இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






‘திருக்குடும்ப விழா, நல்லதொரு குடும்பம் செய்வோம்’

முதல் வாசகம்: 1சாமுவேல் 1,20-22.24-28
திருப்பாடல் 84,1-2.4-5.8-9
இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2.21-24
நற்செய்தி: லூக்கா 2,41-52


முதல் வாசகம்
1சாமுவேல் 1,20-22.24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஷநான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்| என்று சொல்லி, அவர் அவனுக்குச் ஷசாமுவேல்| என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: ஷஷஎன் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.|| அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

அ. சாமுவேல்: 
உண்மையில் சாமுவேலின் பெயரின் அர்த்தம் என்ன? என்பது சில விவிலிய ஆய்வாளர்களின் தேடல், இங்கே ஓர் அழகான ஷசெம்மொழி சிலேடையை| பாவிக்கிறார் ஆசிரியர். שְׁמוּאֵל (ஷெமுஎல்) என்கின்ற சொல் வழக்கம் போல் மூன்று மெய்யெழுத்துக்களைக் கொண்டமைந்துள்ளது அவை, שׁמא செவிமெடு| என்று பொருள், ஷவரம் கேள்| என்பதற்கு שָׁאַל ஆக வரவேண்டும், இப்படிவந்தால் அது ஆசிரியருடைய கருத்தையோ, பெயரையோ குறிக்காது, சிலர் உண்மையில் இது சவுல் அரசரைக் குறிக்கிறது என்பர், ஆனால் இந்த வாதத்துக்கு அதிக வாய்ப்பு இக்கதை அமைப்பில் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம், ஆசிரியர் இங்கே இறைவாக்கினர் சாமுவேலைத்தான் குறிக்கிறார், அவருடைய பெயரின் அர்த்தமும், எழுத்தும் ஒத்துப்போகவில்லை.
ஆ. ஆனால் அன்னா செல்லவில்லை:
முழு குடும்பமும் யாத்திரை செல்லும் போது அன்னா செல்லவில்லை என்பதைக் காட்டி, அக்கால பெண்களின் தனிமனித சுதந்திரத்தை காட்டுகிறார். அன்னாவிற்கு ஆலயத்தைவிட வீட்டில் முக்கியமான வேலை இருப்பதை உணர்கிறார்.  இ. அன்னாவின் கட்டளை:
அன்னா இங்கே தன் கணவரிடம் இரஞ்ச வில்லை, சம உரிமையோடு பொறுப்பாக பேசுகிறார். முடிவையும் அவரே எடுக்கிறார். 23வது வசனம் (இன்றைய வாசகத்தில் இல்லை) நல்ல கணவனின் பண்பைக் காட்டுகிறது. ஏற்கனவே அன்னா எடுத்த முடிவை மதிக்கிறார், எல்கானா.  (பி.கு. கணவனை அரசனாகவோ-அதிகாரியாகவோ அல்லது மனைவியை சண்டைக்காரியாகவோ பார்க்கும் சிலருக்கு இவர்கள் நல்ல பாடம் சொல்கின்றனர்).
ஈ. பலிப்பொருட்கள்:
வழமையாக பலிப்பொருட்களை ஆண்களே கொண்டுவருவதனைப் பார்க்கிறோம், இங்கு அன்னாதான் பலிப்பொருள்களைக் கொண்டுவருகிறார். அவர்தான் இங்கே கதாநாயகி. பலிப்பொருட்களில் அக்கால கட்டளைப்படி பொருட்களைக்கொண்டு வருகிறார் (மாவு, இரசம், காளை). மூன்று காளைகளைக் கொண்டுவந்தாரா? அல்லது மூன்று வயது காளையைக் கொண்டுவந்தாரா? என்பது தெளிவாக இல்லை. எபிரேய விவிலியம் காளைகள் என்று சொல்லி பின் காளை என்று சொல்கிறது.  உ. சீலோ இல்லம்:
வட நாட்டில் இருந்த இந்த ஆண்டவரின் இல்லம், அரசர்கள் காலத்திற்கு முந்தியது, இங்கே ஆண்டவரின் சந்திப்புக் கூடாரமும், ஒரு பலிப்பீடமும் இருந்ததென்பர். ஆரோனுடைய குருத்துவத்தோடு தொடர்புபட்ட இந்த இடம், பெத்தேலை ஒத்தது. தாவிதினுடைய எழுச்சியும், எருசலேம் ஆலயத்தின் வருகையும் பிற்காலத்தில் இந்த இடத்தை அதிகாரபூர்வமற்ற வழிபாட்டிடமாக்கியது. வடநாட்டுக்காராக்களும், சவுல் மன்னரும் இவ்விடத்தை பெரிதும் மதித்தனர். இங்கே நிச்சயமாக ஆண்டவரின் பிரசன்னம் இருந்ததை விவிலியம் காட்டுகிறது. ஆண்டவர் சாமுவேலிடம் போசியதும் இங்கேதான். 
ஊ. ஏலியிடம்:
ஏலி இங்கே பணிபுரிந்த குரு, ஒரு நீதிபதியாகவும் கருதப்பட்டார் (1சாமு 4,18), பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்காத தகப்பனாக விவிலியம் இவரைக் காட்டுகிறது (1சாமு 2,12), அன்னா அவசரப்பட்டு தவறாக கருதுகிறார். அன்னா ஏலியை மரியாதையுடனே பார்கிறார், தனது வாக்கினையும் நிறைவேற்றுகிறார்.  (தங்களைத் முதலில் திருத்தாமல், அவசரப்பட்டு மற்றவருக்கு முடிவெடுக்கும் குருக்களுக்கும், மௌனமாக நற் பாரம்பரியங்களை கற்பிக்கும் அன்னையர்க்கும் இவர்கள் நல்ல உதாரணங்கள்)
எ. ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவன்:
சிலர் இவ்வர்ப்பணிப்பை ஷநாசிரேத்து| அர்ப்பணிப்பாக கருதுகின்றனர் ஆனால் பாடம் இவ்வாறு சொல்லவில்லை (சிம்சோன் ஓர் நசிரேத்துவாக அர்ப்பணிக்கப்பட்டவர்). சில ஆய்வாளர்கள், இங்கே ஆசிரியர் சவுல் மன்னனையும் அவரது பிரமாணிக்கமில்லா அழைப்பையும் சாடுவதாக இக்காட்சிகளைக் காண்கின்றனர். வசனங்களை ஆராய்ந்தால் அவை சாமுவேலையே குறிக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால் ஏலியின் மைந்தர்களை கடவுள் புறக்கணித்தது போல சாமுவேலின் மைந்தர்களையும் புறகணித்தார், அவர்களின் தீவினையின் பொருட்டு (1சாமு 8,1-3), சவுலையும் புறக்கணித்தார். தலைவர்கள்; யாராக இருந்தாலும், வழுவினால் புறக்கணிக்கப்படுவார்கள்!



