இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

பாலை நிலத்தில் குரல் ஒன்று முழுங்குகின்றது

எசாயா 11:1-10
உரோமையர் 15:4-9
மத்தேயு 3:1-12

திருவருகைக்ககாலம் இரண்டாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்களின் வழியாக இறைவன் நம்மிடம் விரும்புவது என்னெவென்றால் மனம் மாற்றம் பெற்று, நற்கனிகள் கொடுத்து நம்பிக்கையின் பாதையில் எதிர்நோக்கிச் செல்ல அழைக்கின்றது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மெசியாவின் நற்பண்புகளைப்பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றார் ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும், ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு, நேர்மையோடு நீதி வழங்குவது, நேர்மை அவருக்கு அரைக்கச்சை, உண்மை அவருக்கு இடைக்கச்சை போன்ற மெசியாவின் நற்பண்புகளைப்பற்றி மிகத்தெளிவாக கூறுகின்றார். நம்பிக்கையின் மகிழ்ச்சியின் காலத்தில் அவருடைய நற்பண்புகளால் அனுதினம் வளர்ந்து, நற்கனிதருவதற்கு இறைவன் மீண்டும் ஓர் வாய்ப்பை அனைவருக்கும் தந்துள்ளார். மேலும் இறைவாக்கினர் எசாயா இங்கே விலங்குகளை உருவகப்படுத்துகின்றார். ஓநாயின் குணம் வேறு, செம்மறியாட்டின் குணம் வேறு, கன்று குட்டியின் குணம் வேறு, சிங்கக்குட்டியின் குணம் வேறு, கொழுத்த காளையின் குணம் வேறு, கரடியின் குணம் வேறு, பசுவின் குணம் வேறு மேலும் சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும், விரியன் பாம்பு, கட்டுவிரியன் அனைத்து விலங்குகளின் குணங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானது என்பதை அறிவோம் ஆனால் ஆண்டவரின் நாளில் இந்த விலங்குகள் தன்னுடைய குணங்களை மாற்றிக் கொண்டு மற்றவைகளுடன் அமைதியுடன் வாழ்வதையும், ஒன்றுக்கொண்டு தன்னுடைய வேறுபட்ட குணங்களை விட்டுக் கொடுத்து ஒன்றோடு ஒன்று உறவாடிக் கொண்டு அமைதியாக இருப்பதையும் இறைவாக்கினர் நன்றாக விளக்குகின்றார். ஆண்டவரின் நாளில் விலங்குகள் எவ்வாறு தன்னுடைய குணங்களை மற்ற விலங்குகளுக்காக விட்டு கொடுத்து அமைதியில் வாழ்வதுபோல் நாமும் மகிழ்ச்சியின் காலத்தில் நமது நற்குணங்களைக் கொண்டு நமது செயல்களின் வழியாக அமைதியும் மகிழ்ச்சியும் நம்மிடம் நிலவிட முயற்சி செய்ய வேண்டும். இம்மானுவேலாகிய இறைவனின் குணங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. அவைகளைக் நமது செயலில் உபயோகித்து அவற்றின் வழியாக நற்கனிகளை கொடுக்க முயற்சிக்க வேண்டும். ஓநாய், சிங்கம், கொழுத்த காளை, கரடி, விரியன் பாம்பு, கட்டுவிரியன் போன்ற விலங்குகளின் குணங்கள் நம் ஒவ்வொருவரிலும் உண்டு பல நேரத்தில் நமது சொல், செயல்களின் மூலம் அவற்றை வெளிப்படுத்த பலவிதமான சூழ்நிலைகள் ஏறப்பட நேரிடும். அப்படிபட்ட நேரங்களில் கண்ணும் கருத்துமாய் செயல்படவது நன்மை கிடைக்கும். மிகவும் சிரமாக இருக்கும் தன்னுடைய நடை முறைகளை மாற்றிக் கொள்வதற்கு. ஏன் நம்பிக்கையின் மகிழ்ச்சியின் காலமாகிய திருவருகை காலத்தில் அவற்றை வேரோடு வெட்டி எடுத்து நெருப்பில் களையக்கூடாது? மாறாக செம்மறி, பசு, குழ்நதையின் குணங்களாகிய அமைதி, மென்மை. தாழ்மை, களங்கமற்ற எண்ணம் போன்ற நற்பண்புகளை அணிகலன்களாக அணிவித்து அலங்கரித்து, ஏன் நாம் ஆவலோடு ஆண்டவரின் வருகையை ஏதிர்பார்க்க முயற்சிக்க கூடாது.

