இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherlandஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

அவருடைய அன்பிற்கு சாட்சியாய் வளர்வோம்

2கு.பே36:14-16,19-23
எபே2:4-10
யோவா 3:14-21

சகோதர சகோதரிகளே, கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்படடிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்குகாகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல, மாறாக இது கடவுளின் கொடை இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு, நற்செயல்கள் புரிவதற்கென்ற கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். எபேசியர்:2:4-10

கனிவும் இரக்கம் கொண்ட நல்ல தந்தையே ! இன்றும் என்றும் நீர் எங்கள் மத்தியில் சிலுவை சுமந்து வருகின்றீர். பல வேளையில் அதை அறிந்தும், கண்டும், உதவ முயற்சி செய்யாமல் வாழ்கின்றோம்;. சிலுவை என்று நினைக்கும் போது மனம் மிகவும் சுமையாக இருக்கின்றது. அதனை சுமக்க முடியாமலும், ஏற்க மனம் தயங்குகின்றது, அவற்றிலிருந்து தப்பிக்க முயலுகின்றோம். இறைவா சிலுவைதான் நிலைவாழ்வுக்கு நுலை வாயில் என்பதை உமது அன்புமகனின் சிலுவை மரணத்தின் வழியாக எங்களுக் கற்பித்து தந்தமைக்கு நன்றி செலுத்துகின்றோம். இனிவரும் தபக்காலத்தில் உமது வார்த்தையான உயிருள்ள ஒளி எங்கள் வாழ்வில் ஒளிரட்டும். சிலுவையில் எங்களுக்காக மரித்த இயேசுவே எங்கள் உள்ளத்தில் படிந்து இருக்கும் எங்கள் பாவச் சுமையாகிய இருளை அகற்றி தூய்மை நிறைந்த உள்ளத்தைப் படைத்தருளும்.

இன்று தவக்காலம் 4-ஆம் ஞாயிறு. தவக்காலத்தில் பயணிக்கின்ற நமக்கு இறைவன் ஒவ்வொருநாளும் தருகின்ற அறிவுரைகள் என்னெவென்றால் அவரை முழுமையாக அன்பு செய்யவும், அவருடைய விதிமுறைகளை இடைவிடாது கடைபிடிக்கவும் வழியுறுத்துகின்றார். நாம் பாவிகளாய் இருக்கும்போதே இறைவன் நம்மை அன்பு செய்து, அவருடைய அன்புமகன் வழியாக நிலை வாழ்வுக்கு அழைத்தவர்தான் நமது பாசமுள்ள இறைவன். சிலுவைமரத்தின் வழியாக புது வாழ்வு கொடுத்தவர். நமது பாவங்களை அவர் தோல்மேல் சுமந்து நமக்கு விடுதலையும் குணமும் அளித்தவர். சிலுவைமரத்தினாலும், மூன்று ஆணிகளின் வழியாகவும் உலகையும், அவரது உருவிலும் சாயலிலும் மனிதனை தனக்கு உரிமையுள்ள மகனாக மகளாக ஏற்றுக் கொள்ள சிலுவையை சுமந்தவர். இறைமகன் இயேசு கெத்சமனித் தோட்டதிலிருந்து மண்டை ஓட்டு இடம் என்று சொல்லப்படும் கொல்கொதா வரை அனுபவித்த துன்பங்கள,; வேதனைகள், ஏளனம், ஆணி தன்னுடைய கைகளையும் பாதத்தையும் துளைத்தபோது, சாட்டையால் வீரர்கள் அடித்தபோது அனுபவித்த வலியும் வேதனையும் யாருக்காக? நம் அனைவரும் நலம் பெறுவதற்காக. சிலுவையின் அன்பரும் நண்பருமாகிய இயேசுவை நம்பிக்கையுடன் கண்ணோக்கி நிலைவாழ்வைப் பெற நமது உள்ளத்தின் வழிகளை ஆயத்தம் செய்வோம்.

இறைவாக்கினர் ஓசாயா வழியாக இறைவன் மிக ஆழகாக கூறுவது. உன் கடவுளாகி ஆண்டவரிடம் திரும்பிவா, நீ உன் தீச் செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள், தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும். அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன். அவர்கள் மேல் உளமார அன்பு கூறுவேன் . அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. இறைவன் நம்மை உளமார அன்பு செய்கின்றார். எனவே இன்று நாம் செய்த குற்றங்களை ஆய்வு செய்து, மனம்வருந்தி, அனைத்துப் பாவங்களையும் அவர்முன்பு அறிக்கையிட்டு மனம்மாறி அவருடைய பண்புகளில் வளர்ந்து அவருடைய அன்பிற்கு சாட்சியாய் வளர்வோம்.

