ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

கன்னிமரி அமல உற்பவிஇறை இயேசுவின் தாயும் நம் தாயுமான அன்னை மரியின் அமல உற்பவத்தை நாம் நினைத்து பெருவிழாவாக கொண்டாடுகின்றோம், வாழ்த்துகிறோம்.இந்த விழாவினை 1854 ஆம் ஆண்டு திருத்தந்தை. ஒன்பதாம் பத்திநாதர் இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்னைமரி தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே மாசு மறுவற்று பாவம் ஏதுவுமின்றி இறைவனின் அருளால் பிறந்தவர். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான்..............

* அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். (லூக் 1:28) என கடவுள் வாழ்த்து கூறி, தம் உடனிருப்பை கொடுக்கிறார்.
* மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். (லூக் 1:30) கடவுள் ஆறுதல், துணிவு கூறி, தம் ஆசிரின் வழியாக இறை திட்டத்தைக் கொடுக்கிறார்.

நமக்கு உதவும் சாதனமாக இருக்கும் அன்னை மரியாவின் கோட்பாடு.......
> பெற்றுக்கொடுத்தாள்
> விட்டுக்கொடுத்தாள்
> கற்றுக்கொடுத்தாள்

1. பெற்றுக்கொடுத்தாள்
பெற்ற அருள் வாழ்வை கொடையாக பிறருக்கு மனமுவந்து கொடுத்தல். இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே என்ற பாடல் வரிகள் அன்னை மரியின் வாழ்வில் நாம் பார்க்கலாம். பாவம் போக்கும் செம்மறியை பெற்றெடுத்து, நம்மை பாவ கறையில் இருந்து கழுவ, பாவம் என்ற நிலையையே அறியாத அன்னை, நாம் பாவ தூண்டுதலில் விழிப்பாய் இருக்க அழைக்கிறாள்.

2. விட்டுக்கொடுத்தாள்
அன்னை மரியாள் அமைதியான வாழ்வு வாழ்ந்தவர், தாழ்ச்சி, பொறுமை, மனதில் அனைத்து சுழ்நிலைகளையும் தாங்கி கொள்ளும் ஆழமான மனதிடம், எல்லையில்லாத அன்பு, இரகசியம் காத்துக்கொள்ளல் இது போன்ற நற்பண்புகளை கொடுத்து கிறிஸ்தவர்களாகிய நாம் திருச்சபை கூறும் மறையுண்மைகளை எடுத்துறைப்பவர்களாக வாழ அழைப்பதோடு, விட்டுக்கொடுத்தல் மூலம் பிறரின் வளர்ச்சியில் நம்மை பங்கெடுக்க அழைப்பு விடுக்கிறாள்.

3. கற்றுக்கொடுத்தாள்
கடவுளின் வெளிப்பாட்டை எடுத்து கூறும் அன்னையாக தேர்ந்தெடுக்கும் போது, ஆகட்டும் என்ற தாழ்மை உள்ளத்தொடு ஏற்றுக்கொண்டார். அலட்டிக்கொள்ளவில்லை மற்றும் அலட்சியப்படுத்திக் கொள்ளவும் இல்லை. கலக்கமும், பயமும் உள்ளத்தில் இருந்த போதும், இறைவனின் பணியை செய்வதற்கு முழு ஒத்துனழப்பு கொடுத்தாள். ஆம் நமது வாழ்வில் முடியும் அல்லது முடியாது என தடுமாறும் சூழ்நிலைகளில் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு முடியும் என இறுதிவரை முன்னோக்கி செல்கிறோமா? அல்லது முடியாது என மறுதலிப்பு தெரிவித்து சூழ்நிலைகளை நழுவவிடுகிறோமா? தாய் கற்றுக் கொடுக்கும் பாடத்தை பின்பற்றத் தயாராக இருக்க அழைக்கபப்படுகிறோம்.

மீட்புத்திட்டத்தில் மரியாவின் பங்கு.................
இறைவன் தனது மீட்புத் திட்டதை உலகிற்கு கொணர அன்னை மரியாள்ளை அமல உற்பவியாக இவ்வுலகிற்கு தந்தார். இந்த அமல உற்பவ திருநாளானது, நமது இயங்கிக் கொண்டிருக்கும் இதயமானது பாவத்தை அறியும் ஞானத்னதயும் அதனை இறைவன் துணையோடு விலக்கி வாழ வேண்டிய தெளிவையும் கொடுக்க அன்னை மரி நமக்காக திருமகனிடம் இன்றும் என்றும் பரிந்து பேசுகிறாள் என்படை எண்பிக்கின்றது. ஆகவே அமல உற்பவியை நோக்கி நமது மன்றாட்டு அமையட்டும். அன்னை மரி நம்மை ஆசிர்வதித்து வழிநடத்துவாராக!

மரியே வாழ்க! இயேசுவிற்கே புகழ்!

[2014-12-09 20:50:17]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி