இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழா

பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்

திப:1:1-11
எபேசி. 1:17-23
லூக்கா 24: 46-53

இன்று இறைமகன் இயேசுவின் விண்ணெற்ற பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இறைமகன் பிறப்பை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு திருமுழக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று பறைசாற்றி வந்தார். மக்கள் திரளாக அவரிடம் சென்று யோர்தான் ஆற்றில் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்குப் பெற்றார்கள். இன்று கொடுக்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தி 24: 46-47 இறைவசனங்களில் காண்பது பாவமன்னிப்பு பெற மனம்மாற்றம் தேவை, ஆவியானவர் தங்குவதற்கும், அவர் வல்லமையுடன் செயலாற்றுவார் என்ற மையக்கருத்தை முன்வைக்கின்றது. இறைமகன் இயேசு தன்னுடைய பணிவாழ்வில் பாவிகளை மன்னித்து மனம் மாற்றம் பெற வழிகாட்டினார். திருமுழுக்கு யோவான் மத்தேயு நற்செய்தியில் 3:11 காண்பது, நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அன்று திருமுழுக்கு யோவான் கூறிய வாக்கு இறைமகன் இயேசு பாடுகளின் மரணத்தின், உயிர்ப்பின் வழியாக நிறைவு பெற்று, தூய ஆவியானவரின் வருகையால்தான் பாவத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்ற ஆழமான உண்மையை நமக்குத் தருகின்றார். பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என்று இறைமகன் இயேசு தங்களுடைய சீடர்களிடம் கூறவது எதற்காக? பாவம் இருக்கின்ற உள்ளத்தில் தூய ஆவியானவர் வாசம் செய்து, வழிநடத்தவும், செயலாற்றவும் மிகவும் கடினம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றார். இறைமகன் இயேசு தனது மலைப்பொழிவு மறையுரையில் கூறவது "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் " என்று கூறுகின்றார். எனவே தூய்மையான உள்ளம் நமக்குத் அவசியம். மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும், மேலும் மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்று இறைமகன் இயேசு திருத்தூதர் லுக்கா எழுதிய நற்செய்தியின் வழியாக நம்மிடம் கூறுகின்றார். இரக்கத்தின் தந்தை நம்மை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. இறைவனுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே, இறைவன் நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை என்று திருப்பாடல் 51: 17 இறைவசனத்தில் காண்கின்றோம். இரக்கத்தின் ஆண்டில் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்று ஆவியானவரின் அபிசேகம் பெற நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பை மீண்டும் தந்துள்ளார். மனம் மாற்றம் பெற முயற்சி எடுப்போம்.

எனவே எதிர்வரும் தூய ஆவியானவரின் பெருநாளை கொண்டாட இருக்கும் நாம் அனைவரும் நமது ஆன்மிக வாழ்வைப் பற்றி சிறிதுஆய்வு செய்ய முயற்சி எடுப்போம். பாவிகளை இறைவன் அன்பு செய்கின்றார் ஆனால் பாவத்தை வெறுக்கின்றார். இன்று நாம் அனைவரும் இறையாட்சியைப்பற்றியும் இறைஅனுபவத்தையும் மற்றவருக்கு அறிவிக்க கடமைபட்டுள்ளோம். இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் கூறுவது உங்களைக் கழுவித் தூய்மைப் படுத்துங்கள், உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள். தீமை செய்தலை விட்டொழியுங்கள். உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன. எனினும் பஞ்சைப்போல அவை வெண்மையாகும் என்னும் இறைவனின் வார்த்தையின்மீது நம்பிக்கை கொண்டு நாம் அன்றாட இறைவனுக்கும் உறவுகளுக்கும் எதிராக புரியும் பாவங்களை ஆய்வு செய்து அவற்றை நம்வாழ்க்கையிலிருந்து அகற்றி மன்மாற்றம் பெற்று உண்மையான ஓப்புரவு அருட்சாதனத்தின் வழியாக இறைவனுடன் ஒப்புரவாகுவதுடன் உறவுகளுடன் ஒப்புரவாகி தூய ஆவியாரைப் முழுமையாக பெற விழிப்போடு தாயார் செய்து. ஆவியானவரை முழுமையாக பெற்று இறைவனுக்கு சாட்சிகாளாக விளங்கிட நம்மை நாமே தாயார் செய்வோம்.