ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு

நாம் முதல்வராக இருக்க விரும்பினால் .....

சாலமோனின் ஞானம் 2:17-20
யாக்கோபு 3:16 4:3
மாற்கு 9:30-37

விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும். பொறுமை கொள்ளும், இணங்கிப்போகும் தன்மையுடையது, இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது, நடுநிலை தவறாது, வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. யாக்கோபு:3:17-18

நீதியும் நேர்மையும் நிறைந்த எங்கள் அன்புத் தந்தையே! உம்மைப்போல் எம்மை வாழ்வதற்கு வேண்டிய ஞான அருளைத் தாரும். நீர் விரும்புவது எங்களது உள்ளத் தூய்மையை. தூய்மை உள்ள இடத்தில் தீய்மை அனுகாது. அப்படி இருப்பினும் எங்கள் உள்ளம் பல வேளையில் பழுதாய் உள்ளது. மண்ணுலகைச் சார்ந்த மனித இயல்புகளையே அது நாடுகின்றது. இறைவா உமக்கு விருப்பம் இல்லாத செயல்களை எங்கள் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டு அருள் நிறைந்த ஞானக்கொடைகளால் எங்களை முழுதும் நிரப்பியருளும்.

இன்று பொதுக்காலம் 25 ஆம் வாரம். இறைவன் இன்று அவருடைய உயிருள்ள வார்த்தைகளின் வழியாக ஏளாமான வாழ்வுக்கு வழிகாட்டும் விழுமியங்களையும், வாழ்வையும் உறவையும் அழிக்கும் தீமைகளையும் நமக்கு முன் வைத்துள்ளார்.

நீதிமான்கள் இறைவனின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார். நீதிமான்கள் அமைதியை ஏற்படுத்துபவர்கள். இன்று என்னுடைய செயல்முறைகள் அனைத்தும் இறைவனுக்கு உகந்ததாக உள்ளதா? இறைமகன் இயேசு அவருடைய இறைவேண்டிலில் "உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை". இறைமகன் இயேசு பிலாத்துவிடம் கூறுவது" உண்மையை எடுத்துரைப்பதே என் பணி இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்கின்றனர்". அன்றாட நடைமுறையில் நம்முடைய செயல்முறைகளில் உண்மை உள்ளதா? உண்மையைச் சார்ந்தவர் இறைவனின் குரலுக்கு செவிசாய்கின்றனர்? இன்று யாருடைய குரலுக்கு செவிசாய்கின்றோம்? உலகின் விழுமியங்களுக்கா? அல்லது உண்மை வாழ்விற்கு அழைக்கும் இறைவனின் விழுமியங்களுக்கா? உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. பின்பு ஏன் நமது சமுதாயத்திலும், குடும்பத்திலும், குழும வாழ்விலும் நாட்டிலும் பொறாமையும், கட்சி மனப்பான்மையும், குழப்பங்கள் தீவிரவாதம் கொலைகள், கொடுமைகள், அமைதியற்ற நிலை? இரக்கத்தின் இறைவனை நோக்கி குரல் எழுப்புவோம். உலக நாடுகளில் மனித உள்ளங்கள் மாற்றம் பெற்று அமைதியின் தூதர்களாகவும் இரக்கம் கொண்ட உள்ளங்களாகவும் வாழ இரக்கத்தின் தந்தையிடம் மன்றாடுவோம்.

அகதிகள் தஞ்சம் தேடி எழுப்பும் அபயக்குரல்கள்;, நீதிக்காக போராடும் எத்தனைNயுh உள்ளங்கள் கண்ணீருடன் வாழும் அவல நிலை நமது சமுதயாத்தில் வளர்ந்து கொண்டே உள்ளது. இறைபயம் இல்லாத உலகம், தீமைக்கும், அழிவுக்கும் முதலிடம் கொடுத்து மனிதகுலத்தையே அழிக்கும் காட்சிகள். இயற்கை சீற்றத்தினால் மனிதகுலமும் அவர்களுடைய செல்வங்களும் அழியும் காட்சிகள். மனதை உருகவைக்கும் நிகழ்சிகள். சிறுகுழந்தைகளின் கண்ணீர் சிந்தும் முகங்கள். வாழ்வுக்காக பயணம் செய்யும் மனித உள்ளங்கள். ஏன் ? எதற்காக இத்துன்பங்கள், துயரங்கள் இவைகளிலிருந்து நீர் கற்பிக்கும் பாடம் என்ன?

திருத்தூதர் யாக்கோபு மிக அழகாக சொல்லுவது இவை அனைத்தும் மண்ணலுகைச் சார்ந்தது, அது மனித இயல்பு சார்ந்தது, பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்மான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். இப்படிபட்ட செயல்கள்தான் நமது சமுதாயத்தில் நடக்கின்றது. இறைவனால் கொடுக்கப்பட்ட கொடைகளைப் பயன்படுத்தும்போது நேர்மையில்லை, உண்மையில்லை, பாகுபாடுகள், பேராசை, சண்டை சச்சரவுகள். இருளின் பேய் தன்னைமகள் நம்மில் விலக வேண்டுமென்றால் விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையான பண்புகளாகிய தூய்மை, அமைதி, பொறுமை, இணங்கிப்போகும் தன்மை, இரக்கம், நற்செயல்கள், நடுநிலை தவறாதது, வெளிவேடமற்றது போன்ற விழுமியங்களை அன்றாட வாழ்வில் செய்ய முயற்சிக்க வேண்டும். இறைவன் வழங்கும் இலவசப் பண்புகளை ஏற்று உள்ளத் தூய்மையுடன் நேர்மையுடன் வாழ்ந்து இறைவனின் மக்களாகுவோம். இறைவார்த்தை உயிர் அளிக்கக் கூடியது. அவருடைய வாக்கு நமது காலடிகளுக்கு விளக்காகவும், நமது வாழ்க்கைப் பாதைக்கு ஒளியாக விளங்கினால் எந்த ஒரு தீய சக்தியும் பேய்தன்மையும் நம்மை அனுகாது, அவை நம்மைவிட்டு அகன்றுபோகும்.
இறைமகன் இயேசு தனது சீடர்களுக்கும் கூறுவது, நாம் முதல்வராக இருக்க விரும்பினால் அனைவரிலும் கடைசியானவராக இருக்க வேண்டுமென்று கூறுகின்றார். மேலும் சிறு பிள்ளைகளைப் போல் மாசுபடாமல் இருக்க இறைவன் விரும்புகின்றார். எனவே இன்று கொடைகளின் இறைவனாகிய நம்மைக் காக்கும் இறைவனை கண்நோக்குவோம். இறைவா எங்கள் பணிதளத்திலும், குடும்பத்திலும் சமுதாயத்திலும் நம்முடைய அனுகு முறையில் பொறுமை, கனிவு, மதிக்கும் தன்மை, தூய்மை, உண்மை, நேர்மை, அன்பு என்ற வாழ்வுதரும் கொடைகளால் நிறையப்பெற்ற இறைவனுக்கு சொந்தமான நேசம் நிறைந்த நீதிமான்களாக வாழ்வோம். இரக்கத்தின் இறைவா எங்கள் குற்றம் குறைகளை கண்ணோக்காமல் உமது ஞானக் கொடைகளால் பக்குவமடைய துணைபுரியும்.

சிந்திப்போம்: நீங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள். அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். கொலோசையர்: 3:12