ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

மனம் திறந்து
திருத்தந்தை பிரான்சிஸ் உடனான ஒரு சிறப்பு நேர்காணல்.
பாகம் 1

யார் இந்த ஜாஜ் மரியோ பெர்க்கோலியோ?

யார் இந்த ஜார்ஜ் மரியோ பெர்க்கோலியோ? என்று வெள்ளந்தியாக இந்தக் கேள்வியைக் கேட்டேன். கேட்ட பிறகு, அவர் என்னை அமைதியாக என்னை கூர்ந்துப் பார்த்தார் உடனே நான் “இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன். கேட்கலாம் என்று தலையாட்டிக்கொண்டே பதில் சொல்ல ஆரம்பித்தார். “ இதற்குப் பொருத்தமான விளக்கமாக எது இருக்கும் என்று எனக்குத் தெரியாது...ம்.. ம்..ம்.. நான் ஒரு பாவி. இதுதான் ஒரு மிக துல்லியமான வரையறையாக இருக்க முடியும். இது ஒன்னும் இலக்கிய ரசனை மிக்க உவமானப் பேச்சு அல்ல! நான் ஒரு பாவி.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராதவர் போலும், அதே சமயம் இன்னும் ஆழமாகச் சிந்திக்கப்பணிக்கப்பட்டவர் போலும் திருத்தந்தை கவனத்தோடு தன் சிந்தனையைத் தொடர்ந்தார். “ ஆம்! அநேகமாக நான் கொஞ்சம் புத்திக் கூர்மையுள்ளவன் என்று நான் சொல்ல முடியும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னை தகவமைத்து, ஆனால் நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி (naive) என்பதும் அதே அளவுக்கு உண்மை. ஆமாம். என் அடிமனதின் ஆழத்திலிருந்து வருவதுதான் உண்மையான வரையறையாக இருக்க முடியும். இதுதான் உண்மையாக இருக்க முடியும் நான் உணர்கிறேன். ஆண்டவர் கருணைக்கண் நோக்கிய ஒரு பாவி நான் . மீண்டும் அவா; சொன்னார்‘ ஆண்டவரால் கண் நோக்கிய அடியேன் நான். நான் தேர்ந்து கொண்ட எனது விருதுவாக்கு இதனை எனக்கு உணர்த்துகிறது “ Miserando atque Eligendo” (கருணையால் தேர்ந்து கொண்டேன்). இது எனக்கு முற்றிலும் பொருந்தும்.

வணக்கத்திற்குரிய பீடு (Bede) நற்செய்தியில் இடம் பெறும் நிகழ்வான மத்தேயுவின் அழைப்பிற்கு விளக்கம் எழுதுகிற மறையுரையிலிருந்துதான் எனது இந்த விருதுவாக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘இயேசு வரிவசூலிப்பவரைப் பார்க்கிறார் கருணை நிறைந்த உணர்வோடு இயேசு அவரைப் பார்த்ததால், அவரைத் தேர்ந்தெடுக்கிறார். அவரிடம் “என்னைப் பின்செல்” என்கிறார். திருத்தந்தை அவர்கள் “ இலத்தீன் மூலமான miserando என்பதை இத்தாலிய மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் மொழிப்பெயர்ப்பது என்பது இயலாதகாரியம் தான். நான் இல்லாத இன்னொரு தொடரெச்சத்தைக் கொண்டு misericordiando வை மொழிப்பெயர்க்க விழைகிறேன்.

அவர் தம் சிந்தனையைத் தொடர்ந்த வாறே வேறொரு தலைப்பிற்கு அவர் தாவினார். “ எனக்கு உரோம் நகரத்தைப் பற்றி நன்றாக தெரியாது: இங்கு ஒரு சிலவற்றை மட்டுமே நான் அறிவேன். புனித மேரி மேஜர் பசிலிக்காவைத் தெரியும். இங்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. புனித மேரி மேஜர் புனித பேதுரு பசிலிக்கா... ம்...ம்..... சரி. நான் உரோமைக்கு வரும்போதெல்லாம், எப்போதும் அருகில் உள்ள வியா டெல்லா ஸ்குரேஃபாவில் (Via della Scrofa) வில் தங்குவேன். இங்கிருந்து நான் அடிக்கடி புனித பிரான்சின் லூயிஸ் ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள “மத்தேயுவின் அழைப்பு” பற்றிய ஓவியர் காராவாஜியோ (Caravaggio) வின் ஒவியத்தைப் பற்றி ஆழ்ந்து தியானிப்பேன்.
அதில் “இயேசுவின் விரல் மத்தேயுவைச் சுட்டிக் காட்டுகிறது. அது நான் தான். நான் மத்தேயுவைப் போல உணர்கிறேன்”. திருத்தந்தை அவர்கள் தான் தேடிக்கொண்டிருந்த அந்த உருவச்சாயலை இறுதியாக கண்டடைந்தவர் போல மிகவும் உறுதியாக “மத்தேயுவின் மனநிலை என்னை மிகவும் பாதித்தது. ஆம்! அவர் கையில் வைத்துக் கொண்டிருக்கிற பணத்தை இறுகப் பற்றிக் கொண்டவராக தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறார் “ இல்லை! என்னை அல்ல: இல்லை, இந்தப் பணம் என்னுடையது”. இங்கேதான், பாவியாகிய என்மீது ஆண்டவர் தம் பார்வையைத் திருப்புகிறார். அவர்கள் என்னிடம் திருத்தந்தையாக என்னுடைய தேர்வை நான் ஏற்றுக்கொள்கிறேனா? என்று வினவியபோது நான் இதனைத்தான் எனக்குள்ளே சொன்னேன். தொடர்ந்து இலத்தீனில் திருத்தந்தை சொன்னார் “ நான் ஒரு பாவி. ஆனால் நான் இறைவனில் அளப்பரிய முடிவில்லாத இரக்கத்திலும், நம் ஆண்டவராகிய இயேசுவின் பொறுமையில் நம்பிக்கை வைத்து, ஒறுத்தல் உணர்வோடு நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன் ”.குறிப்பு : இவ்வாக்கம் லா சிவில்ட்டா கத்தோலிக்கா (La Civilta Cattolica) என்ற இதழுக்கு திருத்தந்தை வழங்கிய நேர்காணலில் இருந்து தொகுக்கப்பட்டது
[2014-03-22 11:52:15]


எழுத்துருவாக்கம்:

Rev.Fr.Gnani Raj Lazar
Mylapore, Chennai,
India