல்மனத்துடன் செய்வதற்கு முயற்சிப்போம்.

நாங்கள் களிமண், நீர் குயவன், நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே என்ற இறைவார்த்தையை ஆழமாக இந்த நாட்களில் சிந்திப்போம். நமது வாழ்க்கையின் பாதைகளைச் செம்மையாக்குவோம். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்னமையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர். 1 கொரிந்தியர் 1:5