மேலும் இறைவாக்கினர் எசாயா வழியாக கூறுவதும் அவருடைய அன்பைப் பற்றிதான். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது. என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். இறைமகனின் சிலுவை மரணமும், அவர் உயிர்விட்ட சிலுவைமரமும்தான,; இறைவன் நம்மேல் வைத்துள்ள அளவிடமுடியாத மீட்பின் அன்பின் வெளிப்பாடு. இறைமகன் பாவிகளிடம்தான் பங்காளிகளாக வாழ்ந்தார் என்று நற்செய்திகள் விளக்குகின்றன. அவருடைய பணிவாழ்வின்போது அவருடைய உடனிருப்பு, அவருடைய அன்பின் சொற்கள் அவர்களை பாவ வழியைவிட்டு விலகவும், உண்மையான இறைவன்மீது நம்பிக்கை கொண்டு புதுவாழ்வு வாழவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்;தது. இறைமகன் இயேசு காணாமற்போன ஆடு உவமையில் கூறுவது மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொன்ன இறைமகனின் வார்த்தையை நம்பி மனம் மாற்றம் பெற்று இறைவனுடன் ஒன்றாகுவோம்.

இயேசு சிலுவையில் நமக்கா சுமந்த சுமைகள்:
பாவமே எது என்று புரியாத செய்யாத இறைமகன் இயேசுவின் மீது சாட்டிய குற்றங்கள், அநீதிகள், இகழ்ச்சி, முள்முடியாலும், சாட்டையாலும் அடித்து, பிலாத்துவின் வீரர்கள் அவர்மேல் செந்நிற மேலுடையை அணிவித்து யூதரின் அரசே வாழ்க! என்று கன்னத்தில் அறைந்தபோதும், சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும், என்று தலைமைக் குருக்களும் காவலர்களும் கத்திய குரல்களுக்கும் மௌனம் காத்தது ஏன்? அவர் நம்மீது கொண்ட அன்பால்தான். பிலாத்து அவர்களிடம் இவ்வாறு கூறினார் 'இவரிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறிய வார்த்தை உண்மையை உரைக்கின்றது. ஒழிக! ஒழிக! என்று கத்திய மக்கள் கூட்டம். உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல் என்று சொல்லிய பலவகையான பழித்துரைகள். யூதரின் அரசரே வாழ்க என்று சொல்லி ஏளனம் செய்து அவர்மேல் துப்பிய போதும், இறைமகனோடு குற்றவாளியாக இருந்தவன் 'நீ மெசியாதானே உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று பழித்துரைத்த போது, தன்னோடு மூப்பத்திமூன்று ஆண்டுகள் பணிவாழ்வில் பயணித்து அவரால் அன்பு செய்த சீடர்கள் தன்னை மூப்பது வெள்ளிக் காசுக்காக காட்டிகொடுத்த போது, இயேசுவை மூன்றுமுறை தெரியாது என்று மறுதலித்த போது, தாகமாய் இருக்கிறது என்று கேட்ட இயேசுவுக்கு புளித்த திராட்சை கடற்பஞ்சை தோய்த்து வாயில்வைத்த போது, ஏன் அவர் மௌனம் காத்தார்? நம்மை மீட்ப்பதற்காகவும் இறைவனின் வழிமுறைகளின்படி வாழவும்;. இறைமகன் இயேசு நமக்கு கற்பித்தது அமைதி, பொறுமை, மன்னிப்பு, இறைவேண்டல், இரக்கம், தியாகம், கனிவான பார்வை, நன்மை செய்தல் என்ற இயேசுவின் அதிசயகுணங்களை நாமும் பெற்று நற்செயல்கள் புரிந்து அவரைப்போல் வாழ வேண்டுமென்று விரும்பினார். இறைமகன் இயேசுவிடம் வேண்டுவோம் அவருடைய ஆவியானவர் நம்மை வழிநடத்தும் போது எந்த ஒரு தீயசக்தியும் நம்மை அனுகாமல் நம்மை காத்து. அவருடைய வல்லமையை நம்பி அமைதியுடனும் தாழ்ச்சியுடனும் நன்மைகள் செய்து இயேசுவின் பாதையில் பயணிப்போம். ஆன்மிகத்தில் இறைவனுடன் மலருவோம்.

சிந்திப்போம்: இயேசுவின் வார்த்தைகளால் நமது ஆன்மாவை நனைப்போம்
உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள். மத்தேயு:26:41

யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? லூக்கா:22:47

உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். மத்தேயு:26:52

உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர். யோவான்:18,37

ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்: என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து. வெளியே சென்று மனம் நொந்து அழுதார். லூக்கா:22:61-62

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என ஊறுதியாக உமக்குச் சொல்கிறேன். லூக்கா: 23:43

தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. லூக்கா:23:34

இவரே உம் தாய். யோவான்:19:27