இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)


தவக்காலம் முதல் ஞாயிறு

சோதனையில் ...ஆண்டவர் சார்பாக.....

தொநூ 27-9, 3‘1-7
உரோ 5‘12-19
மத் 4‘1-11

கல்லால் இதயம் வைத்து கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம் நடமாட விட்டதடா? - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இத்தவக்காலத்தில், ஆண்டவா; இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை இன்றைய நற்செய்தி விளக்குகிறது. நம்முள் ஒருவராக நம்மை மீட்கப் பிறந்த மனுமகன் மனித இயல்பில் சோதனையை எதிர்கொள்கிறார். அவருடைய திருமுழுக்கு நேர்மறையான முறையில் தம்முடைய பணியை நிறைவேற்ற தயாரிக்கிறது என்றால் அவருடைய பாலைவனச் சோதனையோ எதிர்மறையான முறையில் அவரை பணிவாழ்வுக்கு தயாரிக்கிறது. எனவே தான் திருமுழுக்குப் பெறுதல், சோதிக்கப்படுதல், கலிலேயாவில் பணித்தொடக்கம் என ஒத்தமைவு நற்செய்திகளில் ஒரே கோர்வையாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போராட்டத்திற்குப் பிறகுதான் விடுதலை- சுதந்திரம் பிறக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அவருடைய பாலைவனப் போராட்டம் தொடர்ந்து கல்வாரி சிலுவைப் பாதையின் வழியாக விடுதலை வாழ்வுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. மாசேதுங் சீன விடுதலை வீரர் மாசேதுங் அவர்களின் தலைமையில் அணிவகுத்த செம்படை 1934 அக்டோபா; 16ந் தேதிமுதல் 1935 அக்டோபர் 20ந் தேதி வரை மனவுறுதியுடன் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனத்திலும் 368 நாட்கள் புடமிடப்பட்டது: பலர் மனவுறுதியுடன் இறுதி வரை போராடினார்கள் சீனத்தை வென்றெடுத்தார்கள். ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் போராட்டத்திற்கு பிறகும் ஒரு வீர வரலாறு ஒளிந்திருக்கிறது. ஆண்டவருடைய சோதனை அவரை மனுமகன் என்று அடையாளம் காட்டியது.

