இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் முப்பத்தி நான்காம் ஞர்யிறு

"இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்"

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
லூக்கா 23:35-43

பொதுக்காலம் முப்பத்தி நான்காம் ஞாயிறு. இன்று இரக்கத்தின் ஆண்டின் இறுதி நாளும், கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழாவையும் கொண்டாடுகின்றோம். இறைமகன் இயேசு இறைவனாகவும் மனிதனாவும், இறைவனில் இறைவனாகவும், ஒளியின் ஒளியாகவும், நசரேயனாகிய இயேசு மீட்பராகவும், யூதர்களின் அரசராகவும், ஆண்டவரும் அரசரும், இயேசு கிறிஸ்து உண்மையான அரசராகவும், அடிமையைப் போல் எழ்மை, கனிவு, இரக்கம், கொண்ட அனைத்துலக அரசருக்கொல்லாம் அரசராக இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான அரசராவார். அவருடைய அரசு இவ்வுலகைச் சார்ந்த மன்னர்களும், தன்னுடைய சுயநலத்திற்காக இன்று ஆட்சி புரியும் அரசியல்வாதிகளைப் போன்றும், நாட்டுத் தலைவர்களைப் போன்றும் அல்ல. மாறாக அமைதியின் அரசர், நீதியின் அரசர்,நேர்மையின் அரசராக மண்ணில் வாழ்ந்து இறையாட்சியின் விழுமியங்களை ஏழைகளின் உள்ளத்தில் விதைத்துச் சென்ற மாட்சிமிகு மன்னர் ஆவார் அவர் மீண்டும் ஆட்சி செய்ய மாட்சிமையோடு இவ்வுலகிற்கு வருவார். புதிய விண்ணகமும் மண்ணகமும் தோன்றும், அங்கே சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது, என்று கூறப்பட்ட அரசாட்சியை மீண்டும் நிலைவாட்டுவார் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருகின்றோம். எனவே தான் நமது விசுவாச அறிக்கையில் விசுவாசத்துடன் உமது அரசை எதிர்பார்க்கின்றோம் என்று அறிக்கையிடுகின்றோம். தந்தையே உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக என்று அனுதினம் செபிக்கின்றோம். இறைவாக்கினர் எசாயா தனது நூலில் அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகுஇறைவன், என்றுமுளதந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது என்று கூறுகின்றார். (எசாயா:9:6). இவர்தான் நாம் விசுவசித்து நம்பிக்கையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமைதியின் அரசர்.

ஏரோது அரசன் காலதத்தில், கிழக்கிலிருந்து ஞானிகள் அவனிடம் "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம் என்று கேட்டார்கள். மூன்று ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கி தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப்போளமும் கொடுத்து அரசருக்குரிய மரியாதை செலுத்துகின்றார்கள். பிலாத்து இயேசுவிடம், நீ யூதரின் அரசனா? என்று கேட்டார். இயேசுவை பிலாத்துவிடம் கையளிக்கப்பட்ட மக்களும் இயேசுவைக் குறைகூறி, நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான், தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான் என்று கூறுகின்றார்கள் என்றனர். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் என்று எள்ளி நகையாடினார்கள், வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்து 'யூதரின்அரசே வாழ்க! என்று சொல்லி கன்னத்தில் அறைகின்றார்கள். 'மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார், அவர் எளிமையுள்ளவர், கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார் " என்று நற்செய்தியில் இறைமகன் இயேசுவை அரசராக அழைக்கின்றார்கள். எளியவர்களையும், பாவிகளையும், ஒதுக்கப் பட்டவர்களையும், வரிதண்டுபவர்களையும், நோய்யுற்றவர்களையும் தேடி வாழ்வு கொடுத்தவர்தான் உண்மையின் அரசர், வாழ்வின் அரசர், அமைதியின் அரசர். அன்பே உருவான இறைவன் நம்மேல் கொண்ட அளவிடமுடியாத அன்பினால் அவர் தன்னையே பலியாக சிலுவையில் அர்ப்பணித்து நிலைவாழ்வை கொடையாகத் தருகின்றார் நமது இரக்கத்தின் இறைவனின் முகத்தைக் கொண்ட மனுமகன் இயேசுக் கிறிஸ்து. ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் என்று இறைவாக்கை மனதில் ஏற்று உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் வாழ்விற்கு வழிகாட்டும் அனைத்துலக அரசராம் இயேசு கிறிஸ்துவை தினமும் தூய்மை நிறைந்த உள்ளத்துடன் மடியிட்டு வணங்குவோம். திவ்ய நற்கருணையில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத அரசருக்கு தகுந்த முறையில் மறியாதையும் வணக்கமும் செலுத்துவோம்.

சிலுவையில் இயேசுவுடன் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு குற்றவாளிகள் அவரைப்பற்றி வாதாடுகின்றார்கள் ஒருவர் இயேசுவைப் பழிக்கின்றார் "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்றும் என்கிறார். மற்றவன் அவனைக் கடிந்து கொள்கிறான். நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகின்றோம். அவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று பதிலுரைத்து பின்பு இவ்வாறு செபிக்கின்றான் "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் என்று மன்றாடுகின்றான். ஒளியின் அரசரை, அமைதியின் அரசரைப்பற்றி, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கள்வன் அறிந்திருந்தான். அவர் மெசியா, யூதர்களின்அரசன், அவரால் நமக்கு மீட்பு உண்டு என்பதை உணர்ந்து கொண்டதால் அவனுக்கு மன்னிப்பு பெற்று அவருடைய ஆட்சியுரிமையில் பங்குபெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் மன்றாடுகின்றார். இரக்கத்தின் ஆண்டின் இறுதி நாளில் நிற்கின்ற நானும் நீங்களும் இறைவனுக்கு எதிராக குற்றங்களும், பாவங்களும் புரிந்துள்ளோம். இன்றுவரைக்கும் இறைவன் நமக்கு எந்த ஒரு தண்டனையும் வழங்கவில்லை. அவர் மிகப்பொறுமையாக நம்முடைய மனம் மாற்றத்திற்காக ஒவ்வொரு நொடிப் பொழுதும் கருணைகாட்டி வழிநடத்தி அனைத்து நம்மைகளையும் பொழிந்து வருகின்றார் அதனால் அவருடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும் நன்றி கூறுவோம். தன்னுடைய குற்றத்தை உணர்ந்து சிலுவையில் தொங்கிய உலகத்தின் அரசராகிய மெசியாவிடம் மன்னிப்பு கேட்ட குற்றவாளியைப் போல் நாமும் நொருங்கிய உள்ளத்துடன் மன்னிப்பு கேட்போம் "இயேசுவே! நீர் ஆட்சியுரிமை பெற்று வரம்போது என்னை நினைவிற்கொள்ளும் என்று மன்றாடுவோம். இன்று உலகநாடுகளை வழிநடத்தும் அனைத்து தலைவர்களுக்காக சிறப்பாக மன்றாடுவோம். இவர்கள் அனைவரும் தங்களுடைய ஆட்சியுரிமையை நேர்மையோடும் நீதியோடும் ஞானத்தோடும் செயல்படுத்தி மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உண்மையுடன் உழைக்கவும் மேலும் உலகில் பரவிக் கொண்டிருக்கும் அனைத்து இருளின் செயல்களை அழித்திட இவர்கள் மனம் தளராமல் உழைக்க வேண்டுமென்று மன்றாடுவோம். அவர் பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார், அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவரக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மிது என்றென்றும் ஆட்சி செலத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவு இராது என்றார். லூக்கா:1:32-33