மூன்றாம் ஆண்டு 23-12-2012


உறவின் நேரம் !

பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்/> அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்/> அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்/> அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்/> அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்/>


திருப்பலி முன்னுரை


அன்பு இறைவன் மாந்தரை மீட்க மானிடராய் வந்ததைக் கொண்டாட ஆவலுடன் அணியமாகிக்கொண்டிருக்கும் இறை இயேசுவில் ப்ரியமுள்ள அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) மற்றும் இறைமக்களே! கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களை முன்னதாகவே உரியதாக்குகிறேன். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. கடவுளின் பெயரால் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் மீட்பரின் வருகையை எதிர்நோக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்:

1. விரைவு 2. வாழ்த்து. 3. மகிழ்ச்சியின் துள்ளல் 4. தூய ஆவியின் ஆட்கொள்தல் 5. ஆசி வழங்கல்.

ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே தூய ஆவியின் துணை வேண்டும். நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது, வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், தூய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும்.

வரவிருக்கும் நம் ஆண்டவரும் அமைதியின் அரசருமான இயேசுவை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்க தயாராவோம். நிகழவிருக்கும் கிறிஸ்து பிறப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டுமென்று, இந்த திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5

ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 80: 1-2. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

பல்லவி

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவிஇரண்டாம் வாசகம்


எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, �பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது''என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், �நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், �உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 1: 38 - அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.இறைமக்களின் வேண்டல்கள்:


உண்மையான வாழ்த்து மனிதர்களை உருவாக்கும். போலியான வாழ்த்து மற்றவர்கனை விழத்தாட்டும். மற்றவர்களை உருவாக்குகிற பொழுது இறைப்பிரசன்னத்தை உண்ர்ந்து கொள்கிறோம். புதைகுழியில் மற்றவர்களைத் தள்ளுகிற பொழுது இறைவனை விழத்தாட்டச் செய்கிறோம். மரியாளின் வாழ்த்து இறை ;பிரசன்னத்தை வெளிப்படுத்தியது.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நிறைவு தருபவராம் இறைவா,

அமைதியின் அரசராம் எங்கள் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உறவுகளின் நாயகனே ஆண்டவரே,

உம்மைப் போற்றுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில்; எங்களுடைய உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும், ஆழப்படுத்திக்கொள்ளவும், உமது அருளைத் தந்தருளும். நாங்கள் அன்பு செய்வோரை வாழ்த்தி, ஆசி கூற, உமது ஆவியின் அருளைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும், உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் முதல்வா!

உம்முடைய பிறப்பை கொண்டாட தயாரித்து வரும் நாங்கள் அடம்பரத்தை, வெளிப்புற பகட்டை தவிர்த்து, அன்பின் வழி மற்றவர்களின் மனங்களில் உம்மை பிறக்கச் செய்ய பயன்தரும் வாழ்வு வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பேரன்பின் ஊற்றாம் இறைவா,

கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக தயாராகி வரும் எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது பகிர்தலையும், உம் திருமகனின் தியாகத்தையும் உணர்ந்து தூய வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நலம் நல்குபவராம் இறைவா,

மனம் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் துன்புறுவோரும், வறுமை, கடன் சுமை உள்ளிட்ட உலகு சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளோரும் வேதனை நீங்கி புது வாழ்வு காண அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் நாயகா!

பலியிலே பங்கெடுத்து செபிக்கும் நாங்கள் நல்ல அன்பின் வழி காட்டுதலில் பிறரையும் உம் சந்நிதானம் கொணரும் செயல்களில் ஈடுபட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


சிந்தனை


தாயால் குழந்தைக்கு ஆசி !

எலிசபெத்து அன்னை மரியாவை வாழ்த்தும்போது, நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என்று வாழ்த்துகிறார். இந்த வார்த்தைகளை அவர் தாமாகக் கூறவில்லை. தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டுக் கூறியதாகத் தெளிவாக எழுதியுள்ளார். எனவே, தூய ஆவியால் தூண்டப்பட்டே எலிசபெத்து இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார் என்பதில் ஐயமில்லை. இங்கே முதலில் தாயும், அந்தத் தாயால் குழந்தையும் இறைவனின் ஆசி பெறுகின்றார்கள் என்று எலிசபெத்து அறிக்கை இடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். இது ஓர் இயல்பான உண்மைதானே! ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் ஆசி. அந்த ஆசியை இறைவன் தாய்க்கு வழங்குகிறார். அந்தத் தாயை அதே இறைவன் அந்தக் குழந்தைக்கும் ஓர் ஆசியாக வழங்குகிறார். எனவே, இயேசுவால் மரியாவும், மரியாவால் இயேசுவும் இறைத் தந்தையின் ஆசியைப் பெறுகின்றனர் என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, ஒவ்வொரு குழந்தையும், தாய்க்காக நன்றி கூறவேண்டும். ஏனென்றால், நம் தாயே நமக்கொரு ஆசி. அந்தத் தாயால்தான் நாம் பெற்ற அனைத்து ஆசிகளும். தாயில்லாமல் நாமில்லை. தாயில்லாமல் நமக்கு இறைவனின் ஆசியுமில்லை. இது நமது மண்ணகத் தாய்க்கும் பொருந்தும். நமது மண்ணக, விண்ணகத் தாயாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும். அன்னை மரியாவால் நம் அடைந்த எண்ணிலடங்கா ஆசிகளுக்காக நன்றி கூறுவோமா!

மன்றாடுவோம்:

தாயும் தந்தையுமான இறைவா, ஒவ்வொரு தாயின் வழியாகவே நீர் பிள்ளைகளை ஆசிர்வதிக்கின்றீர். வளப்படுத்துகின்றீர். என் மண்ணகத் தாய்க்காக நன்றி கூறுகிறேன். அந்தத் தாயின் வழியாக நீர் தந்த ஆசிகளுக்காக, கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன். அதுபோலவே, என் விண்ணகத் தாயான அன்னை மரியவாவுக்காகவும் நன்றி கூறுகிறேன். அந்தத் தாயின் பரிந்துரையால் நீர் என்மீது பொழிந்து எண்ணிலடங்கா ஆசிகளுக்காக, அருள்கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன். ஒரு தாயினும் மேலாக என்னை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.