இயேசுவும் சோதனைகளும்

ஆண்டவர் இயேசு பாலைவனச் சோதனை மட்டுமல்ல மாறாக, பல்வேறு முறை சோதனைக்குள்ளானார் முரண்பாடுகளால் ஆனதுதான் வாழ்க்கை! நன்மை-தீமை , ஒளி-இருள், உண்மை-பொய்மை என இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை! அதுதான் சோதனை! பகுத்தறிவின் பாதையில் விசுவாசத்தின் வெளிச்சத்தில் உண்மையுள்ளவா;களாக நடந்து நன்மைக்குச் சொந்தக்காரர்களாக, ஒளியின் மக்களாக, உண்மையின் பிம்பங்களாக நாம் தலைநிமிர்ந்திட வேண்டும். சோதனையை வென்றெடுக்கவேண்டும். ஆகையால்தான் காந்தி தன்னுடைய சுயசரிதைக்கு ‘சத்திய சோதனை (யுn நஒpநசiஅநவெ றiவா வாந வுசரவா) என்று பெயரிட்டார். ஆண்டவருக்கு பாலைவனத்தோடு சோதனைகள் முடிந்து விடவில்லை: சிலுவையில்கூட சோதிக்கப்பட்டார்; என்று ‘டுயளவ வுநஅpவயவழைn’ இறுதிச் சோதனை என்ற பெயரில் புனைவுத் திரைப்படம் அண்மையில் வந்தது நினைவிலிருக்கலாம். சோதனை நம்வாழ்வின் ஒர் அங்கம்! பரிசேயரும் சது(தி)சேயரும் வன்மையாக பலமுறை ஆண்டவரைச் சோதித்தனர் அத்தகைய எண்ணத்தோடே அடையாளம் கேட்டனர்(மத் 16‘1) ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா? என்றும், சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? என்று கேள்விகள் கேட்டு சோதித்தறிந்தனர் (மத் 19‘3, மத் 22‘ 18): திருச்சட்ட அறிஞரும் அவரை சோதித்தார் (லூக் 10‘25). எல்லாவற்றையும் விட கேள்வி கேட்காமல் செயல்பாட்டளவில் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை அவர் முன்கொண்டுவந்து அவரை திக்குமுக்காட செய்து சோதித்தனர் (யோவா 8‘6). அவர் அத்தனைச் சோதனைகளையும் வென்றார் வெற்றியின் திருமகனாக வலம் வந்தார். அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பல்கிப் பெருகச் செய்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்தபோது அவர்கள் அவரை பிடித்து அரசராக்கப் பார்த்தார்கள்: கடுமையான சோதனை: அலகையின் மூன்றாவது சோதனை. இப்படி கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றாமலிருக்க விரிக்கப்பட்ட வலையிலே அவர் வீழ்ந்திட வில்லை: அங்கே வென்றார்;. அவரே தம்பணிக்கென தேர்ந்துகொண்ட பேதுரு அவர் துன்பப்படவும், கொலை செய்யப்படவும் வேண்டாம் என்று தம் சாவை முன்னறிவித்தபோது ஆண்டவர் இயேசு ‘ என் கண் முன் நில்லாதே சாத்தானே’ என்று சொல்லி அச்சோதனையையும் வென்றார். ஆகையால் தான் பாலைவனச் சோதனை வெறும் ஒரு தொடக்கம் மட்டும் தான். கெத்சமேனித் தோட்டத்தில்கூட அவர் சோதனையை வெல்ல சீடர்களுடைய துணையை நாடுகிறார். ‘உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்: ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் (மாற்14‘38) என்று அங்கேயும் சோதனையை வென்றெடுக்கிறார். சோதனைக்கு ஆட்படாதிருக்க சீடர்களைப் பணிக்கிறார்.

சோதனையில் தோற்றவர்கள்

ஆதிப்பெற்றோர்கள் ஆதாமும் ஏவாளும் சாத்தானால் சோதிக்கப்பட்டனர் கடவுளாக ஆசைப்பட்டு சாவில் சிக்கினர் அவர்களால் சோதiனையில் வெற்றிப்பெற முடியவில்லை: தோற்றார்கள். எகிப்திலிருந்து மீட்டு கொணரப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்கு பாலைவனம் சோதனைக் களமாகிப்போனது: எகிப்தின் அடிமைத்தனத்தின் இறைச்சிப்பாத்திரமும், அப்பமும் வெங்காயுமும் சுண்டி இழுக்க, ஏன் இந்த பாலைவனம்? என்றனர் (விப 16‘3-4) மாசாவிலும் மெரிபாவிலும் தண்ணீருக்காக ஆண்டவரை சோதித்தனர் ஆண்டவருடன் வாதாடினா; (விப17‘1-8). பொன்னாலான கன்று செய்து கடவுளாக்கினர் (ஆதிப்பெற்றோர் கடவுளாக முயன்றனர் இவர்கள் கடவுளாக்கினரா ஆண்டவரை சோதித்தனர். மோசேவும் ஒருமுறைக்கு இரண்டுமுறை பாறையில் கோலினால் அடித்து ஆண்டவரை சோதித்தார் கானான் தேசத்தில் நுழையாமல் தண்டிக்கப்பட்டார்(எண் 20‘11, இச3‘23-29) நாளடைவில் அரசர் வேண்டும் என்று சொல்லி ஆண்டவரைப் புறக்கணித்து சோதித்தனர் (1 சாமு 8‘18, 10‘18-19). அரசரான தாவீதும் கடவுளின் வலிமை மீது நம்பிக்கைக்கொள்ளாமல்; தன் மீது நம்பிக்கைக்கொண்டு மக்கள் தொகைக் கணக்கெடுத்து ஆண்டவரை சோதித்தனர் (1குறி 21‘7). பாகாலே கடவுள் அவனையே நாங்கள் வணங்குவோம் என்று ஆண்டவரைச் சோதித்தனர் (1அரச18‘21). இங்கே கவனிக்கத் தக்கது என்னவெனில் முதலில் சாத்தான் மனிதனைச் சோதித்தது: பிறகு மனிதன் ஆண்டவரை சோதிக்கிறான். படைத்தவன் படைப்பைச் சோதிக்கிறான் என்பதைவிட படைப்பு படைத்தவனைச் சோதிக்கிறது என்பதுதான் விந்தை.
சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைக்கட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்து விட்டுச்
சாட்சிகள் வேண்டாமென்று சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா .. குருட்டு உலகமடா...திருட்டு உலகமடா..
தெரிந்து நடந்து கொள்ளடா..இதயம் திருந்த மருந்து சொல்லடா.(பட்டுக்கோட்டையார்) என்பது எவ்வளவு உண்மை!

