இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு

கடவுளுக்காக வாழ்கிறவர்கள்

2அர 4:8-11,14-16 உரோ 63:4,8-11 மத் 10:37-42

நாம் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்து கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியாhர் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் (6:11) எடுத்துரைக்கிறார். இந்த வரையறைதான் கிறிஸ்தவருக்கான அடையாளம்: இன்றைய முதல் வாசகத்தில் கடவுளுக்காக அஞ்சி நேர்மையான வாழ்க்கை வாழ்ந்த இறைவாக்கினர் எலிசா, சூனேமின் பணக்கார பெண்மணிக்கு பிள்ளைவரம் தருகிறார். நேர்மையான வாழ்க்கை வாழ்கிறவர்கள், இவ்வுலகம் கடவுளைக் கண்டுகொள்ள துணையிருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக இது அமைகிறது. பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்து, கிறிஸ்துவுக்காக அனைத்திலும் நேர்மையாக, உண்மையான சீடராக வாழ்வதென்பது மிகப் பெரிய சவால். இதனைத்தான் இன்றைய நற்செய்தியில் ‘சீடத்துவப் பாதையைக் குறித்து விவரிக்கிறார். நீங்கள் இயேசுவீன் சீடராக இருக்க சிலுவையைச் சுமக்க வேண்டும் என்கிறார். கடவுளுக்காக வாழ்கிறவர்களால் மட்டுமே கடவுளை அன்புச் செய்ய முடியம்: சக மனிதரையும் அன்புச் செய்ய முடியும்: உலகை கிறிஸ்துவுக்குள் உய்விக்க முடியும்.

மிஸ்டர் கிளின்

கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் சேர்தலா கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மத்திய இராணுவ அமைச்சர் யு.மு.அந்தோணி. கத்தோலிக் கிறிஸ்தவர். அப்பா பெயர் அரக்கபப் பரம்பில் குரியன் பிள்ளை: அம்மா அலெய் குட்டி. சிறுவனாக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். குடும்பம் வறுமையில் வாடியது. மூன்று வேளை உணவு என்பதுகூட சாத்தியமில்லாத சூழல். அருகிலுள்ள அரசாங்க பள்ளிக்கூடத்தில் உயர்கல்வி பயின்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.: எர்ணாகுளம் சட்டக்கல்லூரியல் பி.எல். படிக்கும்போது மாணவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார்: படகு கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி போராடினார்: அரசியல் அவரை ஈர்த்தது: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்: படிப்படியாக உயர்ந்தார்.

இந்திரா காந்தியிடம் நேருக்கு நேராக ‘நீங்கள் எமர்ஜென்சி கொண்டுவந்ததில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று சொன்னார். கேரள காங்கிரஸ் கட்சியில் முதலாவது இளைய தலைவர் அந்தோணிதான். அங்கு முதல்வராக (1977) பதவி வகித்த முதல் இளைஞரும் இவரே. சிக்மக்@ர் இடைத்தேர்தலில் இந்திராகாந்தி கள்ள ஓட்டு மூலம் வெற்றிப்பெற்றார் என்று எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அதனை மறுக்கிற விதமாக முதல்வர் பதவியைத் துறந்தார்: அரசியலிலிருந்து விலகினார்: ஆனால் இந்திராவின் வற்புறுத்தலைத் தொடர்ந்து மீண்டும் அரசியலில் ஈடுபட்டார். நரசிம்மராவ் ஆட்சியில் அந்தோணி அமைச்சராக இருந்த போது கரும்பு கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவருடைய துறை சம்பந்தப்பட்டது அல்ல என்ற போதும் ராஜிநாமா செய்தார்: அப்போது அவருடைய வங்கி கையிருப்பு எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.6000தான். மந்திரி சபையில் இவருக்கு பெயர் ‘மிஸ்டர் கிளின்’. ‘தென்னாட்டு சாஸ்திரி’. அந்தோனியின் மனைவி எலிசபெத். திருவனந்தபுரம் கனரா வங்கியில் முதுநிலை அதிகாரி. இரண்டு மகன்கள். மூத்தவர் அஜித் பால் அந்தோணி: இளைய மகன் அனில் குரியன் அந்தோணி. திரு.அந்தோணி அவர்களின் அக்கா கேரளாவில் கன்னியாஸ்திரியாக உள்ளார். இராணுவ அமைச்சர் திரு. யு.மு அந்தோணி பத்தரை நாட்டு தங்கம். இது வரை எந்த ஊழலிலும் சிக்காதவர்: மிஸ்டர் கிளின். இவரது குடும்பத்தில் பொருளாதார சக்தி மனைவி எலிசபெத் தான். இவரது வருமானத்தில்தான் குடும்பம் சக்கரம் சுழல்கிறது. இவரைப் பெண் பார்க்கும்போதே ‘நான் ஒரு மக்கள் சேவகன்: என்னிடம் இருந்து நீ மாதந்தோறும் வருமானம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் உன் வருமானத்தில்தான் நானே சாப்பிட்டாக வேண்டும்’ என்று சொன்னாராம்.
69வயதாகும் மத்திய மந்திரி யு.மு அந்தோணியின் சொத்த மதிப்பு ரூ.32,836தான். அமைச்சருக்கான இல்லத்தில் இருக்கும் இவரது ஒரே சொத்து சிறிய வானொலி மட்டும்தான்: சொந்த வாகனம் ஏதும் கிடையாதாம். மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறார்: அப்போதெல்லாம் அவர் தலைமைச் செயலக உணவகத்தில்தான் சாப்பிடுவாராம்.
அதிகார நாற்காலிக்காக கொள்கைக் கோட்பாடுகளை காற்றில் பறக்க விடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மனிதருள் மாணிக்கமாக, அரசியில் ஞானியாக திகழும் கத்தோலிக்க கிறிஸ்தவரான திரு.ஏ.கே.அந்தோணி மிகுந்த பாராட்டுக்குரியவரன்றோ? இயேசுவின் சீடரன்றோ? . கடவுளுக்காக வாழ்கிறவர்களில் இவரும் ஒருவர். மிகச் சிறந்த, நேர்மையான அரசியல்வாதி.
கிறிஸ்தவின் சீடர்களாக இருப்பதென்பது மிகுந்த சவாலுக்குரியது. கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி சாட்சிய வாழ்வு வாழ்வதென்பது அவ்வளவு எளிதான காரியமன்று. சொல்லால் செயலால் கிறிஸ்துவுக்கு சான்றுபகர திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவருமே அழைக்கப்படுகிறோம்.

