பொதுக்காலம் 30 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 28-10-2012


''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்''

இயேசு அவரிடம், 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். 
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார்.
இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்/> இயேசு அவரிடம், 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். 
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார்.
இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர் இயேசு அவரிடம், 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். 
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார்.
இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்


திருப்பலி முன்னுரை


அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் 30 வது ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பார்வையற்ற பர்த்திமேயுக்கு இயேசு பார்வை அளித்த நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை தியானிக்கிறோம். எனவே, இன்று வாசகத்தின் கடைசி வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்று இயேசு கூறியதும், அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார் என்று வாசிக்கிறோம்.

பார்வை பெற்ற அம்மனிதர் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்: பார்வை பெறுவது கடவுளைப் புகழ்வதற்காகவும், இயேசுவைப் பின்பற்றுவதற்காகவும்தான் என்பது அவரது அனுபவம். பார்வை பெற்றதும் தனது குடும்பத்தினரைத் தேடிச் செல்லவில்லை, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக, கடவுளைப் புகழ்ந்தார், இயேசுவைப் பின் தொடர்ந்தார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர். நாமும் புதிய பார்வை பெறவேண்டும். நமது வாழ்வின் நோக்கம் கடவுளைப் புகழ்வதும், இயேசுவைப் பின்பற்றி வாழ்வதும்தான் என்பதை உணர்வதே அந்தப் புதிய பார்வை. வேறு எதற்காக இந்த வாழ்வு? வேறு எது நம் வாழ்வுக்குப் பொருள் சேர்க்கும்? வேறு எதுவுமல்ல. இவை மட்டும்தான். எனவே, இறைவனைப் புகழ்வோம். இயேசுவைப் பின்பற்றுவோம். இந்தப் புதிய பார்வையை இயேசுவிடமிருந்து பெறுவோம். இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


எரேமியா நூலிலிருந்து வாசகம் 31:7-9

ஆண்டவர் கூறுகிறார்; யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள். இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 126: 1-6

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்!

பல்லவி

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பல்லவி

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். 4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். பல்லவி

5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். 6 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். பல்லவி



இரண்டாம் வாசகம்



எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5:1-6

சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும். அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், "மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்றும் கூறப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

"இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்"


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, "அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, "துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார். இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


மானிட மகன் பணியேற்க அல்ல, பணிபுரியவே வந்தார். பணிவிடை பெறுவதற்கு அனைவருக்கும் ஆசைத் தான். சுகமாக வாழ்வதற்கு அவை உதவலாம் ஆனால், இயேசுவின் உயிர்ப்பிலே பங்கேற்க பணிவிடை புரிவது அவசியம். பணிவிடை புரியும் மனிதர்கள் பாடுகளை ஏற்கலாம், மரணத்தை தழுவலாம், அதுவே நிறைவாழ்வுக்கு வழி.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அருள்மழை பொழிபவராம் இறைவா,

நாங்கள் உம் வல்லமையால் அக ஒளி பெற்று உம்மைப் போற்றிப் புகழ எங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உலகின் ஒளியான இயேசுவே,

பார்வையற்ற மனிதர் மேல் பரிவு கொண்டு அவருக்குப் பார்வை அளித்தீரே. அதே பரிவோடும், இரக்கத்தோடும் எனக்கும் புதிய பார்வையை அருள்வீராக. உமது ஒளியைப் பெற்றுக்கொண்டு, நான் இறைவனைப் போற்றிப் புகழவும், உம்மைப் பின்பற்றவும் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பு இறைவா,

எம் பங்கு மக்கள் அனைவரும் இறையன்பு, பிறரன்பு இவற்றில் நாளும் வளர்ந்து இறைபக்தியில் சிறந்து விளங்கிட தூய ஆவியை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் என்கே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா,

எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

எங்களுக்குப் புதிய பார்வை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.






சிந்தனை


''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' (லூக்கா 18:42)

இயேசு புரிந்த புதுமைகள் மக்கள் வியந்து தம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படவில்லை. தம்மைக் கடவுள் என்று நிரூயஅp;பிப்பதற்காகவும் மட்டுமே அவர் புதுமைகள் ஆற்றவுமில்லை. இயேசு புரிந்த அதிசய செயல்கள் அவர் கடவுளின் வல்லமையோடு செயல்பட்டார் என்பதைக் காட்டியது உண்மைதான். ஆனால் மக்கள்மீது இயேசு இரக்கம் கொண்டு அவர்களுடைய பிணிகளைப் போக்குவதற்கும் அவர்களுக்குப் புதிய வாழ்வு அளிப்பதற்கும் அந்த வல்லமையைப் பயன்படுத்தினார். லூக்கா நற்செய்திப்படி, எருசலேமை நோக்கி நெடிய பயணம் மேற்கொள்கின்றார் இயேசு. வழியில் அவர் தம் சீடர்களுக்கும் பிறருக்கும் இறையாட்சி பற்றிப் போதிக்கிறார். இறையாட்சியின் பண்புகளை விளக்கும் விதத்தில் அவர் புரிந்த புதுமைகளும் அமைகின்றன. பார்வையற்ற ஒருவர் இயேசு அவ்வழியே போவதை அறிந்து, ''இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று உரக்கக் கத்துகிறார். அவர் அப்படி குரல் எழுப்புவது முறையல்ல என்று கூறி மக்கள் அவரை அதட்டுகின்றனர். ஆனால், இயேசுவின் இரக்கப் பண்பு பற்றிக் கேள்விப்பட்ட அந்த மனிதர் நம்பிக்கை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் எப்படியாவது தனக்குப் பார்வை அளிக்க முடியும் என்று அந்த மனிதர் நம்புகிறார். எனவே, இயேசுவைப் பார்த்து, ஆழ்ந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் அவர், ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என மனதுருக இறைஞ்சி வேண்டுகின்றார். -- ''பார்வை பெற வேண்டும்'' என்பது நம் மன்றாட்டும் கூட. சில சமயங்களில் நாம் பார்வை இழந்தவர்கள் போல நடந்துகொள்கின்றோம். நம் அகக் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகளைக் கூட மறுக்க நாம் தயங்குவதில்லை. சில உண்மைகள் நமக்குக் கசப்பாகத் தோன்றும்போது அவற்றைப் பார்க்க நம் கண்கள் மறுக்கின்றன. சில சமயங்களில் பழைய பார்வைகள் நம் கண்களைப் பார்வையிழக்கச் செய்துவிடுவதும் உண்டு. அந்த வேளைகளிலெல்லாம் நாம் எழுப்ப வேண்டிய மன்றாட்டு, ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை வெற வேண்டும்'' என்பதே. நம் கண்கள் நன்றாகத்தானே இருக்கின்றன என நினைத்து நாம் சில வேளைகளில் நமது பார்வையற்ற நிலையை மூடி மறைக்க எண்ணுகிறோம். ஆனால் நம் அகக் கண்களைத் திறந்து பார்த்தால் நாம் உண்மையிலேயே கடவுளின் பார்வையைப் பெறாமல் இருக்கிறோம் என உணர்ந்துகொள்ள வாய்ப்புப் பிறக்கும். கடவுளின் பார்வையைப் பெற வேண்டும் என்றால் நாம் நம்முடைய குறுகிய பார்வைகளை அப்புறப்படுத்திவிட்டு, நம் அகக்கண்களை அகலத் திறக்க வேண்டும். இதற்குக் கடவுளின் அருள் நமக்குத் தேவை. எனவே, பார்வை பெற நாம் எப்போதுமே இறைஞ்சுவது முறையே.

மன்றாடுவோம்:

இறைவா, எங்களுக்குப் புதிய பார்வை தந்தருளும்.
-->