இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)


குருத்து ஞாயிறு

‘ இலட்சியப் பயணிகளாக ’

எசா 50‘4-7
பிலி 2‘6-11
மத் 26‘14-27,66

குருத்தோலையைக் கரங்களில் ஏந்தி, ஓசான்னா கீதம் பாடி, தரையினில் தன்னுடைகளை விரித்து, ஆண்டவரை தலைவராக மீட்பராக, செம்மறியாக கருதி, இலட்சியப் பயணம் மேற்கொள்ள நாம் தயாரா?

எருசலேம் யாத்திரை இயேசுவின் புரட்சி ஒவ்வொரு புரட்சிக்கும் பிறகும் ஒரு வீரவரலாறு ஒழிந்திருக்கும். இன்றைய எருசலேமின் திருபவனியை -குருத்து ஞாயிறை- ‘இயேசுவின் புரட்சி’ என்றே அழைக்கலாம். இது ஒர் இலட்சியப் பயணம்! இலக்கு நோக்கிய புரட்சிப் பயணம். வரலாற்றில் இரண்டு யாத்திரை-பவனி- முக்கியமானவை. முதலாவதாக, மாசேதுங்கின் மரண யாத்திரை‘ சீனாவில் 1911 ஆம் ஆண்டு சீனாவின் தந்தை என்றழைக்கப்படும் சன்யெட்சன் ‘தைப்பிங் புரட்சி’ செய்து மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொணர்ந்து மக்களாட்சியை மலரச்செய்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு சியாங்கே ஷேக் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இன்னொரு புறம், மாசேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்து வந்தது: விவசாயிகளுக்காக குரல் போராடியது. இந்த செஞ்சேனையை ஷேக் கடுமையாக ஒடுக்கினார். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுடன் சமரசம் செய்துகொண்ட ஷேக், செம்படையை இல்லாதொழிக்க முயன்றார். 1934 அக்டோபர் 16ந்தேதி, செம்படையின் தலைமையகமான கியாங்சி மாநிலத்தை சுற்றி வளைக்க ஆரம்பித்த போது, செம்படையினர் 1 லட்சம் பேர் அங்கிருந்து கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர். காடுகளையும் மலைகளையும், கடந்து, பயணத்தைப் மேற்கொண்டனர். வழிகளில் பலர் கொடிய மிருகங்களிடம், சிக்கி உயிர் இழந்தனர்: ஆற்றில்; அடித்துச் செல்லப்பட்னர்: மலைச்சரிவுகளில் செத்துமடிந்தனர். நோயிலும் பட்டினியிலும் மடிந்தனர். ஆனாலும்கூட வழியில் எதிர்ப்பாளர்களுடன் போரிட்டபடியே, 12500 கிலோமீட்டர் தூரத்தை, 368 நாட்களில் கடந்து, 1935 அக்டோபா; 20ந்தேதி ஷென்சி நகரை 6000பேர் அடைந்தனர். இதுதான் வரலாற்றில் மிக நீண்ட நெடிய நடைப்பயணம். இந்த யாத்திரைதான் சீனாவில் கம்யூனிசம் பரவ வழிவகுத்தது. முடிவில் வெற்றியில் முடிந்தது.

இரண்டாவதாக, காந்தியின் தண்டி யாத்திரை‘ உப்புக்கு ஆங்கிலேய அரசு அநியாய வரி விதித்ததை எதிர்த்து காந்தி உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். சபரிமதி ஆஸ்ரமத்தில் இருந்து, மார்ச் 12, 1930 அன்று அதிகாலை 78 தொண்டர்களுடன் 61வயதான காந்தி, சூரத் நகர் அருகில் உள்ள தண்டி என்ற இடத்தை (கடற்கரையை) நோக்கி நடந்தார். 24 நாட்களில் 241 மைல்கள் நடந்தார். ஏப்ரல் 6ந்தேதி உப்பளத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தை மீறனினார். முன்னர் கைதுசெய்யாத பிரிட்டிஷ் அரசு, தரிசானா உப்பளத்தை முற்றுகையிடப்போகிறேன் என்றவுடன், மே மாதம் 5ந்தேதி கைது செய்து புனே எரிவாடா சிறையில் அடைத்தது. விடுதலைக்கான இந்த இலட்சிய யாத்திரை சுதந்திர வேட்கையை எல்லோர் மனதிலும் விதைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் எருசலேம் திருபவனி (யாத்திரை) விவிலிய முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய இயேசுவின் எருசலேம் யாத்திரைதான் அவருடைய கல்வாரிப் பாதையின் முதல் நிலை எனலாம். இயேசுவின் இந்த எருசலேம் யாத்திரை தீர்க்கமானது: நெடுநாள் காத்திருப்புக்கும், கடின உழைப்பிற்கும் பிறகு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட யாத்திரை. இது ஒர் இலட்சியப் பயணம். இந்த இலட்சியப் பயணம் கல்வாரியில்தான் முடியும் என்பதை கழுதையில் மேலிருந்தவர் அறிவார். இன்று கழுதையால் சுமக்கப்படுபவர் நாளை சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பதை அறிவார். ஆகையால் இது ஒரு இலட்சியப் பயணம்! வரலாற்றுப் புரட்சி!

எருசலேமே இலட்சியமாய்...... மரணமே குறிக்கோளாய்..... ஆண்டவருடைய வாழ்வில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் எருசலேமை நோக்கித்தான் அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று. அவருடைய பேச்சிலும் மூச்சிலும் அதற்கு தனியிடம் இருந்தது. பன்னிரு வயதில் எருசலேம் ஆலயத்தில் காணாமல் போன போதுகூட தன் தாயை நோக்கி, ‘ஏன் என்னைத் தேடினீh;கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?’ என்றவர்தானே இயேசு. ஒரு யூதனாக அல்ல: மாறாக ஓர் இறைவாக்கினராக, தந்தையின் திருவுளம் நிறைவேற்றும் இறைமகனாக அவர் எருசலேமை மிகவும் அன்புச் செய்தார். தன் நண்பனின் மரணத்திற்காக (லாசருக்காக) கண்ணீர் வடித்தவர் எருசலேம் நகரத்தின் அழிவிற்காக அழுவது அதன் மேல் கொண்டிருந்த அன்பிற்கு சான்றாகும்.

இந்த எருசலேமில்தான் தன்னைக்குறித்து இறைவாக்கினர் எழுதியதெல்லாம் நிறைவேறும் என்று நம்பினார் (லூக்18‘31). அங்குதான் இறையரசு வெளிப்படும் என்று எடுத்துரைத்தார்( லூக்19‘11). அங்கேதான் தான் ஒர் இறைவாக்கினர் என்ற முறையில் இரத்தம் சிந்த வேண்டும் என்று அறிந்து (லூக்13‘33) உருமாற்றத்தின் போது எருசலேமில் தனக்கு நிறைவேறவுள்ள சாவை மோசேவுடனும் எலியாவுடனும் விவாதித்தார் (லூக்9‘31): எருசலேமை நோக்கி அவர் முனைந்து நிற்கிறார் (லூக்9‘51). தன் சாவை தம் சீடர்களுக்கு மூன்று முறை அறிவித்தார் (லூக் 18‘31-34). இப்படி எருசலேமே இலட்சியமாய், தன் மரணமே குறிக்கோளாய் கொண்டிருந்தார். ஆகையால் தான் தன் மரணத்தின் விளம்பில்கூட கண்ணீர் சிந்தி அழுத எருசலேம் நகரப் பெண்களைப்பார்த்து ‘நீங்கள் எனக்காக அழவேண்டாம்: மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்று எருசலேமின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிந்தது. இந்த இலட்சியப் பயணம் கல்வாரியில் சிலுவையில் தன் மரணத்தில் முடிவடையும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலுடை விரித்து மேற்கொள்ளச் செய்யும் இப்பயணம், தன் மேலாடையை களைந்து தன்னை நிர்வாணியாக்குவதில் முடிவடையும் என்பதையும் உணர்ந்திருந்தார். இலக்கை அவர் அறிவார். ஆகையால் நாம் கரங்களில் ஏந்தியிருக்கிற இந்த குருத்தோலைகள்கூட முடிவில் சிலுவைகளாக நம் இல்லங்களில் இடம் பெறுகிறது. ஓலை ஏந்திய இந்த பயணம் சிலுவையில்தான் முடியும் என்பதற்கான அடையாளமே இதுவாகும்.