அதுதான் இன்றைய நற்செய்தியிலும் நடைபெறுகிறது. இன்றும் கூட இது தொடர்கதையாகிறது. எனவே தான் ஆண்டவர் இயேசுவும் கூட ‘எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்’ (மத்6‘13) என்று செபிக்க கற்பித்திருக்கிறார்.

சோதனையை வென்றவர்கள்

ஆண்டவருக்கு உகந்தவர்கள் சோதனையை வெல்வர்கள்: பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட சோதிக்கப்பட்டார் வென்றார் (எபி11‘17). யோபு ஒர் நல்ல உதாரணம். புதிய ஏற்பாட்டில் புனித சூசையப்பர் அன்னைமரியாளை யாருக்கும் தெரியாமல் மறைவாக விலக்கிவிட தீர்மானித்திட ஏற்பட்ட சோதனையை வென்றார் அன்னைமரியாள் உமது வார்த்தையின் படியே ஆகட்டும் என்று சொல்லி இறைவன் சார்பாக செயல்பட முன்வந்து மீட்பின் கருவியானார். புனித பேதுரு, புனித பவுல் (திப20‘19) சோதிக்கப்பட்டார்கள்: வென்றார்கள். தொடக்கக்கால திருச்சபையும் சோதனைக்குள்ளானது. விருத்தசேதனம் கிறிஸ்தவா;களைத் தீர்மானிப்பதா? திருமுழுக்கு கிறிஸ்தவர்களைத் தீர்மானிப்பதா? என்ற பெரிய சோதனையில் தூய ஆவியால் வழிநடத்தப்பட்ட இயேசு சோதனையை வென்றது போல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஆதித்திருச்சபையும் விருத்தசேதனத்தை அங்கிகரிக்காமல் வென்றது (திப15). எல்லா புனிதர்களுமே சோதனைக்குள்ளாகினர். அதனை வென்று ஆண்டவருக்கு உகந்தவர்களாயினர்.

யார் சார்பாக நாம்? ஆண்டவரா? அலகையா?