சீடத்துவப் பாதை- சிலுவைப்பாதை

இன்றைய நற்செய்தி ‘சீடத்துவப் பாதை’ என்பது உண்மையில் அது ‘சிலுவைப் பாதை’ என்று தெளிவாக எடுத்தியம்புகிறது. நற்செய்தியை மேலோட்டமாக படிக்கிறபோது இது ஏதோ பெற்றோருக்கு எதிராக இருக்க வேண்டும்: பெற்றோரைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுபோலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று. இயேசு மிகவும் அழகாக ‘என்னைவிட’ என்று இரண்டு முறை எடுத்தியம்புகிறார். அப்படியெனில் பெற்றோரைவிட, பிள்ளைகளைவிட இயேசுவை மிகுதியாக அன்புச் செய்யN;வண்டும் என்பதுதான் இதில் பொதிந்துள்ள பாடம். கிறிஸ்துவை அன்புச் செய்வதால்தான் நாம் கிறிஸ்தவர்கள். திருமுழுக்குப் பெற்றவர்கள் அனைவருமே கிறிஸ்துவை அன்புச் செய்ய கடமைப்பட்டவர்கள். பங்குச் சந்தைகளில் பரஸ்பரநிதி (மியூட்சுவல் ஃபண்டில்) முதலீடு செய்கிற போது அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதற்குமுன்பு ஒரு எச்சரிக்கை வரி இடம் பெற்றிருக்கும். அவை கொட்டெழுத்துக்களில் அச்சடித்திருக்கமாட்டார்கள்: பொடி எழுத்துகளில் அங்கே இருக்கும். உற்றுப்பார்த்தால் வுhந inஎநளவஅநவெ ளை ளரடிதநஉவ வழ ஆயசமவநவ சளைமள் சுநயன வாந னழஉரஅநவெள உயசநகரடடல டிநகழசந லழர inஎநளவ’ ‘முதலீடு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது: முதலீடு செய்வதற்கு முன்பு ஒப்பந்த விதிமுறைகளை நன்றாகப் படிக்கவும்’ என்றிருக்கும். அது கிறிஸ்தவத்திற்கு முழுமையாகப் பொருந்தும். திருமுழுக்கு என்பது ‘சாட்சிய வாழ்விற்கு உட்பட்டது: தனக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ கடமைப்பட்டிருக்க வேண்;டும்’ என்று ஒப்பந்த விதி அமைகிறது. இதனைத்தான் இன்றைய நற்செய்தி விளக்க முற்படுகிறது.

தன்னைவிட, பெற்றோரைவிட. பிள்ளைகளைவிட கிறிஸ்துவை அன்புச் செய்ய வேண்டும். கிறிஸ்துவுக்காக அவர்களின் வெறுப்பையும் சில சமயங்களில் சம்பாதிக்க நேரிடலாம். கிறிஸ்துவிற்காக பல்வேறு துன்பங்களைத் தாங்க நேரிட வேண்டும். தேவைப்பட்டால் உயிரையும் துறந்திட முன்வர வேண்டும்.குடும்பத்தை விட சமுதாயத்தை அன்புச் செய்ய வேண்டும்: எல்லோரையும் ஏற்று அன்பு செய்திட வேண்டும். இறுதியாக ஏழை எளியவர்கள் மேல் வெறுப்பை உமிழ்ந்திட கூடாது. சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கும் தன்னாலான அன்பை வெளிப்படுத்திட வேண்டும்.

