இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

உயிர்ப்புக்காலம் 5ஆம் ஞாயிறு

அன்புச் சீடர்களாக

தி.பணி 14:21-27
திருவெளிப்பாடு 21:1-5
யோவான் 13:31-33.34-35

' இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது. முன்பு இருந்தவையெல்லாம மறைந்துவிட்டன" என்றது. திருவெளிப்பாடு: 21:3-4

இன்று உயிர்ப்பு காலம் ஐந்தாம் ஞாயிறு. இன்றைய மூன்று வாசகங்களின் வழியாக இறைவன் நமக்கு வெளிப்படுத்தும் உண்மையானது இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்று எரியும் முட்புதரின் வழியாக தன்னை மோசேக்கு வெளிப்படுத்தியது போல், நேற்றும், இன்றும், என்றும் மாறாத தெய்வம் நம்மிடம் வாசம் செய்யவும், நமது நடுவில் குடியிருக்கவும், நாம் அவருடைய மக்களாக இருக்கவும், நமக்கு அவர் என்றும் இறைவனாக இருப்பார் என்ற வாக்குறுதியை அளிக்கின்றார். திருமுழுக்கின் வழியாக இறைவனோடு உறவில,; அருளில,; ஒன்றாகி அவர் வாழும் ஆலயமாக திகழ்கின்றோம். இறைவன் வாழ்கின்ற ஆலயமாக விளங்கும் நாம் அவருடைய அன்பின் கட்டளையை பின்பற்றி அவரைப்போல் வாழ அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூர் பவுலும் பர்னபாவும் தங்களுடைய சீடர்களை நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி ஊக்குவிக்கின்றார்கள். இறைபணி செய்பவர்களுக்காக நோன்பிருந்து இறைவனிடம் வேண்டுதல் எழுப்பி அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைக்கின்றார்கள். கிறிஸ்துவர்கள் என்று அழைக்கும் நாம்; ஒவ்வொரும் இறைமகன் இயேசுவைப்பற்றியும் அவருடைய வள்ளமையைப்பற்றியும் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். குழுவாக இறைபணி செய்யும் நாம் இறைவனுக்கு முதலிடம் கொடுத்து, அனைவரையும் இறைவனிடம் ஒப்படைத்து அவருடைய விருப்பம் என்னெவென்று அறிந்து செயல்படும்போது இறைவன் நமக்கு அமைதியும் அருளும் தந்து நம்மை வழுப்படுத்துவார். நமது இறைப்பணி சிறப்புடன் வளரும் என்பது நிச்சயம். திருப்பாடல் 127, இறைவசனம் ஒன்று சொல்லுவது 'ஆண்டவர் வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும். எனவே இரக்கத்தின் ஆண்டில் பயணம் செய்யும் நாம் நம்முடன் வாழ்பவரையும், நம்முடன் பணிசெய்பவரையும் இறைவனிடம் ஒப்புவித்து வேண்டுதல் செய்வோம். இறைவனைப்போல் யாரையும் தீர்ப்பிடாமல் மதிப்போடும், அன்போடும், இறைஅருளோடும் இணைந்து வாழ்ந்து. மனத்தாழ்ச்சியுடன் பிறரை உயர்வாக எண்ணி இயேசுவின் வழியைப் பின்பற்றும் அன்புச் சீடர்களாக வாழ்வதுடன், பிறரை கிறிஸ்துவின் வாழ்வை வாழ்ந்திட துணையாய் இருப்போம்.

கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து பெற்ற கட்டளை. 1யோவான்:4:20-21