திருத்தூதர் பவுல் உரோமையர்க்கு எழுதிய திருமுகத்தில் கூறுகிறார், இறைமகன் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரிக்கேற்ப அனைவரும் ஒருமனப்பட்டு தந்தையாம் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும் என்று. இறைவன் முன் தாழ்மையோடு நம்மை அர்ப்பணிக்கும் போது அவருடைய அருள் கொடையின் வல்லமையால் நற்செயல்கள் புரிய நமக்கு போதுமான வலிமையைத் தருகின்றார். இறைவனின் விருப்பம் ஒன்றுதான், நாம் அனைவரும் தூய இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டுமென்று. திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவை அறிவதற்கு முன் அவரை பின்பற்றும் கிறிஸ்துவர்களை அழிக்க வேண்டும் என்று ஆணவம் கொண்டு அவர்களை அழிக்க பயணம் மேற்கொள்ளும்போது அவர் மனம் மாறுகின்றார். இயேசுவின் குரல், சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? நீ துன்புறுத்தும் இயேசு நானே? என்று கூறிய இயேசுவின் சொற்கள் அவரில் மனம் மாற்றத்தைக் கொண்டுவருகின்றது. ஆம் ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் உடையது. சவுலைப் பவுலாக மாற்றிய ஆண்டவர் நம்மையும் ஒரு நொடிப் பொழுதில் மாற்றக் கூடியவர். இறைவனின் சமுகத்தில் உள்ளம் குமுறி மன்றாட்டை எழுப்பும்போது நமது குரல் தூபம்போல் எழும்பி அவருடைய வான்முகிலைத் தொடும் எனவே இறைவனுக்கு எதிராகவும் உறவுகளுக்கு எதிராகவும் பாவங்கள் பல செய்திருந்தாலும் அவற்றை எப்பெழுதும் மன்னிக்கக் கூடியவர். அனுகுவோம் இரக்கத்தின் இறைவனிடம், அவர் நமது வருகைக்காக எதிர்பாத்திருப்பவர். இன்று காலமும் நேரமும் அனைத்தும் மாறிக் கொண்டேதானே இருக்கின்றது. நேற்றும், இன்றும், என்றும் மாறாத இறைவனிடம் நம்பிக்கை கொண்டு நமது பாவங்களை அறிக்கையிட்டு இறைவனில் புது உறவைத் தொடங்குவோம்.

திருத்தூதர் மத்தேயு நற்செய்தி வாசகத்தில் மெசியாவின் வருகைக்காக திமுழுக்கு யோவான் மக்களை ஆயத்தமாக்குகின்றார். மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கி விட்டது, ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு செவிமடுத்து தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்று, யூத மக்கள் மனம் மாறினதுபோல் நாமும் மனம் மாறுவோம். நாம் வாழும் வட்டாரத்தில், குடும்பத்தில், பணித்தளத்தில், சமுதாயத்தில் மற்றவர்களுடன் வாழும்போது ஏற்படுகின்ற நிறை குறைகளைத் தாழ்மை நிறைந்த உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டு நற்செயல்களைச் செய்து இறைவனுக்கு பெறுமையும் புகழ்ச்சியும் கொண்டுவருவோம். தாவீது அரசர், சக்கேயுவைப் போல் தனது குற்றங்களை உணர்ந்து அவற்றை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுவோம். இறைவனிடம் மன்னிப்பு பெற்று மனம் மாறிவிட்டோம் என்பதை நமது நற்செயல்களின் வழியாக நன்மைகள் செய்து இறைவனுக்கு விருப்பமான நற்கனிகள் தரும் உயிருட்டும் மரமாக வளர சிறு முயற்சி எடுப்போம்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். 1பேதுரு 5:8-9a