இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் முப்பத்திகமூன்றாம் ஞாயிறு

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்

மலாக்கி 4: 1-2
2 தெசலோனிக்கர் 3:7-12
லூக்கா 21:5-19

பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு. நவம்பர் மாதம் திருஅவை இறைவாசகங்கள் வழியாக ஆண்டவரின் இரண்டாம் வருகை, விண்த்திலும் மண்ணகத்திலும், இறுதிநாட்களில் நடக்கப்போகும் நிகழ்வுகளைபற்றி சிந்திக்க அழைக்கின்றது. ஆண்டவரின் வருகைக்காக ஐந்து முன்மதி உடைய மணமகளின் தோழியர்கள் விழிப்போடு தங்களுடைய விளக்குகளை ஆயத்தமாகவைத்து மணமகனுடன் திருமண மண்டபத்துக்குள் சென்றது போல் நாமும் ஏமாற்றம் அடையாமல் எப்பொழுதும் விழிப்பாய் இருக்க அழைப்புவிடுக்கின்றது. ஆண்டவருக்கு அஞ்சி நடக்கின்ற அனைவரின்மேல் நீதியின் கதிரவன் எழுவான் என்று முதல் வாசகத்தில் காண்கின்றோம். இறைவன் நீதியுள்ளவர் எனவே நீதியோடு தீர்ப்பிட மீண்டும் வருவார். இன்று உலக நாடுகளில் காண்ப்படுவது, "நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும், பெரிய நிலநடுக்கங்களும், பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும், உங்கள் பெற்றோரும் சகோதர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள், உங்களுள் சிலரைக் கொல்லுவார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள் என்பது உண்மை. இன்று இவைகள் அனைத்தும் நடைபெறுகின்றது அல்லவா? மனஅமைதியும் நிம்மதியும் தேடி மனிதன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றான். நமது அன்றாட நடைமுறையில் சமூக ஊடங்களின் வழியாகவும், செய்தித்தாள்களின் வழியாகவும் நான் காண்கின்ற நிகழ்ச்சிகள் அச்சத்தை தருகின்றதா? அல்லது நம்பிக்கையைத் தருகின்றதா? குடும்ப உறவுகளில் பணத்திற்காகவும், சொத்திற்காகவும் ஏற்படுகின்ற குழப்பங்கள், பிரிவுகள் ஏராளம், சமுதாயத்திலும் சாதிப்பரிவினைகள், ஒற்றுமையின்மை, ஏமாற்றங்கள், நம்பிக்கையின்மை, நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன், பணத்திற்கும் பதவிக்கும் ஏங்கும் அரசியல்வாதிகள், பல்வேறு நாடுகளிலிருந்து புகலிடம் தேடி வரும் அகதிகள், உண்பதற்கு உணவின்றி தவிக்கும் குழந்தைகள், பசியால் வாடும் ஏராளமான மக்கள். ஆம் இன்று இயற்கையும் மனிதனும் அமைதியின்றி வாழும் உலகத்தில் பயணிக்கின்றோம். ஆனால் இவைகளைக் கண்டு கலங்க வேண்டாம் என்று இறைமகன் மகன் இயேசு நம் அனைவருக்கும் ஆறுதல் கூறுகின்றார். மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரும்போது நமக்கு நாவன்மையையும் ஞானத்தையும் இறைவன் கொடுப்பார். நம்மை எவராலும் எதிர்த்து நிற்கவும் எதிர்த்து பேசவும் முடியாது என்று ஆணித்தரமாக கூறுகின்றார். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து அவருடைய நீதியின் கதிர் நம்மீது ஒளிர வேண்டும் ஆகையால் ஒளியின் செயல்களை வாழ்வில் செய்வோம்.

கிறிஸ்துவனாக வாழும் நானும் நீங்களும் மேலே கூறப்பட்ட துன்ப நிகழ்வுகளைக் கண்டிருக்கலாம், அதைப்பற்றி மற்றவர் நம்மிடம் பகிர்ந்திருக்கலாம் அப்போது மற்றவர்களுக்கு ஆறுதல் மொழிகள் கூறியிருக்கலாம். இன்று நமது சமுதாயத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். தனிமை, ஏமாற்றம், கடன் தொல்லை, பட்டதாரி படிப்பு படித்தும் வேலையில்லதா நிலை, பொருளாதார நெருக்கடி, பிறரால் கைவிடப்படுதல், சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்தல், பலவகையான குடும்ப பிரச்சனைகள், புரிந்து கொள்ளாத நிலை, மனஉலைச்சல் போன்ற அன்றாட நிகழ்வுகளை எதிர் கொள்ளும்போது நமது மனநிலை எவ்வாறு உள்ளது? இப்படிபட்ட சூழ்நிலையில் நிலைவாழ்வைக் கொடுக்கும் இறைவனையும், நம்பிக்கையூட்டும் அவருடைய வார்த்தைகளையும் நம்புகின்றோமா? எதற்காக நாம் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம்? நம்முடைய குறிக்கோள் என்ன? நமக்கு அடைக்கலமும் அரணுமாக எப்பொழுதும் கண்ணயராமல் காக்கும் இறைவனை முழு உள்ளத்தோடு நம்புகின்றோமா? ஆண்டவருடைய நாள் எப்போது வரும் எப்படிவரும் என்று நமக்கு யாருக்குமே தெரியாது. ஆண்டவருடைய வருகை திருடனைப்போலவும், யாரும் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் என்று நற்செய்தி அறிவிக்கின்றது. இந்தவருடம் இத்தாலிய நாட்டில் ஐந்து தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடுவிதியில் முழந்தால்படியிட்டு இருகரம் கூப்பி இறைவனிடம் உதவி கேட்கின்றார்கள். அவர்கள் யாரும் நிலநடுக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல்தான் இறைவனின் வருகையும் இருக்கும். நமது வாழ்க்கையில் நம்மோடு இறுதியில் பயணிப்பவர் இறைவன் ஒருவர்மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்க கூடாது. இறைமகன் இயேசு நமக்காக எல்லாத் துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் மௌனமாக ஏற்றுக் கொண்டு, நிலைவாழ்வை பெறக்கூடிய வழியைக் காண்பித்துச் சென்றார். உள்ளம் கலங்காமல், மனஉறுதியுடன் இறைமகன் இயேசுவில் நமது நம்பிக்கையை வைப்போம். முன்மதியுடன் நமது வாழ்வு என்னும் விளக்கை நீதியும், நேர்மையும், அன்பும் என்னும் அருள் நிறைந்த எண்ணையால் நிரப்பி எப்பொழுதும் எரிந்து சுடர்விட்டு விழிப்போடு மணமகனின் வருகைக்காக காத்திருப்போம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:8-111 உள்ள இறைவசனங்களை வருகின்ற நாட்களில் தியானித்து மனம் மாற்றம் பெறுவோம். அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள்போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்தவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை, மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும், பஞ்சபூதங்கள் வெந்துருகிப்போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்துபேகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் சிறந்து விளங்க வேண்டும். தியானித்து, சிந்தித்து, வாழ்வில் செயலாக்கி இறைவனுக்கு உகந்த விளக்காக சுடர்விட்டு இறைவன்முன்பும் பிறர் முன்பும் ஒளியாக விளங்குவோம்.