இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் பத்தாம் ஞாயிறு

"கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கின்றார்"

1 அரசர்கள் 17:17-24
கலாத்தியர் 1:11-19
லூக்கா 7: 11-17

பாஸ்கா காலம் நிறைபெற்று மீண்டும் திருஅவை பொதுக்காலத்தில் பயணம் செய்ய நம்மை அழைக்கின்றது. இன்று திருப்பலியில் வாசிக்கப்படும் இறைவார்த்தைகள் வழங்கும் உண்மை என்னெவென்றால். நமது இறைவன் என்றும் வாழும் இறைவன் அவர் இறந்தோரின் இறைவன் அல்ல மாறாக வாழ்வோரின் இறைவன் என்று முதல் வாசகத்தின் வழியாகவும் நற்செய்தியின் வழியாகவும் எடுத்துரைக்கின்றது. இறந்துபோன இரண்டு மகன்கள் உயர;பெறுகின்றனர். இறைவாக்கினர் எலியாவிடம் கைம்பெண் வேண்டுதல் எழுப்புகின்றார். இறைமகன் இயேசு தன் மகனுக்காக கண்ணீர் சிந்துவதைக் காண்கின்றார். இறைவாக்கினர; எலியாவும். இறைமகன் இயேசுவின் செயல்கள் வித்தியாசமாக உள்ளது. ஒன்று இறைவேண்டல் மற்றது இறைமகனின் உடனிருப்பு. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா தங்கியிருந்த வீட்டுத்தலைவியின் மகனுடைய நோய் முற்றவே அவனுடைய மூச்சு நின்று விட்டதைக் கண்ட அன்புத் தாய் இறைவாக்கினர் எலியாவிடம் முறையிடுகினறார். இறைவாக்கினர் எலியா அவளுடைய வேதனையைக் கண்டு மனமிரங்கி அவளுடைய மகனுக்காக இறைவனிடம் கதறி 'என் கடவுளாகிய ஆண்டவரே இந்த சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும் என்று மன்றாடுகின்றார். இறைவன் இறைவாக்கினர் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்து சிறுவனுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்கின்றார். கைம்பெண் தனது வேண்டுதலை நம்பிக்கையுடன் இறைவாக்கினர் எலியாவிடம் சமர்பித்தபோது இறைவன் அவற்றிகு செவி கொடுக்கின்றார். ஆழ்ந்த விசுவாசமும் நம்பிக்கையும் இருக்கின்ற இடத்தில் இறைவன் உண்மையாகவே செயலாற்றுவார் என்பது நிச்சயம். நிலைவாழ்வை கொடுக்கின்ற இறைவனை நம்புவோம் விசுவசிப்போம் ஏனென்றால் அவர் என்றும் வாக்குமாறாத உண்மையுள்ள இறைவன்.

திருத்தூதர் பவுல் மிக அழகாக கூறுகின்றார் நற்செய்தியை அறிவிக்கும் கொடையை அவர் இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக பெற்றுக்கொண்டார் என்றும், அவர் அவருடைய மூதாதையர்களின் மரபுகளில் ஆவர்வமும் யூதநெறியில் சிறந்து விளங்கியவராய் இருந்தபோதிலும் இறைவன் அவரை நற்செய்தியின் பணிக்காக தேர்ந்தெடுத்தார். அவர் இறைமகன் இயேசுவைப்பற்றியும், அவருடைய போதனைகளைப் பற்றியும் யாரிடமும் கேட்கவில்லை என்றும், இறைவனின் அருள் வெளிப்பாட்டின் வழியாக பெற்றுக் கொண்டேன் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். கிறிஸ்துவர்களை அழித்தவரை ஒரு மாபெறும் கருவியாக தேர்தெடுத்து திருச்சபையைக் கட்டியெழுப்ப அடித்தூணாக விளங்கியவர்தான் திருத்தூதர் பவுலடிகளார். ஆண்டவரின் தூதர் அன்னை மரியாளிடம் கூறிய வார்த்தை மிகவும் பொருந்தும் "இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்கா:1:38) இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கின்றது

நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு தனது சீர்களுடனும் பெருந்திரளான மக்களுடனும் நயீன் ஊரை நோக்கி பயணிக்கின்ற வேளையில் சந்திக்கின்றவர்கள்தான் நயீ;ன் ஊரில் வாழ்கின்றன மக்கள். இறந்த ஒருவரை இறுதி அடக்கம் செய்ய பெருந்திரளான மக்கள் வருகின்றபோது இறைவன் அவர்;களைத் தேடி வருகின்ற நேரம். கைம்பெண்ணுக்கு இருப்பது ஒரே அன்பு மகன். மிகுந்த வேதனையுடனும் கண்ணீருடனும் நடந்து வந்த தாயைக் கண்டு, இறைமகன் அவர்மீது பரிவுகொண்டு அழாதீர் என்று ஆறுதல் கூறி அவருடைய இறந்த மகனுக்கு வாழ்வு தருகின்றார். இறைவன் இருக்கின்ற வாழுகின்ற இடத்தில் வாழ்வு உண்டு, துன்பம் இல்லை. பெருந்திரளான மக்கள் இறைமகன் இயேசுவின் வல்ல செயல்களைக் கண்டு இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார்கள். துன்பத்தால் துவண்டு வாழும் உள்ளங்களுக்கு ஆறுதல் நம்முடைய வாழ்க்கையிலும் இறைவன் நிறைய புதிய செயல்களை செய்து வருகின்றார் எனவே இறைவனுக்கு நன்றியுள்ள மக்களாக வாழ்வோம்.

இன்று உலக நாடுகளில் நம்மைசுற்றி நடப்பது கொடுமைகள், வன்முறைகள், வெடிகுண்டு தாக்குதல்கள், அகதிகள் புகழிடம் தேடி ஓடி வரும் நிலை, குடும்பங்கள், குழுமங்கள், சமுதாயங்களில் பிளவுகள். இயற்கை சீற்றங்கள். இத்துண்பங்கள் மத்தியில் எத்தனையோ தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை இழந்து கண்ணீர்த் துளிகளுடன் பயணம் செய்யும் காட்சிகளை தொலைக்காட்சியிலும், செய்தித் தாள்கிளிலும் காண்கின்றோம். இவற்றின் வழியாக இறைவன் நமக்கு வழங்கும் நற்செய்தி என்னெவென்றால் இறைவனைப்போல் இரக்கமுள்ளவர்களாய் பரிவுள்ளவராய் இருக்க வேண்டுமென்று. நமது வாழ்வின் வாட்டாரத்தில் ஆறுதலும் அடைக்கலமும் தேடும் உள்ளங்களுக்கும் உறவுகளுக்கும் பரிவும் அன்பும் காட்டுவோம். அருளும் புனிதமும் நிறைந்த இரக்கத்தின் ஆண்டினை அருள்நிறைந்த ஆண்டாக வாழ ஆவியானவரின் துணைவேண்டி உறவுகளின் கண்ணீரைத் துடைப்போம். இனிவருகின்ற நாட்களில் நாம் சந்திக்கப் போகின்ற ஒருவருக்காவது ஆறுதல் மொழி கூற முயற்சி எடுப்போம்.