ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்

பழைய ஏற்பாட்டில் பெண்கள்

கடவுளின் படைப்பில் உருவான முதல் மனிதன் ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவள். இவள் தன் கணவன் ஆதாமுடன் ஏதேன் தோட்டத்தில் குடியிருந்தவள். அப்போது அத்தோட்டத்திலிருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்று ஆண்டவராகிய கடவுள் கட்டளை இட்டிருந்தார். [2015-03-22 23:11:20]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG

திரும்பிப்பார் திருத்திக்கொள்

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். (மத் 7: 7-8) செபத்தின் வல்லமையை பெற்றுக்கொள்வோம்.
[2015-02-20 23:27:37]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

திருமுக தரிசனம்

வாழ்க்கை என்பது தேடலை நோக்கிய பயணம், மகிழ்வை தேடியப் பயணம், நிறைவை நோக்கிய விசுவாச பயணம். ஆம் அறியாமையில் இருந்து ஞானத்தை நோக்கிய பயணம், இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம், குழம்பிய வாழ்வில் இருந்து ஆன்ம வாழ்வை நோக்கிய பயணம். [2015-01-09 02:57:21]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

இயேசுவும் பெண் சீடர்களும்

புதிய ஏற்பாட்டில் ஏராளமான பெண்கள் இயேசுவை பின்பற்றினார்கள். இப்பெண் சீடர்கள் திருத்தூதர்களைப்போல பணிதளங்களில் நேரடியாக காட்சியளிக்கவில்லை எனினும் மறைமுகமாக இருந்து எல்லாச் சூழலிலும் இயேசுவிற்கு உதவினர். இப்பெண்கள் இயேசுவின் வாழ்வில் இறுதிவரை உடனிருந்தார்கள் என்பதை நான்கு நற்செய்தியாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். [2015-01-04 18:27:04]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG

இறைவனின் தாய் மானுடத்தின் தாய்

திருச்சபையானது இன்று அன்னை மரியாளை எடுத்துக்காட்டாக நமக்கு முன்வைக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் நமக்கு அன்னையின் அரவணைப்பும், பாதுகாப்பும் நம்மை வழிநடத்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நமக்கு நினைவுட்டுகிறது. [2014-12-30 08:59:39]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

கன்னிமரி அமல உற்பவி

நமக்கு உதவும் சாதனமாக இருக்கும் அன்னை மரியாவின் கோட்பாடுகள் பெற்றுக்கொடுத்தாள், விட்டுக்கொடுத்தாள், கற்றுக்கொடுத்தாள். [2014-12-09 20:50:17]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

மௌனம் கொணரும் அமைதி

நான் அண்மையில் தொடர்வண்டியில் ம்யூனிக்கை நோக்கி பயணம் செய்தபோது, சுமார் 25 வயதுடைய இஸ்ரேல் நாட்டு முஸ்லிம் பெண்ணை சந்தித்தேன். [2014-10-26 22:10:26]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 5
"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" லூக்கா:19.10

இறைமகன் இயேசுவும் சக்கேயுவும் சந்திக்கின்ற நேரத்தில் ஆவியானவர் சக்கேயுவின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார். சக்கேயு என்பவர் எரிக்கோவில் செல்வந்தர், வரிதண்டுவோருக்குத் தலைவர், குட்டையான தோற்றம் உடையவர் என்று லூக்கா; 19 அதிகாரத்தில் காண்பது, இழந்து போனதைத் தேடி மீட்கவே இறைமகன் வந்தார் [2014-10-07 23:57:59]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்

மனம் திறந்து
திருத்தந்தை பிரான்சிஸ் உடனான ஒரு சிறப்பு நேர்காணல்.
பாகம் 2

நீங்கள் ஏன் இயேசு சபையில் சேர்ந்தீர்கள்?

. இயேசு சபையில் குறிப்பாக மறைபரப்பு ஆர்வம், ஒன்று கூடி வாழும் குழும வாழ்வு, ஒழுக்கம் ஆகிய மூன்றும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்றால்.. உண்மையிலேயே.. உண்மையிலேயே ஒழுக்கமில்லாத நபர் நான். ஆனால் அவர்களுடைய ஒழுக்கம், அவர்கள் நேரத்தைக் மேலாண்மைச் செய்யும் விதம் என்னை மிகவும் பாதித்தது. [2014-09-22 22:32:07]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஞானி ராஜ் லாசர் (குடந்தை ஞானி)

கிறீஸ்துவின் வழியில் சமாதானத்தை நோக்கினால்?

மத்தேயு 5: 23-24 ஐ நோக்குவோமாயின் ”ஆகையால், நீ பலிபீடத் தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறையுண்டு என்று நினைவு கூருவாயாகில், அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முன்பு உன் சகோதரனுடன் ஒப்புரவாகி, பின்பு வந்து உன்காணிக் கையைச் செலுத்து" என்று கூறப்பட்டுள்ளது. [2014-09-04 01:26:18]

எழுத்துருவாக்கம்:எஸ்.பி. யேசுதாசன்

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்