இழப்பவர்களால் மட்டுமே பயணிக்க முடியும்! பயணத்தில் பங்குப்பெற வேண்டுமானால் எதையாவது இழந்தேயாக வேண்டும். இழக்காதவர்களுக்கு இங்கே இடமில்லை. சீடர்கள் இது ஆண்டவருக்குத் தேவை என்று ஓட்டிவரப்பட்ட கழுதையின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு இயேசுவை அமரச் செய்கின்றனர், கூடியிருந்த மக்களோ, தங்கள் மேலுடைகளை வழியில் விரித்து கொண்டே சென்றனர். அங்கே சீடர்களும் மக்கட்கூட்டத்தாரும் களைந்தது மேலுடைகளை மட்டுமன்று: தங்களுடைய ஆணவம் பதவி வெறி, அலட்சிய மனப்பான்மை அனைத்தையும் தான். இயல்பை மறைத்த அனைத்தையும் களைந்தெறிகின்றனார் சீடர்கள் வலப்புறமா? இடப்புறமா? யார் பெரியவன்?.. என அத்தனை ஆணவத்தையும் வேரறுக்கிறார்கள். மக்களோ கடினமனம், வணங்கா கழுத்து, என அனைத்தையும் கொன்று ஆர்ப்பாpக்கின்றனர். ஆகையால் தான் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஓசான்னா பாட முடிந்தது.

அவர்கள் பாடிய ‘ஓசான்னா’ கீதம் வெற்றியின் கீதம்: முழுமையான சரணாகதியின் சரணமும் கூட. ஓசான்னா என்ற இந்த சொல்லாடல் திருப்பாடல் 118‘25லிருந்து வருகிறது -ஆண்டவரே மீட்டருளும்! ஆண்டவரே வெற்றி தாரும்!; . யூதர்கள் ஒவ்வொருமுறையும் விழாக்களைக் கொண்டாடும் தருணங்களில் கரங்களில் ஒலிவக் கிளைகளை ஏந்தி, ‘ஆண்டவரே மீட்டருளும்’ என்று உரக்க முழக்கமிட்டனா;. விழாவின் இறுதிநாள்கூட ஒசான்னா நாள் என்றே (The Great Hosanna) குறிப்பிட்டனர்(118‘27). சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஓசான்னா என்றால் ‘காப்பாற்றும்’ என்று பொருள் (காண்க 2சாமு14‘4: 2அரச6‘26). ஓசான்னா என்றால் ‘வாழ்க! போற்றி’ என்று பொருள். இப்படி ஓசான்னா வெற்றியின் கீதம்: அதே சமயம் மீட்பை எதிர்பார்க்கும் உதவியின் கீதமும் கூட. ஓசான்னா இப்போது வாழ்க என்று பொருள்படும்! ஆனால் கல்வாரியில் ‘எங்களைக் காப்பாற்றும்’ என்று பொருள்படும்.

இயேசுவிலேதான் (மரணத்தின் மீதான) வெற்றி அடங்கியிருக்கிறது: இயேசுவால் மட்டுமே நம்மனைவரையும் மீட்கமுடியும் என்ற நம்பிக்கையின்; அடிப்படையில்தான் இவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த இலட்சியப் பயணத்திலே இத்தகைய அமைந்த உள்ளம் நம் அனைவருக்கும் தேவை. என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து என் சிலுவையைச் சுமந்துக்கொண்டு பின்சொல்லட்டும் என்ற இயேசுவின் எச்சரிக்கையோடு எதையாவது இழந்து இயேசுவைப் பின் செல்வோமா? இந்த வாரம் புனித வாரம் என்று கொண்டாடப்படுகிறது. வாரம் புனிதம் ஆக வேண்டுமானால் நாம் எதையாவது இழந்துதான் ஆக வேண்டும். உரிமையாளன் கழுதையை இழந்தான்: மேலுடை அணிந்திருந்தவன் ஆடை இழந்தான். ஒலிவ மரம் தன் கிளையை இழந்தது. இயேசு தன்னையே இழந்தார் (கேனோசிஸ்- இரண்டாம் வாசகம்) துன்புற்றார் (முதல் வாசகம்) நம்மை மீட்டார்.

இந்த கழுதைப்பயணம் அஹிம்சையின் பயணம்! பொதுவாக, போருக்கு செல்பவர்கள் விரைந்து செல்லும் குதிரையில் பயணிப்பார்கள்: இங்கே இயேசு வெற்றியின் வீரராக.. சமாதானத்தின் தூதுவராக அஹிம்சைவாதியாக,ஆரவாரமில்லாமல் போரில் வெற்றிப்பெற்றபிறகு அன்ன நடைபோடும் கழுதையில் அமர்ந்து நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் நிறைந்தவர் எண்பித்து உரோமைப்படைவீரர்கள் வாயடைக்க எருசலேமை நோக்கிப் பயணிக்கிறார். போடாமலே வென்று, செயல் முடிவுக்கு வருவதற்கு முன்பே கொண்டாடி மகிழ்ந்து,. உண்மையில் இது மனுமகனின் வெற்றித்திருப்பயணம்தான்.

