மூன்றாம் ஆண்டு 16-12-2012


நாங்கள் என்ன செய்யவேண்டும்?''


அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/> அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/> அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/> அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/> அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/> அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/> அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். 
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; 
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்/>


திருப்பலி முன்னுரை


இறை இயேசுவில் ப்ரியமுள்ள அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) மற்றும் இறைமக்களே! உங்கள் அனைவரையும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

நாம் மனம் மாறி புதிய வாழ்வைக் கண்டடையவேண்டுமென்று பொறுமையோடு காத்திருக்கும் நம் அன்புத் தந்தையின் திருப்பாதத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

அண்மையில் உள்ளதை நினைத்து அகமகிழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள அனைத்தையுமே பிறரோடு பகிர்ந்து வாழ திருமுழுக்கு யோவான் நம்மைத் தூண்டுகிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.'' தூய ஆவி என்னும் நெருப்பால் நமக்கு திருமுழுக்குக் கொடுக்கும் வலிமைமிக்க ஆண்டவரின் வருகைக்காக நாம் காத்திருக்கிறோம்.

அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த மனதோடு இயேசுவின் பிறப்பிற்காக காத்திருந்து, விழித்திருந்து, செபத்தில் நிலைத்திருந்து தகுந்த தயாரிப்போடு இருக்க அருள்வேண்டி செபிப்போம். அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிக்கப்படும் பதராக இல்லாமல், அவருடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; �சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்


எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 6)

பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.

பல்லவி

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். பல்லவி

4 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவிஇரண்டாம் வாசகம்


திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


எசா 61: 1 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

நாங்கள் என்ன செய்யவேண்டும்?


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, �நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, �இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார். வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, �போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர். அவர், �உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்'' என்றார். படைவீரரும் அவரை நோக்கி, �நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அவர், �நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்'' என்றார். அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, �நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.இறைமக்களின் வேண்டல்கள்:


பரிசுத்த ஆவியினால் திருழுழுக்குப் பெற்ற ஒவ்வொரு மனிதரும் பெற்ற வாழ்வை பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். உள்ளத்தில் அடைத்து வைப்பதற்காக தூய ஆவியானவர் தரப்படவில்லை. பிரபஞ்சம் ழுழவதும் நம்மை பகிர்ந்து கொடுப்பதற்காகவே அவர் தரப்பட்டிருக்கிறார். அசைந்தாடும் ஆவியானவர் பிறர் அன்புச் செயல்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எல்லாம் வல்ல இறைவா,

எம்திருத்தந்தை 16 ஆம் ஆசிர்வாதப்பரையும், எம் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நற்செய்தியை அறிவிப்பதே எனது கடமை என்பதை உணர்ந்து செயல்பட தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இம் மகிழ்வின் காலத்தில் அவற்றை நாம் விரயமாக்காது, தேவையற்ற, ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிடாது பொறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும், ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பே உருவான ஆண்டவரே,

உமது மூன்றாம் வருகைக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கச் செய்தருளும். நாங்கள் மனம் திரும்பி பாவ மன்னிப்பு பெறுகின்ற அருளைத் தந்தருளும். மேலும், மாந்தர் அனைவரும் உமது மீட்பைக் கண்டடையும் பாதைகளாக, சாட்சிகளாக நாங்கள் வாழ எங்களுக்குத் தூய ஆவி என்னும் கொடையைத் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வை வாக்களிக்கும் தந்தையே!

பலியிலே பங்கேற்று செபிக்கும் நாங்கள் ஒவ்வொருவரும் பகிர்வதில் மகிழ்வு இரட்டிப்பாகின்றது என்பதனை உணர்ந்து, எங்களது மகிழ்வினை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ வரம் அருள அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அவனியில் அவதரித்த அன்பு இறைவா!

மகிழ்வினை தொலைத்து நிற்கும் மக்கள் உம்மிலே கொண்டுள்ள நம்பிக்கையில் நாட்டம் கொண்டு, தொலைத்த மகிழ்வினை மீண்டும் பெற்று வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும். இந்த நவீன உலகில் எங்களது நம்பிக்கையானது குறைந்து கொண்டே செல்கிறது. எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நாங்கள் உம்மையே சார்ந்து, உம்மேல் முழுநம்பிக்கையுடன் வாழ நீர் தான் உறுதணையாய் இருக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆற்றலின் அன்பு தகப்பனே இறைவா!

எமது பங்கின் வளர்ச்சிக்காக உம்மிடம் மன்றாடுகிறோம். நாங்கள் ஞான காரியங்களில் அக்கறை உடையவர்களாகவும், பங்கின் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கக்கூடிய ஆற்றலையும், அருளையும் அளித்தந்தருளும்படியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


சிந்தனை


''அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார்'' (மத்தேயு 3:10-11)

மக்கள் மனம் மாற வேண்டும் என்றும் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றும் போதித்தார் திருமுழுக்கு யோவான். அப்போதனையைக் கேட்ட மக்களில் சிலர் தங்கள் பழைய வாழ்க்கைமுறையை மாற்றிட முன்வந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்வி இன்று நமது கேள்வியாக மாற வேண்டும்: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' (மத் 3:10). கடவுளின் அருள் நம் உள்ளத்தைத் தொடும்போது நாம் அதற்குப் பதில்மொழி வழங்குவது தேவை. அப்பதில் மொழிதான் ஒரு கேள்வியாக உருவெடுக்கிறது: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' இக்கேள்விக்கு யோவான் அளித்த பதில் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் நாம் பகிர்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாற வேண்டும் (மத் 3:11). இரண்டாவது, பேராசைக்கு நாம் இடம் கொடுத்தலாகாது (மத் 3:12). மூன்றாவது, நம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தலாகாது (மத் 3:14). யோவான் அறிவித்த புதிய வாழ்க்கை முறையைச் சுருக்கமாகக் குறிப்பிடுவதாக இருந்தால் அது ''பிறர் நலனில் அக்கறைகொண்டு வாழ்தலில் அடங்கும்'' எனலாம். நம்மை அடுத்திருப்போருக்கு நாம் அன்புகாட்டும்போது உண்மையிலேயே நம்மில் ''மன மாற்றம்'' நிகழ்ந்துவிட்டது எனலாம். -- மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் நிகழ்கின்ற மாற்றம். பழைய சிந்தனைப் பாணிகளைக் கைவிட்டுவிட்டு, நலமான புதிய சிந்தனை முறைகளை நாம் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் அத்தகைய மாற்றம் உள்ளத்தோடு மட்டுமே நின்றுவிடாது. மாறாக நம் வாழ்வில் செயல்முறையில் வெளிப்படும். எனவேதான் திருமுழுக்கு யோவான், ''மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்'' என்றார் (மத் 3:8). ''இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று திருமுழுக்கு யோவான் மக்களுக்கு அறிவுறுத்தினார். அந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1925) இதை வலியுறுத்துகிறது: ''மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை என்பதை எல்லாரும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்நலன்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் முறையான வழியில் தாம் உடைமையாகக் கொண்டிருக்கும் பொருள்களைத் தமக்கே உரியனவாக மட்டுமன்றி, எல்லாருக்கும் பொதுவானவையாகவும் கருதவேண்டும். அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்'' (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69).

மன்றாடுவோம்:

இறைவா, நாங்கள் பகிர்வு மனப்பான்மை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.
-->