ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்

ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன் என்பதன் அர்த்தம் தான் என்ன?

இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் [2017-11-14 01:23:11]

எழுத்துருவாக்கம்:சகோதரர். அ. அன்ரன் ஞானராஜ் றெவல்( சலேசிய சபை )

விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கையில்லை.

கடவுள் அவனிடம் , “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார். [2017-09-24 23:35:09]

எழுத்துருவாக்கம்: சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

சிலுவையின்றி கிரீடமா...

இன்றைய மனிதர்களுக்கு பிடிக்காத வார்த்தையும், விரும்பாத பொருளும் ஒன்று இருக்கிறது என்றால் அது சிலுவையாகத் தான் இருக்க முடியும். ஒருமுறை ஒருவர் என்னிடம் வந்து கழுத்தில் அணிந்து கொள்வதற்கு ஒரு சுருபம் கேட்டார். அப்பொழுது என்னிடம் சிலுவை வடிவில் உள்ள டாலர் மட்டும் தான் இருந்தது. உடனே நானும் அவருக்கு சிலுவை வடிவில் இருந்த அந்த சுருபத்தை கொடுத்தேன். அதற்கு அவர் ‘இது வேண்டாம் வேறு சுருபங்கள் அதாவது மாதா படம் அல்லது புனிதர் உருவம் தாங்கிய டாலர் இருந்தால் கொடுங்கள்’ என்றார். [2017-03-01 00:12:27]

எழுத்துருவாக்கம்:அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்

மன்னிப்பது தெய்வீகம்

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! நம்மை பக்குவப்படுத்தி மனிதர்களை கடவுளாக மாற்றும் காலம் தொடங்கிவிட்டது. தவக்காலம் தந்தைக்குரிய பாசத்தோடு நம்மை வரவேற்கிறது. இக்காலத்தில் பீடத்திலே நாம் அதிகமாக பூக்கள் வைப்பது கிடையாது. காரணம் ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் இருக்கும் பூவை கடவுளுக்கு அர்ப்பணிக்க அழைக்கிறது. [2017-03-01 00:12:27]

எழுத்துருவாக்கம்:அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்

நற்செய்தியாளர் மத்தேயு வழி தவக்காலம்

தவக்காலம் நம்மில் இருக்கும் குறைகள், பாவங்கள் மற்றும் தீமைகள் இவற்றை இறைவன் அருளோடு நம் எண்ணத்திற்கு கொண்டு வந்து இறைவனின் அளவுகடந்த இரக்கத்தையும், அன்பையும் பெற்றுக் கொள்ள திருச்சபை மூலம் கொடுக்கப்பட்ட அடையாளத்தின் மாட்சிமை காலம்தான் தவக்காலம். இந்த தவக்காலத்தில் நற்செய்தியாளர் மத்தேயு கூறும் கருத்துக்களோடு நமது தவக்காலத்தை பயன்படுத்துவோம். தவக்காலம் என்பது கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் (மத் 3:14) தவக்காலம் எனலாம். [2017-02-28 23:50:51]

எழுத்துருவாக்கம்: அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

அன்பு அவனியில் அவதாரமான அன்பின் பெருவிழா '' கிறிஸ்மஸ்''

காலநிலை, வானிலை மாற்றங்களும் நத்தாருக்காக தம்மை ஆயத்தப்படுத்தும். சில்லென்ற குளிர் காற்று இதமாக வீச ஆரம்பிக்கும். முன் பனி, பின் பனி என பனித்தூறல் புற்தரைகளை நனைத்து நிற்கும். மரஞ்செடி கொடிகள் யாவும் பசுமையாக துளிர் விட்டு பச்சைப்பசேல் என காட்சியளிக்கும். மரஞ்செடி கொடிகளுக்கு எப்படியடா தெரியும், கிறிஸ்து பிறப்பு காலம் வரப்போகுது என்று என சிலவேளைகளில் நான் சிந்திப்பதுண்டு. ஆம், அவைகளும் இறைவனின் படைப்புக்கள் தானே, இவைகள் இறைவனின் எல்லையற்ற அன்பின் பரிணாமங்கள் [2016-09-28 23:06:33]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

பாவசங்கீர்த்தனம் தேவைதானா

நம் இயேசு ஆண்டவர் காணாமல் போன ஆடு உவமையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." அதுமட்டுமல்ல தனது பகிரங்கப்பணி வாழ்வின் போது இயேசுக்கிறிஸ்து பலருக்கு மன்னிப்பு அளித்து மறுவாழ்வு அளித்திருக்கின்றார். இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார், திமிர்வாதக்காரனுக்கு மன்னிப்பு வழங்கி குணமாக்கினார். [2016-09-28 23:06:33]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

சர்வதேச இளையோர் தின மாநாடு பற்றி ஒரு கண்ணோட்டம்

சர்வதேச இளையோர் தினம் எவ்வாறு உருவானது என்று பார்த்தால், 1984 ம் ஆண்டு மீட்பின் புனித ஆண்டாக திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பரால் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பரிசுத்த திருத்தந்தை புனித 2 ம் அருளப்பர் சின்னப்பர் இந்நிகழ்வை சிறப்பிக்க குருத்து ஞாயிறு அன்று புனித பேதுரு சதுக்கத்தில் அணிதிரளுமாறு உலகளாவிய ரீதியில் இளையோருக்கு அன்பான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். திருத்தந்தையின் அழைப்பை ஏற்று 300,000 க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் அணிதிரண்டு வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்த திருத்தந்தை [2016-07-18 23:06:33]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

இறைவன் உன்னை அழைக்கிறாரா?

இறை இரக்கத்தின்ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டிலேயே எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேவ அழைத்தலைப்பற்றி கூறும் போது இவ்வாறு கூறுகின்றார்: திருச்சபையானது இரக்கத்தின் இல்லம் ஆகும், இந்த மண்ணில்தான் தேவ அழைத்தல்கள் வேரூன்றப்பெற்று, முதிர்ச்சியடைந்து நற்கனிகளை கொடுக்கின்றது. [2016-04-16 00:21:08]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாவோம்

இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆனது இறைவனின் மீட்புத்திட்டத்தின் உச்ச வெற்றியாக கருத முடியும், அதாவது இறைவன் தம் மக்களைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்க சித்தம் கொண்டிருந்தார். இதற்கமைய தனது ஒரே மகன் இயேசுவை அனைத்து மக்களினதும் பாவத்திற்கும் பரிகாரப்பலியாக ஒப்புக் கொடுத்தார். இதனை 1யோவான் 4:9-10 இல் தெளிவாக காண முடியும். [2016-03-27 00:28:32]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்