ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

நாம் எப்படி நம்முடைய துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்?நாம் நமக்கு துன்பங்கள் வேதனை சோதனைகள் ஏற்படும்போது நாம் என்ன செய்வோம் சந்தோசபடுவோமா?இல்லை நாம் என்ன சொல்லுவோம் ஆண்டவர் ஏன்தான் என்னை சோதிக்கின்றாரோ தெரிவில்லை அல்லது யாருக்கு நான் என்ன செய்தேன் ஏன் எனக்கு இந்த வேதனை துன்பம் என்றுதான் சொல்லுவோம்.எப்போதாவது நாம் இந்த வேதனை துன்பம் சோதனை முலமாக கடவுள் என்னோடு பேச விரும்புகின்றார் அல்லது எல்லாம் நன்மையாகவே முடியும் என்று சொல்லியிருப்போமா?

 நாம் எப்படி நம்முடைய துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்?

.இந்த வேதனை சோதனை துன்பங்கள் எங்கிருந்து ஆரம்பிக்கிறதென்றால் ஒரு சிறிய கவலையில ஆரம்பிக்கும் ஒரு சின்ன பிரச்சனை வீட்டில வேலையில மனிதரால் உண்டான  போராட்டத்தில ஒரு கவலை.அந்த கவலைக்கு இடம் கொடுத்து கொடுத்து யோசித்து யோசித்து அந்த கவலையை விட்டு வெளி வராமல் அதை குறித்து யோசித்து அது கடைசியில அது அப்படியே ஒரு மன அழுத்தத்தை கொடுக்கின்றது.நீங்கள் அதற்கு இடம் கொடுக்கும்போது இதன் வழியாக சாத்தான் உங்களுக்குள் நுளைய முடியும் ஒரு ஆவிக்குரிய போராட்டம் உங்களை தாக்க முடியும் ஏன் அப்படியென்று கேட்டால்

மத்தேயு 6ம் அதிகாரம் 25 தொடக்கம் 27 வரையுள்ள இறை வசனங்களில் யேசு கிறிஸ்து திரும்ப திரும்ப சொல்லுகின்ற ஒரு விடயம் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள் உணவை குறித்து கவலைப்படாதிருங்கள் நாளைய தினத்தை குறித்து கவலைப்படாதிருங்கள் யேசு கிறிஸ்து தெளிவாக சொல்கின்றார் வானத்து பறவைகளை பாருங்கள் அது எதற்காவது கவலைப்படுதா அதற்கு ஏதாவது உணவு சேர்த்து வைத்திருக்கா இன்றைக்கு சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என்று கவலைப்படுதா காலையில எழும்பி அது அழகாக சந்தோசமாக கத்துகின்றது பறக்கின்றது கவலைப்படுவதில்லை அதற்கும்; நம் வானக தந்தையாம் இறைவன் உணவளிக்கின்றார்.

காட்டு மலர்களை பாருங்கள் காலையில எவ்வளவு அழகாக பூக்கின்றது மாலையில வாடி போகின்றது.அதையும் ஆண்டவர் அணிவிக்கின்றார் நீங்கள் அதை விட மேலானவர்கள்

அப்போ நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ஆண்டவர் சொல்கின்றார் கவலைப்படாதிருங்கள்.

 அப்போ ஆண்டவர் சொல்கின்றார் கவலைப்படாதிருங்கள் நான் இருக்கின்றேன் என்று நீங்கள் கவலைக்கு இடம் கொடுக்கின்றீர்கள் நீங்கள் கேட்கலாம் எப்படி என்னுடைய துன்பங்களை குறித்து நான் கவலைப்படாமல் இருக்க முடியும் என்று. ஆண்டவர் சொல்கின்றார் நான் இருக்கின்றேன் அல்லவா உனக்காக கவலைப்பட உனக்கு உதவி செய்ய நானிருக்கின்றேன் கவலையை என் மீது வைத்து விடு என்கின்றார்.நாம் அதை செய்யாமல் ஆண்டவருடைய வார்த்தையை மீறுவதினால் சாத்தான் அதன் வழியால் உள்ளே நுளைவான்.நீங்கள் கவலைப்படும்போது; சாத்தானுக்கு நீங்கள்தான் கதவை திறக்கின்றீர்கள்.ஆகவே துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் ஆனால் அதிலேயே நிலைத்திருக்கக்கூடாது கவலை துன்பம் என்ற போராட்டம் உங்கள் வாழ்க்கையில வரும்போது அதிலேயே நிலைத்திருக்கக்கூடாது அதை குறித்து யோசித்து யோசித்து ஒரே இரவெல்லாம் யோசித்து என்ன செய்யலாம் இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்று யோசித்து கவலைக்கு இடம் கொடுத்து விட்டால் அது ஒரு அழுத்தத்தை கொண்டு வந்து உங்களை துன்பங்களில் இருந்து வெளியே வர விடாமல் பண்ணி விடும்.சாத்தான் உள்ளே வந்து விடுவான்.அப்போ என்ன செய்ய வேண்டும்.

பிலிப்பியர் 4ம் அதிகாரம் 6ம் 7ம் வசனங்கள் இவ்வாறு கூறுகின்றது

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல் மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை தெரிவியுங்கள்.அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து யேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

இதயத்தில் கவலை வரும் அதைப்பற்றி யோசித்து யோசித்து அது ஒரு மன அழுத்தத்தை கொடுத்து அந்த துன்பத்தில் இருந்து வெளியே வராமல் பண்ணி விடும்.

ஆண்டவர் சொல்கின்றார் எல்லாவற்றையும் ஆண்டவருக்கு தெரியப்படுத்தி விட்டால் என்ன நடக்கும்  ;.அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி விழங்கி கொள்ள முடியாத இறை அமைதி உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

அப்போ அந்த கவலை துன்பம் உங்களை விட்டு விலகி விடும் கவலை துன்பம் என்கின்ற போராட்டம் உங்கள் வாழ்க்கையில் வரும் ஆனால் உங்களால் அதை வெல்ல முடியும்

ஏனென்றால் உங்களுக்காக கவலைப்பட ஒரு தந்தை இருக்கின்றார்.

ஆண்டவர் சொல்றாரு நான் உன்னுடைய தந்தை வானமும் பூமியும் என்னுடையது எல்லாம் என்னுடைய கையிலுள்ளது நீ எதற்கு கவலைப்படணும்.ஏன் வேதனைப்படுகின்றாய் நான் அதை சரி பண்ணுறன் உன் கவலை வேதனை நோய் எல்லாவற்றையும் நான் சந்திப்பேன் இதையெல்லாம் செய்வதற்குதான் நானிருக்கின்றேன் நான் உன் தந்தை நீ எதற்கு கவலைப்படணும் நீ ஏன் வேதனைப்படணும்

உன் கவலை வேதனை எல்லாவற்றையும் என்னிடத்தில் கொடு என் மேல வைத்து விடு ஆண்டவர் சொல்கின்றார்.

அப்போ நீங்கள் செய்ய வேண்டியது என்னெவென்றால் முதலில் ஆண்டவரின் சமூகத்திற்கு போங்கள் அதுதான் இறை வசனம் சொல்கின்றது

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லா மன்றாட்டுக்களையும் ஆண்டவரிடத்தில் தெரிவியுங்கள் என்று.

ஆண்டவர் எதையுமே பிழையாக எடுத்துக்கொள்ளமாட்டார்.

இதை சொல்லலாமா அதை சொல்லலாமா என்று யோசிக்காதீர்கள்.

உரோமையர் 8ம் அதிகாரம் 26 இறை வசனம் இவ்வாறு சொல்லுகின்றது.

இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கின்றார்

ஏனெனில ;எதற்காக எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்கு தெரியாது

தூய ஆவியார்தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெரு முச்சுக்களின் வாயிலாய் நமக்காக பரிந்து பேசுகிறார்.

நீங்கள் ஆண்டவரிடம் பிரச்சனையை கொண்டு போகாமல் நீங்களே இருந்து யோசித்து அங்கே போகலாமா இங்கே போகலாமா யார் உதவி செய்வார் யாரிடத்தில் போகலாம் என்று குழப்பமடைவதினால்தான் துன்பங்களை வெற்றி கொள்ள முடியாமல் போகின்றது.இப்படியே யோசித்து யோசித்து இது ஒரு விதமான மன அழுத்தத்தை உண்டுபண்ணி சாத்தான் உள்ளே நுளைந்து சொல்லுவான் இப்படி துன்பங்களை அனுபவிப்பதையும் பார்க்கிலும் தற்கொலை பண்ணி செத்து போய்விடு என்று.அந்த எண்ணத்தை உண்டு பண்ணுவான் சாத்தான்.ஆனால் நீங்கள் இதற்கு இடம் கொடுக்க கூடாது.ஆண்டவர் யேசு உங்களுடைய துக்கங்கள் வேதனைகள் அனைத்தையும் சிலுவையில சுமந்து சாத்தானை வென்றார்.அவர் சொல்கின்றார் nஐஸ்தமனி தோட்டத்தில் என் இதயம் மரணத்திற்கு ஏதுவான கவலை கொண்டுள்ளது என்று அப்போ அவரும் இப்படியான துன்பங்களை கடந்து சென்றவர்தான் ஏன் நமக்கு விடுதலை கொடுப்பதற்காக அவர் இப்போதும் உங்கள் துன்பங்களில் இருந்து விடுதலை தருவார்.

இப்போது நீங்கள் நினைக்கலாம் தூய ஆவியானவரின் துணை கொண்டு துன்பங்களை எதிர் கொள்ளுவோம் என்று தலைப்பை எடுத்து விட்டு எல்லாவற்றையும் ஆண்டவரிடத்தில் கூறுங்கள் ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லுகின்றேனே என்று.

ஆண்டவருடைய வார்த்தை இவ்வாறு கூறுகின்றது.

2 கொரிந்தியர் 3ம் அதிகாரம் 17ம் வசனம் சொல்லுகின்றது

இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியானவரைக்குறிக்கின்றது.

ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு.

ஆகவே நாம் துன்பங்களை கண்டு பயப்படாமல் தூய ஆவியானவரின் துணை கொண்டு துன்பங்களை எதிர் கொள்வோம்.

 

[2018-10-07 21:09:47]


எழுத்துருவாக்கம்:

ராஜ்குமார் சொய்சா
வூப்பெற்றால்
யேர்மனி