இலட்சியப் பயணிகளாக.. ஆனால் இங்கே இலட்சிய பயணிகளின் எண்ணிக்கை குறைவே. கல்வாரியில் முடிவடைந்த இப்பயணத்தில் கடைசிவரை நிலைத்திருந்தவர் சிலரே! ‘ஒசான்னா! தாவீதின் மகனுக்கு ஒசான்னா’ என்று வெற்றி முழக்கமிட்ட இதே மக்களினம் ‘ ஒழிக! ஒழிக! இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலைச் செய்யும்’ என்று திசை மாறியது. ‘ஆண்டவர் பெயரால் வருபவர் வாழி’ என்ற இக்கூட்டம் ‘ அவனைச் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்’ என்று இலட்சியம் தடுமாறியது. மீட்பில் பங்கேற்கவில்லை!

இந்த எருசலேம் நோக்கிய பயணம் கல்வாரியில் முடியும் என்பதால் துணிவு நமக்கு வேண்டும்! திருச்சபையை மூவகையாகப் பகுத்துப்பார்க்கலாம். முதல்வகைத் திருச்சபை பயணிக்கும் திருச்சபை-இரண்டவாது துன்புறும் திருச்சபை -மூன்றாவது வெற்றித்திருச்சபை! பயணிக்கும் திருச்சபை இவ்வுலகத் திருச்சபை! துன்புறும் திருச்சபை உத்தரிக்கிற திருச்சபை! வெற்றித்திருச்சபை விண்ணகத் திருச்சபை! இம்மூன்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இவ்வுலகில் பயணிக்கும் திருச்சபை விண்ணகத் திருச்சபையை (எருசலேமை) வெற்றித்திருச்சபையை நோக்கி பயணிக்கிறது. இது ஒரு இலட்சியப் பயணம்! ஆகையால்தான் இலட்சிய பயணிகளாக வேண்டும். நாம் விண்ணகம் நோக்கி பயணிப்பவர்கள் என்பதைத்தான் இந்த பவனி அடையாளப்படுத்துகிறது.

ஆகையால் புனித வாரத்தில் நாம் மேற்கொள்ளும் இந்த பயணம் நம்மைப் புனிதப்படுத்தி வெற்றியின் கீதங்களை நாவினில் இசைத்து, கிளைகளை கைகளில் ஏந்தி, விண்ணக எருசலேமில் இடம் பெற செய்திடட்டும். இயேசுவை மீட்பராக, தலைவராக கொண்டவர்களால் மட்டுமே ஓசான்னா பாடமுடியும்! தன்னை தன் மேலுடையை இழந்து அவருக்கு அரசருக்கு மகிமையளிக்க முடிந்தவர்களால் மட்டுமே எருசலேமை அடைமுடியும்! பரிசேயத்தனம் பதவிவெறி கொண்டவர்கள் தடுமாறி வீழ்ந்து விடுவார்கள்! ஆனால் ஆனால்.. கல்வாரி வரை கடைசிவரை இலட்சியத்தை அடைந்தவர்கள் ஒரு சிலரே! அவரை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தவர்களும், முத்தமிட்டு கறைபடுத்தியவர்களும், ஆளைவிட்டால் போதும் என்று ஆடையின்று இருளில் மறைந்தவர்களும், ஏராளம்: தாராளம்.

தடுமாறிவருக்கு தோள் கொடுத்த சீமோன்: காயம்பட்டு, களைப்புற்று அல்லாடியவருக்கு முகம் துடைத்து ஆறுதலளித்த வெரோணிக்கா: பேச வார்த்தையில்லாமல் இடையில் சந்தித்து தன் ஆதரவை ஈந்த அன்னைமரியாள், அன்பால் தன் உடனிருப்பை உணர்த்திய அருளப்பர், தியாகத்தால் தன் சரணாகதியை எண்பித்த அரிமத்தியா சூசை, இறந்த பிறகும்கூட ஆவலாய் பணிவிடை புரிய தன்னையே அர்ப்பணித்த மக்தலேன் மரியாள் என்று இலட்சியவாதிகளை-இலட்சியப் பயணிகளை-விரல் விட்டு எண்ணிவிடமுடியும்! கூட்டத்தில் ஒருவராய் மறைவதைவிட தன் பணியால் வாழ்வால், சாட்சியத்தால் தொpவது மேலானது. இலட்சியப் பயணிகளாக இயேசுவை இறுதிவரை பின்செல்ல விண்ணகம் எருசலேமை நோக்கிப் பயணிக்கலாமா?