திருவழிப்பாட்டு ஆண்டு C (17-02-2013)

இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/> இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்/>


திருப்பலி முன்னுரை

இறைபிரசன்னத்தில் ஒரே சமூகமாக ஒன்றிணைந்திருக்கும் அனைவரையும் அன்போடு இன்றைய தவக்காலம் முதல் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வரவேற்கின்றேன்.

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது.

நமக்கு நன்கு அறிமுகமான இயேசுவின் மூன்று சோதனைகளையும், அந்த சோதனைகளிலிருந்து இயேசு எப்படி மேற்கொண்டார் என்பதையும் இன்று திருச்சபை நமக்கு சிந்தனைப் பொருளாகத் தருகிறது. மனிதராகப் பிறந்த அனைவரும் சோதனைக்குட்பட வேண்டும் என்று காட்டத்தான், பாவமே அறியாத இறைமகனாம் இயேசுவும் சோதனைகளைச் சந்திக்க முன்வந்தார். உடல் தேவைகளை நிறைவு செய்தல், உலகப் பொருள்கள்மீது பற்றுகொள்தல், இறைவனுக்கு எதிராகச் செயல்படுதல் என்னும் மூன்று தளங்களில் இயேசு சோதிக்கப்பட்டார். நமக்கும் இந்த மூன்று தளங்களிலும் சோதனைகள் எழும்.

இச்சோதனைகளை வெல்ல இயேசு கையாண்ட ஆயுதம் என்ன? இறைவார்த்தைதான்! மூன்று சோதனைகளிலும் அவர் மறைநூலை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளைச் செயல்பாடாக்கினார். இவ்வாறு, தந்தை இறைவன்மீது அவருக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாமும் நமது சோதனைகளை வெல்ல இந்த மூன்று உத்திகளையும் பயன்படுத்துவோம்.

இறைவார்த்தையைக் கொண்டும், இறைநம்பிக்கையைக் கொண்டும் நம் சோதனைகளை வெல்வோமாக! எனவே அன்புமிக்கவர்களே தவத்தின் அடையாளங்களை அணிந்துகொண்டு திருப்பலி வழிபாடுகளில் பங்கேற்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் நாம்கேட்ட இறைமொழிகளுக்கேற்ற வகையில் வாழ உறுதி ஏற்போம். இந்த திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26:4-10

4 அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.5 நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.6 எகிப்தியர் எங்களை ஒடுக்கினார்: துன்புறுத்தினர்: கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர்.7 அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.8 தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.9 அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.10 எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும் ஆண்டவரே
திருப்பாடல்கள் 91:1-2,10-15

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, 'நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார்.

10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.

12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர்.

14 'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்

இரண்டாம் வாசகம்

இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.
உரோமையருக்கு எழுதிய நிருபத்தில் இருந்து வாசகம் 10:8-13

8 அதில் சொல்லியிருப்பது இதுவே: வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.9 ஏனெனில், இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.10 இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்: வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர்.11 ஏனெனில், அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் என்பது மறை நூல் கூற்று.12 இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை: அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்.13 ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் என்று எழுதியுள்ளது அல்லவா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளதுஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13

1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தம்மை வந்தடையும் எல்லாவித சோதனைகளையும் வென்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய வலிமையும், சக்தியும், மனப்பக்குவமும் பெற்று செயற்படுவதற்கு, ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆற்றல் வழங்கும் இறைவா,

சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

இத்தவ நாட்களிலே எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, பகைமை களை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

''இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்'' (லூக்கா 4:1-2)

இயேசு தம் இறையாட்சிப் பணியைத் தொடங்கவிருக்கிறார். அதற்குமுன் அவர் ''சோதிக்கப்பட்டார்'' (லூக் 4:1). இயேசு ''பாலைநிலத்தில்'' சோதிக்கப்பட்டார் என்னும் செய்தியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவருமே தருகிறார்கள். பாலைநிலம் என்றால் சகாரா போன்று பரந்துவிரிந்த மணல்வெளி அல்ல. மாறாக, பாலஸ்தீன நாட்டுப் பாலைநிலம் என்பது ஒரு வறண்ட பிரதேசம். அங்கே குளிர்காலத்தில் மட்டும் தாவரங்கள் வளர்வதுண்டு. பொதுவாகப் பாழடைந்த ஓர் இடமாக இருந்த அப்பாலைநிலத்தில் கள்வர் நடமாடினர்; தீய ஆவிகள் குடிகொண்டதாக மக்கள் நம்பினர். இயேசுவும் அங்கே ''அலகையினால்'' சோதிக்கப்படுகிறார். -- பாலைநிலத்திற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வந்தபோது ''பாலைநிலம்'' வழி நடந்துவந்தனர். அங்கே அவர்களுக்குச் சோதனைகள் எழுந்தன. ஆக, இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டபோது அலகையின் தூண்டுதல்களுக்கு இடம்கொடுக்கவில்லை. அலகை இயேசுவை ''கடவுளின் மகன்'' என அழைத்தது; அவர் நினைத்தால் கோபுர உயரத்திலிருந்து கீழே குதித்தாலும் தீங்கு ஏற்படாது என்று சொல்லிப்பார்த்தது; ஏன், விவிலிய வாக்குகளை மேற்கோள் காட்டி இயேசுவை மயக்கப்பார்த்தது. ஆனால் இயேசு அச்சோதனைகளுக்கு இடம் கொடு;க்கவில்லை. மாறாக, கடவுளிடத்தில் மட்டுமே அவர் தம் முழு நம்பிக்கையை வைத்திருந்தார். கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடப்பதே அவருக்கு ''உணவு''. அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டார். மாறாக, கடவுளிடம் தம்மை முழுமையாகக் கையளித்துவிட்டு, அவருடைய விருப்பத்தையை தம் விருப்பமாக மாற்றிக்கொண்டு, அதன்படியே எந்நாளும் நடப்பார். இவ்வாறு கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இயேசு நமக்கு முன்மாதிரி வழங்கியுள்ளார். நாமும் கடவுளையே பற்றிக்கொண்டு வேறு பற்றுக்களை அறுத்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள் தாரும்.