இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

உன் நேர்மை உனக்கு முன் செல்லும், ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் செல்லும்

எசாயா 58:7-10
முதல் கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16

கூறுவது ஒளியின் நற்செயல்கள் வழியாக பெறும் நன்மைகளைப்பற்றியும், அதன் வழியாக இறைவனுக்கும், அவர் நமக்குத் தந்திருக்கும் மனித உறவுகளுக்கும் உப்பாகவும் ஒளியாகவும் வாழ வேண்டும் என்று அழைக்கின்றார். இறைவாக்கினர் எசயாவின் வழியாகவும், நற்செய்தியின் வழியாகவும் ஒளியின் செயல்கள், ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகின்றார். பசியாய் உள்ளவர்களோடு உணவைப் பகிர்ந்து கொள்ளவும், தங்குவதற்கு இடமில்லா வறியோரை நம்முடைய இல்லத்திற்கு அழைத்து வரவும், உடையற்றோறைக் காணும்போது அவர்களுக்கு உடுக்க கொடுக்கவும், நம்முடைய சொந்த இனத்தாருக்கு நம்மை மறைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் உண்மையான நோன்பு என்று எடுத்துரைக்கின்றார். இறைவன் கூறும் ஒளியின் நற்செயல்களைக் கடைப்பிடித்தால் நம்முடைய வாழ்வின் ஒளி விடியல் போலும், நலமான வாழ்வு நம்மில் துளிர்க்கும். உன் நேர்மை உனக்கு முன் செல்லும், ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும் என்று உறுதி தருகின்றார். ஏராளமானோர் பிறருக்காக தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து வாழ்வில் சாதனை படைத்துள்ளார்கள். அவர்களைப்போல் நம்மாலும் இன்றும் வாழ முடியும். இன்று மேலைநாடுகளில் வாழும் நம்மில் சிலருக்கு பசி என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் நமது தாய் நாட்டில் இன்னும் எத்தனையோ ஏழை எளியவர்கள் பசியோடும் வறுமையோடும் இன்னும் வாழ்கின்றார்கள்தானே? எல்லா வதசிகளும் சுகங்களும் நிறைந்து காணப்படும் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் நமது தாய் நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் சொந்த வீடுகள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்தானே? புத்தம் புதிய லேட்டஸ்ட் உடைகளை வாங்கி உடுத்திக் கொண்டிருக்கலாம், நாம் ஒருமுறை உபயோகித்த பழைய உடைகளை வேண்டாம் என்று தூக்கி எரியலாம், ஒரு விழாவிற்கு உடுத்திய உடையை, அடுத்துவரும் விழாவிற்கு உடுக்க வேண்டாம் என்று நினைத்து புதிய உடைகளை வாங்கி உடுத்துகின்றோம். ஆனால் இன்னும் எத்தனையோ பேர் புதிய உடை வாங்கிப் போடுவதற்கு முடியாமல் இருக்கின்றார்கள்தானே? நாம் இன்று முதலிடம் தருவது எதற்கு? ஒருநாள் அழியக்கூடிய பொருளுக்கா? நிலைவாழ்வு தரும் ஆன்மீக வாழ்விற்கா? இவைகள் அனுதின வாழ்விற்குத் தேவைதான். மனிதர்அப்பத்தின◌ால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்று இறைவார்த்தை கூறுகின்றது. நம்மை நாமே ஆய்வு செய்வோம். இன்று உலக நாடுகளில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதானே உள்ளது. அகதிமுகாமில் கடும் குளிரிலும், உண்பதற்கு போதாத உணவும், உடுப்பதற்கு போதாத உடைகள் இல்லாமல் துன்புறுவதை சமூக ஊடகங்களின் வழியாக காண்கின்றோம். இறைவன் தரும் அறிவுரை என்ன? அவர்களின் தேவைகளை அறிந்து நம்மால் முடிந்த உதவியைச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்றுதானே? இறைவன் நம்மிடம் விரும்புவது இரக்கத்தையே. இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் என்று இறைமகன் இயேசு கூறிய வார்த்தைக்கு செவிமடுத்து அதை செயல்படுத்துவோம்.

நாம் வாழும் சமுதாயத்தில் எத்தனை பேர் இன்று தன்னுடைய ஆன்மீக வளர்ச்சியில் பசியோடும் தாகத்தோடும் உள்ளார்கள். அப்படிபட்டவர்களுக்கு உதவி செய்ய இறைவன் இன்று நம்மை அழைக்கின்றார். சிலர் நம்மை ஏற்றுக் கொள்ளாமல் பின்வாங்கிப் போகலாம். அப்படி இருப்பினும் மனம் தளராமல் முன் செல்வோம். மேலும் நவீன உலகத்திற்கும், புதிய காலாசாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய ஆன்மீக வாழ்வை மனிதன் இழந்து கொண்டு இருக்கும் நிலையை காண்கின்றோம். இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று இறைவன் கற்றுத்தருகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நம் அனைவரையும் பார்த்து நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். இறைமகன் இயேசு கிறிஸ்து உண்மையான ஒளி. அவர் எவ்வாறு தனது உயிரை மனித குலத்திற்காக சிலுவையில் கொடுத்து உலகிற்கு ஒளியாக மாறினாரோ அதேபோல் நாமும் பிறருக்கு வாழ்வு தரும் ஒளியாக விளங்க வேண்டும் என்று விரும்புகின்றார். உப்பு தன்னை முழுவதுமாக கரைத்துக்கொண்டு, தன்னையே முழுவதுமாக இழந்து நாம் உண்ணும் உணவிற்கு சுவையைத் தருவதுபோல் நாமும் நம்முடைய நற்செயல்களாலும், நற்பண்புகளாலும் சுவை தரக்கூடிய நல்ல மனம் உடைர்களாக வாழ முயற்சிக்க வேண்டும். இறைமகன் இயேசுவுடன் அனுதினம் உறவாடி அவருடைய காலடி அமர்ந்து அவருடைய ஞானத்தின் கொடைகளைப் பெற்று அவரைப்போல் பிறருக்கு வாழ்வு தரும் ஒளியாகவும், குடும்பத்தில், வேலை செய்யும் பணித்தளத்தில், அலுவலங்களில், நாம் மற்றவர்களுடன் உரையாடும் போது பயன்படுத்துகின்ற சொற்களும், செயல்களும் சுவைதரக் கூடியதாக இருக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம் "உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிடு ,சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றார். எத்தனைமுறை பிறருடைய மனநிலையை புரிந்து கொள்ளாமல் தீர்ப்பிடுகின்றோம். நம்முடைய சமூக வாழ்வும் , ஆன்மீக வாழ்வும் ஒன்றைஒன்று ஒத்துப்போகின்றதா என்று ஆய்வு செய்ய வேண்டும். நம்முடைய செபம், நோன்பு, அறச்செயல்கள் அனைத்தும் இறைவனின் விழுமியங்களையும், நற்குணங்களையும், கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இருள் நடுவே நம்மால் ஒளிர முடியும். திருத்தூதர் புவல் மிகத்தாழ்மையுடன் சொல்வதைக் கவணிப்போம். அவர் மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர வேறு எதையும் அறிவதற்கு அவர் விரும்ப வில்லை. மேலும் நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே என்று ஆணித்தரமாக கூறுகின்றார். ஞாயிறு திருப்பலியில் பங்கேற்கும்போது உயிருடன் எழுந்துவரும் இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் நாம் அனைவரும் உள்ளத்தில் உப்பின் தன்மையும், ஒளிரும் ஒளியின் தன்மையும் கொண்டு என்றும் தூய்மை நிறைந்த உள்ளத்துடன் வாழ்வதற்கு ஒளியின் இறைவனிடம் மன்றாடி அர்த்தமுள்ள கிறிஸ்துவ வாழ்வை வாழ முயற்சி எடுப்போம். ஒளியின் இறைவனை உலகிற்குத் தந்த தூய அன்னையே உமது மகன் ஒளியின் பாதையில் பயணித்தது போல் நாங்களும் பயணிக்க எங்களுக்காக மன்றாடும்.

அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர், அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். திருப்பாடல்:112:1