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 84,1-2.4-5.8-9

பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர். 1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!  2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. 4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.  5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. 8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்!  9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்.

இது ஒருவகை எருசலேம் திருப்பயண திருப்பாடல் அல்லது சீயோன் பாடல். கோராவினுடைய அல்லது கோரா பிரிவினரால் எழுதப்பட்ட பாடல்களில் ஒன்று எனக்கொள்ளலாம். எருசலோம் ஆலயத்தை, பலவகை பெயர்களால் (முற்றம், வாயில், பீடம், இல்லம், சீயோன்) அலங்கரிப்பதனால், ஆசிரியரின் எருசலேம் மீதான காதல் புரிகிறது.
வ 1-2: உலகில் எத்தனை வகை இன்பங்கள் இருந்தாலும் தனது ஆன்மாவும், இதயமும், சதையும் வாழுகின்ற ஆண்டவரின் இல்லத்திற்காக ஏங்கிப் பாடுவதாக கூறுகிறார்.
வ 4-5: ஆசிரியர் ஆண்டவர் இல்லத்தில் தொடர்ந்து இருக்கும் குருக்களில் வியப்படைகிறார். சீயோனிற்கான பாதைகள் இதயத்தில் பதிந்துள்ளது என்கிறார். அதனையே தமிழில் ஷஷஉள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது|| என்று மொழிபெயர்கப்பட்டு;ள்ளது. 
வ 8ல்: ‘ஒருபோகு நிலை’ (இருசொல் இயைபணி) பாவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். படைகளின் ஆண்டவர்-யாக்கோபின் கடவுள் (אֱלֹהִים צְבָאוֹת - אֱלֹהֵי יַעֲקֹב  எலோஹிம் ட்சபாஒத் - எலோஹே யா|கொப்)
வ 9ல்: திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்பது, இடப்பெயர்வுக்கு முன் அரசர்களைக் குறித்திருக்கும், பின்னர் தலைமைக்குருக்களையோ அல்லது மக்களின் பிரேதேச தலைவர்களையோ குறித்திருக்கும்.



இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2.21-24

1.அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. 2.என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.  21.அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். 22.அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

அமைப்பிலும் இறையியலிலும் யோவான் நற்செய்தியை ஒத்திருக்கும், யோவானின் மடல்கள் மிகவும் ஆழமான வரிகளைக் கொண்டவை. திருமுகங்கள் என் அழைக்ப்பட்டாலும் ஷயாருக்கு| ஷயாரால்| போன்ற திருமுக பன்புகளை இங்கே காணமுடியாது. கிறிஸ்தவம் ஷஅறிவுவாதிகள்| என்னும் ஒரு பிரிவினருடைய போதனைகளால் தாக்கப்பட்டபோது இந்த மறையுறை தொகுப்புக்கள் எழுதப்பட்டிருக்கலாம்.
வ.1: τέκνα θεοῦ κληθῶμεν  καὶ ἐσμέν: கடவுளுடைய பிள்ளைகளாக அழைக்கப்படலாம் ஆக அவ்வாறே இருக்கிறோம்| யோவான் குடும்பத்திற்கே உரிய சொற்பிரயோகம். யோவான் கிறிஸ்தவர்களை கடவுளுடைய பிள்ளைகள் என்று சொல்வதன் மூலம் எல்லாவிதமான வேற்றுமைகளையும் தகர்க்க முயல்கிறார். 
ὁ κόσμος கொஸ்மோஸ், உலகம் என்று யோவான் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மிகவும் சாதூர்தியமாக இருக்கும். இது இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களையோ, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களையோ, யோவானின் திருச்சபைக்கு ஏதிரான கருத்துக்களை பரப்பியவர்களையோ அல்லது அறிவுவாதிகளையோ குறிக்கலாம். 
வ.2. இன்னும் வெளிப்படவில்லை: (οὔπω ἐφανερώθη ஊபோ எபானெரோதே) இது அக்கால திருச்சபைக்கு பெரிய சிக்கலாகவே இருந்தது. சிலர் ஆண்டவர் வந்துவிட்டார் அங்கே இங்கே என்று பல கதைகளைச் சொன்னதால் யோவானுக்கு தன் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இயேசு இரண்டாம் முறை வரும்போது எப்படி இருப்பார் எனும் கேள்விக்கு (ὀψόμεθα αὐτόν καθώς ἐστιν ஒப்ஸ்சோமெதா அவ்டொன், காதோஸ் எஸ்டின்) ஷஅவரைப் பார்ப்போம், அவர் இருப்பதைப் போல| என்று பதிலலிக்கிறார். யோவான், கடவுள் மோயிசனுக்கு வெளிப்படுத்தியதை இங்கே ஞாபகப்படுத்துகிறார் என நினைக்கிறேன் (காண். வி.ப 3,14:  אֶהְיֶה אֲשֶׁר אֶֽהְיֶה  'எஹ்யேஹ் 'அஷேர் 'அஹ்யேஹ-; இருந்து கொண்டு இருக்கிறார் அவர் இருந்துகொண்டு இருக்கிறார்). இருத்தல் என்ற எபிரேய வினைச் சொல்லுக்கும், எபிரேயர்கள் கடவுளுக்கு பிரத்தியோகமாக பாவிக்கும் சொல்லிற்கும் தொடர்ப்பு இருக்கிறது. 
வ.21. மனச்சான்று என்று யோவான் இதயத்தையே இங்கு குறிப்பிடுகிறார் (καρδία கார்தியா) இங்கே ஒரு எதிர்காலத்திலே பேசுகிறார். ஆக மற்றவருடன் வாதிடுவதன் முன் ஒருவர் தன்னில் சரியாக இருக்கவேண்டும் என்பது நியதி.
வ.22. கட்டளைக் கடைப்பிடிப்பதும் கடவுள் விரும்புவதைச் செய்வதும் ஒன்று எனும் வாதம் மீண்டும் மீண்டும் யோவான் நற்செய்தியில் வருவதை இங்கு நோக்க வேண்டும்.
வ.23-24. அந்த கட்டளை எது என்று விளக்கம் தரப்படுகிறது. இயேசுவை நம்புதலும், ஒருவர் மற்றவரை அன்பு செய்தலுமாகும். (ஒப்பிடுக: யோவான் 12,49: 13,34: 14,15: 14,21: 15,10: 15,12) ஷஆண்டவரோடு இணைந்திருத்தல்-  (μένω மெனோ) என்பது யோவானுடைய  இன்னுமொது இறையியல் வாதம்.