ஒவ்வொரு சோதனையிலும் யாருக்கு-ஆண்டவருக்கா? அலகைக்கா?-சார்பாக தீர்மானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் ஆண்டவருக்குச் சார்பாக தீர்மானிக்கும்போது நாம் சோதனையை வென்றவர்களாவோம்: அலகையின் சார்பாக தீர்மானித்து செயல்படும்போது பாவம் செய்பவர்களாவோம். என்னோடு இராதவன் எனக்கெதிராக இருக்கிறான் என்ற இயேசுவின் வார்த்தையை நாம் உணரவேண்டும். திருத்தூதர்களின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வு அனனியா-சப்பிரா தம்பதியினா; பொதுவுடைமைக்கு எதிராக நிலத்தை விற்றதில் ஒரு பகுதியை தங்களுக்கென்று வைத்துக்கொண்டு ஆண்டவருக்கு எதிராகவும் சாத்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனா; (திப5‘3). பாவம் செய்தனர் இருவருமே பேதுருவின் காலடியில் விழுந்து உயிரைவிட்டனர் அலகைக்கு ஆதரவாக செயல்பட்டதன் விளைவுதான் இது (திப5‘1-11) ‘கடவுள் நம்மோடு இருக்கிறார்’ என்பதை உணர்த்துவது திருவருகைக்காலம்: நாம் கடவுளோடு இருக்கிறோம் என்பதை உணா;த்துவதுதான் இந்த தவக்காலம். ஆகையால் ஒவ்வொருமுறையில் நமக்கேற்படும் சோதனையில் சாத்தானை வென்று நாம் கடவுளோடு இருக்க முயலவேண்டும். பாறைமீது விழுந்த விதைகளாக, வேரற்றவர்களாக, சோதனைக்காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுபவர்களாக (லூக் 8‘13) நாம் இருக்க கூடாது. பொதுவாக ‘நமக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் நமது வலிமைக்கு மேல் நம்மைச் சோதனைக்குள்ளாக விடமாட்டார்: சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை நமக்கு அருள்வார்: அதிலிருந்து விடுபட வழி செய்வார் (1கொரி. 10:13) என்ற நம்பிக்கையில் செயல்படவேண்டும். ஏனெனில் அவர் தாமே சோதனகைக்குள்ளாகித் துன்பப்பட்டதால் (எபி 4‘15) சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய வல்லவர்(எபி 2‘18): அவர் மனவுறுதித் தந்து காப்பாற்றுவார்(திவெ3‘10). நாம் இன்னும் சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும் அந்நாளிலேயே பேருவுவகைக் கொள்வீர்கள் (1பேது1‘6) என்ற வாக்கு நம்மைத் திடப்படுத்தவேண்டும். நமக்குச் சோதனைகள் ஏற்படும்போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் (2கொhp11‘28, யாக்1‘2)

சோதனை ஏன்?

நாம் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுவது ஏன்? என்றால் நம்முடைய தீய நாட்டத்தினால்தான்: அது கவர்ந்து மயக்கித் தன்வயப்படுத்துகிறது(யாக்1‘14). ஆகையால், அலகையை -தீமையை- நாடாமல், ஆண்டவரை நாடும் போது நாம் சோதனைகளை வென்றவர்களாவோம். அடிமைத்தனத்திற்கு திரும்ப துடித்த இஸ்ராயேல் போல நாமும் மாற கூடாது. நாம் ஆண்டவர் சார்பாக தீர்மானிக்காத போது அல்லது அலகையின் சார்பாக தீர்மானிக்கும்போது நாம் பாவம் செய்கிறோம். ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை (முதல் சோதனை), இச்சை நிறைந்த பார்வை (இரண்டவாது சோதனை ), செல்வச் செருக்கு(மூன்றாவது சோதனை) ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல: அவை உலகிலிருந்தே வருபவை (1யோவா2‘16). நாமும் சாத்தானின் சோதனைக்கு ஆட்பட்டு பாவத்தைப் புண்ணியமாக கருதி (கல்லை அப்பமாக்கி) செய்கிறோம்: புனித நிலையிலிருந்து பரலோகத்திலிருந்து நரகத்திற்கு குதிக்கிறோம்: சாத்தானை தெண்டனிட்டு பாகாலை வணங்கியது போல வணங்குகிறோம். ஆக ஆண்டவருக்கு எதிராக இருக்கிறோம். தவக்காலம் நாம் ஆண்டவரோடு இருப்பதற்கானது. ஆகையால் செபத்திலும் தவத்திலும் புண்ணியத்திலும் திளைத்து ஆண்டவர் சார்பாக செயல்பட்டு பாவத்தை விட்டு விலகி நிற்போம். நீங்க யாரைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்-பரபாசையா? இயேசுவையா? ஆண்டவர் சார்பாக தானே! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார் யாக். 1:12