ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.


இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
பாகம் மூன்று

சாட்சிய வாழ்வு எங்கிருந்து துவங்க வேண்டும்? நாம் வேலை செய்யும் இடத்தில் சாட்சியாக இருந்தால் போதும், கோவில் அல்லது ஆன்மீக காரியங்களில் சாட்சியாக இருந்தால் போதும், மற்றும் பொது இடங்களில் சாட்சியாக இருந்தால் போதும், என்று பல வரைமுறைகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அடிப்படையில் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிட கூடாது. சாட்சிய வாழ்வு துவங்கப்பட வேண்டிய இடம் நமது இல்லம்(வீடு). [2013-11-25 23:12:48]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

மாந்தர் இருக்கிறாரா? அல்லது கிடக்கிறாரா?
(இருத்தலியல்)

மனிதர்கள், தாங்கள் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். தங்கள் சந்ததினரும் வாழவேண்டும் என்பதற்காக சொத்து, பணம், பதவி, புகழ், நற்பேறு என்று ஆசைப்படுவது அனைத்துமே மாந்தரின் இருத்தலுக்கான ஆசையே ஆகும். ஆனால் மாந்தரின் இருத்தல் என்பது மேற்சொன்ன இவற்றில் இல்லை என்பதை புரிந்துகொண்டவர்கள் ஞானியாகவும், புனிதராகவும், மேதையாகவும் அறியப்படுகிறார்கள். [2013-11-20 22:18:04]

எழுத்துருவாக்கம்:அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும். (லூக்கா 17:5)

விசுவாச ஆண்டின் நிறைவில் பயணம் செய்யும் இவ்வேளையில் எங்கள் விசுவாசத்தை மிகுதியாக்கும் என்பது மிகவும் பொருத்தமான மையக்கருத்து ஆகும். ஆண்டவராகிய இயேசுவிடம் திருத்தூதர்கள் கேட்டதுபோல் இறைவா எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என நாமும் மூவொரு இறைவனிடம் கேட்போம். [2013-09-09 22:10:28]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
பாகம் இரண்டு

மீட்பு பெற என்ன செய்ய வேண்டும்? அல்லது நமது மீட்பை நோக்கிய பயணம் எப்படி அமையவேண்டும்? இதற்கு யேசு தரும் பதில்: „இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்.“ (லூக்கா 13:24) இந்த „இடுக்கமான வாயிலை“ பலரும் பலவிதங்களில் விளக்குகின்றனர். [2013-09-25 21:34:31]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

வலிமைபெறு, துணிவுகொள், அஞ்சாதே... ( இணைச்சட்டம் 31:6)

வலிமைபெறு, துணிவுகொள், அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே, ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்வார் அவர் உன்னைவிட்டு விலக மாட்டார். உன்னைக் கைவிடவும் மாட்டார்.(இணைச்சட்டம்: 31:6) இன்று இறைவன் நமக்கு கொடுத்துள்ள அவருடைய உயிருள்ள வார்த்தைக்காக நன்றி சொல்லுவோம். [2013-09-09 22:10:28]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவான்:2:5)

தந்தை மகன் தூய ஆவியானவருக்குத் துதியும் ஆராதனையும் நன்றியும்! தந்தையும் தாயுமான எங்கள் அன்பு இறைவா இன்றும் என்றும் எப்பொழுதும் உமது ஆவியின் வல்லமையால் எங்களை நிரப்பும். நாங்கள் கேட்கப்போகும் உமது வார்த்தை எங்கள் பாதைக்கு ஒளியாகவும் எங்கள் வாழ்வுக்கு விளக்காகவும் இருக்க கிருபை செய்தருளும். [2013-09-09 22:10:28]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
பாகம் ஒன்று

„மீட்பு“ இந்த வார்த்தை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. கிறிஸ்தவ சபையை சேர்ந்த பல்வேறு குழுக்கள் „மீட்பு“ என்ற வார்த்தை பயன்படுத்தி கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தங்கள் விசுவாசத்திற்குள் ஈர்ப்பது உலகம் முழுவதும் அன்றாடம் நடக்கின்ற ஒரு நிகழ்வு. [2013-08-30 22:16:13]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD