இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் பதினொன்றாம் ஞாயிறு

"உமது நம்பிக்கை உம்மை மீட்டது, அமைதியுடன் செல்க "

2 சாமூவேல் 12:7-10.13
காலாத்தியர் 2:16,19-21
லூக்கா 7:36-8:3

இன்று பொதுக்காலம் பதினொன்றாம் ஞாயிறு. இன்று திருப்பலியில் வாசிக்கப்படும் இறைவாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தரும் அறிவுரைகள் யாதெனில் இறைவன் அன்பு நிறைந்தவர், மன்னிப்பவர். இரக்கம் மிகுந்தவர். நம்பிக்கை உள்ளவர் என்ற ஆழ்ந்த உண்மையை நம் முன்வைக்கின்றது. முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நமக்கு கற்பிக்கின்ற உண்மைகள் யாதெனில் மனமாற்றம், பாவ நிலையை உணர்தல், இறைவனின் அருளைப் பெறுவது, புதுபடைப்பாக மாறுவது. இன்று முதல்வாசகத்தில் காணப்படும் உண்மையைப்பற்றி மற்றும் சிந்தித்து, தியானித்து நமது வாழ்க்கையில் மனம் மாற்றம் பெறுவோம். தாவீது அரசர் தான் மறைவாக செய்த பாவத்தை இறைவன் இறைவாக்கினர் நாத்தான் வழியாக வெளிப்படுத்துகின்றார். தாவீது அரசருடைய பாவநிலையை செல்வந்தர் ஏழையின் உவமையின் வழியாக அறிவித்து (காண்க: 2சாமூவேல்:12:1-4) அவரை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். தாவீது அரசர் இறைவனால் திருப்பொழிவு செய்தவர், அனைத்து நலன்களை நிறைவாகப் பெற்றவர். சவுலின் பிடியிலிருந்து காப்பாற்றியவர் அப்படியிருந்தும் அவர் இறைவனுக்கும் மனிதனுக்கும் எதிராக மறைவாக இரண்டு பெறும் பாவத்திற்கு உடன் படுகின்றார். உரியாவின் மனைவியின் மீது ஆவல்கொண்டு அவளுடன் உடலுறவு கொள்கின்றார். அதன் விழைவாக பத்சேபா கருவுற்றிப்பதும். அதை அறிந்த தாவீது பத்சேபாவின் கணவராகிய உரியவை கடுமையாக போர் நடக்கும் முன்வரிசையில் வைத்துக் கொல்லும்படி கட்டளையிட்ட கொல்லுகின்றார். இரக்கமின்றி ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர் பார்வையில் தீயது செய்தாய் என்று அவர் செய்த பாவத்தை இறைவாக்கினர் நாத்தான் உணர வைத்தபோது. தான் செய்த பெறும் தவறுக்காக மனம்வருந்துகின்றார். அப்போதுதான் தாவீது அரசர் தான் மறைவில் செய்த பாவத்தை உணர்ந்து இறைவாக்கினர் நாத்தானிடம் இவ்வாறு சொல்கின்றார் "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன் " என்று சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்கின்றார். அதற்கு நாத்தான் உரைப்பது "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய் என்று ஆறுதல் தருகின்றார். தாவீது அரசர் தனது பாவங்களை உணர்ந்த போது பாடிய திருப்பாடல்தான், திருப்பாடல் 51 இரண்டாம் வசனத்தில் என் தீவினையை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும் என்று இறைவனிடம் மனம்விட்டு மன்றாடுகின்றார்.

இன்று நானும் நீங்களும் இறைவனுக்கு எதிராகவும் நம்முடன் பயணிக்கும் உறவுகளுக்கும் எதிராகவும் மறைவில் பாவங்கள் பல புரிகின்றோம். அவற்றை உணராமலும் பாவஅறிக்கை செய்யாமலும் காலத்தை செலவழித்துக் கொண்டுள்ளோம். இன்று உலக நாடுகளில் நமது கண்முன் நடப்பதும் இப்படியான பாவங்கள்தான். இரக்கத்தின் ஆண்டினை இறைவன் நமக்கு கொடுத்திருப்பது மனமாற்றத்திற்காக எனவே தாவீது அரசரைப் போல் இறைவா ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும் நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும் உறைபனியிலும் வெண்மையாவேன் என்று இறைவனிடம் மன்றாடுவோம். மனம்மாற்றம் பெற்று இறைவனுடன் ஒப்புரவாகுவோம். அப்போதுதான் திருத்தூதர் பவுல் கூறுவது போல் நான் இறைவனுக்காக வாழ்வேன். நான் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கின்றேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல கிறிஸ்துவே என்னுள் வாழ்கின்றார் என்று முழுமையாக துணிவுடன் நம்மால் சொல்ல முடியும். கண்ணீருடன் தன் காலடிகளைக் கழுவிய பெண்மணியை இறைமகன் இயேசு தீர்ப்பிடவில்லை ஆனால் அவர் தனது அன்புமொழியால் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க என்று சொல்கின்றார். பாவிகளை அழைக்க வந்த இறைவன் நம்மை ஒருபோதும் தண்டிக்கமாட்டார் ஆனால் அவர் நம்முடைய மனமாற்றத்திற்காக காத்துக்கொண்டுள்ளார். நேசமிகு நம் விண்ணகத் தந்தையிடம் நம்பிக்கையுடன் நமது பாவச் செயல்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்ப பெற்று அவரின் வாழ்வின் உறவில் ஒன்றாகுவோம்.