கிறிஸ்துவுக்கு பிரமாணிக்கமாயிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு பிரமாணிக்காமாயிருக்கிறோம் என்று சொன்னால்.. நாம் பாவ வாழ்க்கையை பொறுத்த மட்டில் இறந்தவர்களாயிருக்கிறோம்: கடவுளுக்காக வாழ்கிறவர்களாக துலங்குகிறோம். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் நினைத்திருந்தால் எப்படிவேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம்: ரகசியமாக, பினாமிகளின் பெயரில்.. எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்திருக்கலாம்: மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை. ஆனால் எப்படிப்பட்ட நிலையிலும் நேர்மையாளராக, தூய்மையானவராக அவர் வாழத் துணிகிறார். பாவ வாழ்க்கையைப் பொருத்தவரை அவர் இறந்திருக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கை நம்மிலும் மிளர வேண்டும். உப்பு சாரமற்றுப் போனால்.. என்ற இயேசு வருந்துவது நம்மைக் குறித்துதான்.(லூக் 14:34).

கடவுளுக்காக வாழுங்கள்!

கிறிஸ்தவர்களே சான்று பகருங்கள். ஒரு வீடு கிறிஸ்தவ வீடு என்பதை ஒருவர் மற்றவர்மீது காட்டும் அன்பினால் எண்பியுங்கள்: ஒருவர் கிறிஸ்தவர் என்பதை நடத்தையால் நிருபியுங்கள். சிலுவை அணிவதால் மட்டும் நாம் கிறிஸ்தவர் என்பதை நிருபிக்க முடியாது: கிறிஸ்து பிறப்பின் போது வீடுகளின் முகப்பில் நட்சத்திரங்களைத் தொங்க விடுவதால் மட்;டும் நமது வீடு கிறிஸ்தவ வீடு என்பதை உலகம் அறியாது. ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு உகந்த வாழ்க்கை வாழத் துணிய வேண்டும். எனவேதான் புனித பவுலடியார் மிகவும் ஆணித்தரமாக ‘நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்’ (கலா3:27) என்று சொல்கிறார். கிறிஸ்துவை அணிந்து கொண்டோம் என்;பதற்குப் பொருள் கிறிஸ்துவாக மாறினோம் என்பதாகும். எனவே கடவுளுக்காக வாழ வேண்டும் (உரோ 6:11).

ஆகையால்தான் புனித பவுலடியார் ‘வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலா 2:20) என்று அறிக்கையிடுகிறார். பாவ வாழ்க்கையை வெறுத்து கடவுளுக்கான வாழ்க்கையை அவர் தேர்ந்து கொண்டார். தடுத்தாட்கொண்ட பிறகு கிறிஸ்துவை மிகுதியாக அன்புச் செய்தார்: கிறிஸ்துவுக்காக துன்பங்களை உடலிலும் மனதிலும் சுமந்தார் (2கொரி 11). உண்மையான கிறிஸ்தவனுக்கு சிறந்த முன்னுதாரணம் புனித பவுலடியார். கிறிஸ்துவை மட்டுமே அன்புச் செய்தார்: கிறிஸ்துவுக்காகவும் மற்றவர்களுக்காகவும் வாழ்ந்தார். எனவேதான் வீரியமிக்க அப்போஸ்தலராக, புறவினத்தாரைத் தேடிச் சென்று கிறிஸ்துவை அனுபவிக்கச் செய்தார். உலகம் தூற்றுவதைப் பற்றியும், வலியோர் ஏளனம் செய்வதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. நேர்மையானவராக நெஞ்சம் நிமிர்த்தி வாழ்ந்தார்.

ஆகையால் நாமும் கடவுளுக்காக வாழ முற்படுவோம். கடவுளை மிகுதியாக அன்பு செய்வோம்! அதே சமயம் சக மனிதரையும் அன்புச்செய்வோம். குளிர்ந்த நீரைக் கொடுப்பவர்கூட கைம்மாறு பெறுவார் என்பதை உணர்ந்த அண்டி வருவோரை அள்ளி அரவணைத்து, கிறிஸ்துவின் அன்பை உணரச் செய்வோம்! பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள், கிறிஸ்து இயேசுவோடு, இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் (உரோ 6:11) என்பதை உணர்ந்து வாழ்க்கையில் நேர்மையானவராக வாழ முற்படுவோம்!