இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

கிறிஸ்து அரசர் பெருவிழா

காணாமல் போனதைத் தேடுவேன்

முதலாம் வாசகம் : எசாயா 34: 11-12, 15-17
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 15: 20-26, 28
நற்செய்தி வாசகம் : மத்தேயு 25: 31-46

ஆண்டின் பொதுக் காலங்களை நிறைவு செய்து இன்று நமது தாய் திருச்சபை கிறிஸ்து அரசர் பெருவிழைவைக் கொண்டுவதற்கு அழைப்புவிடுக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலக மீட்பரும் அரசருமாகிய நமது ஆண்டவரின் பெருவிழாவைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம். நம்முடைய ஆண்டவரும் மீட்பருமாகிய இறைமகன் இயேசு கிறிஸ்து படைப்புக்களிலே ஒரு வித்தியாசமான அரசர். அவருடைய நற்பண்புகளையும், பணிகளையும்பற்றியும் இன்றைய வாசகங்கள் நமக்கு கற்றுத் தருகின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடிகளார் முதல் கொரிந்தியர்க்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார் “அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர், ஆகிய அனைவரும் அழித்துவிட்டு, தந்தையாகி கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார் என்று. (1கொரி15:24) ஆண்டவருடைய வருகைக்குப்பின் அவருடைய ஆட்சி நிச்சயம் உண்டு என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும். அவருடன் இணைந்து வாழ்வதற்கு நம்மை ஆயத்தம் செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும். அப்பொழுதுதான் அவர் நம்மிடம் கூறமுடியும் ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே வாருங்கள்: உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்ற அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள் என்று. எந்த வாழ்வை தேர்ந்தெடுக்கப் போகின்றோம்? இன்று நம்முடைய சொல்லும் செயலும், வாழ்வும் இறைவனுக்கும், உறவுகளுக்கும் ஏற்புடையதாக உள்ளதா என்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இறைமகன் இயேசு மனிதனாக வாழ்ந்த போது அவர் தேடிச் சென்று பணியாற்றியது ஏழை, எளியவர், பாவிகள், சமுதயாத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், நோயுற்றோர், ஆகிய அனைவர்மீதும் இரக்கம் கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார். நானே என் மந்தையைச் தேடிச் சென்று பேணிக் காப்பேன் என்று வாக்குறுதி தருகின்றார். நல்ல மேய்ப்பனாகிய நமது ஆண்டவர் கூறுவதைக் கவணிக்க வேண்டியது மிகவும் அவசியம். நமது மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன் என்று. இறைவாக்கினர் எசாயாவின் வழியாக இறைவன் முன்குறித்தே கூறுகின்றார் “வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள்ள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது. தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலை நாட்டுவார். “ என்று.( எசாயா 9:6). காணாமல் போனதைத் தேடுகின்றவர் தான் நமது கிறிஸ்து அரசர்.

கிறிஸ்து அரசர் என்று அழைப்பவர் எளியவரின் தோற்றத்தைக் கொண்டிருந்தார், அவர் பிறந்த இடம் மாட்டுத் தொழுவம், அவர் தன்னுடைய பெற்றோர்களுடன் அகதியாக எகிப்து நாட்டிற்கு சென்றவர். அவர் தங்குவதற்கும் தலைசாய்க்கவும் வீடு இல்லை. பணத்துக்காக அவரைக் காட்டிக் கொடுத்த சீடர். மூன்று முறை அவரைத் தெரியாது என்று மறுதலித்த சீடர். அவர் இரவும் பகலும் மக்களுக்கென்று வாழ்ந்தவருக்கு கிடைத்த பரிசு சிலுவை மரணம். கள்வர்களின் இடையில் மரண தண்டனையை ஏற்றவர். முள்முடியும், செந்நிற மேலுடையும் அணிந்து அரசர். ஓசன்னா ஓசான்னா தாவீதின் அரசர் என்று பாடிய மக்கள் கூட்டம், ஒழிக! ஒழிக! சிலுவைியல் அறையும் என்று ஓலமிட்டனர். ஆனால் இறைவன் பிலாத்தின் வார்த்தையின் வழியாக பல முறை அரசன் என்று சொல்லும்படி செய்கின்றார். நீ யூதரின் அரசனா? என்ற கேள்விக்கு அவர் இரண்டுமுறை கூறும் பதில் எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று பதில் சொன்னவர். உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் அரசன். மக்களிடம் ஒப்புவித்த போது இதோ உங்கள் அரசன் என்று பிலாத்து கூறுவதுடன், எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் யூதரின் அரசன் என்ற அறிக்கையை எழுதும்படி கட்டளையிட்டார். யோவான் நற்செயதி 18-19 அதிகாரங்கள் கிறிஸ்து அரசர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

இன்று உலகநாட்டுத் தலைவர்கள் ஞானத்தில் செயல்பட உலக அரசராகிய கிறிஸ்துவிடம் மன்றாடுவோம். சுயநலம் மறைந்து நீதியுடன் ஆட்சி செய்ய தலைவர்கள் வேண்டுமென்று உண்மை அரசரிடம் மன்றாடுவோம். இன்று பலர் பசியோடும், தாகத்தோடும், ஆடையின்றியும், அன்னியனாயும், நோயுற்றும், சிறயைிலும், அடிமைகளாய் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இன்று எவ்வாறு உதவப்போகின்றோம் என்று சிந்திப்போம். அன்பின் ஆட்சியை இம்மண்ணில் விதைத்துச் சென்ற உண்மை அரசராகிய கிறிஸ்துவின் நற்பண்புகளையும் குணங்களையும் பெற்று அவரைப் போல் பணிபுரிய முயற்சி செய்வோம். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர். யோவான் 18: 37b