யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வியாழக்கிழமை
2021-09-23




முதல் வாசகம்

என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்.''
இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி: ``படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா? ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: `உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் விதைத்தது மிகுதி. அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவு அடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான். உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். `எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
திருப்பாடல்கள் 149: 1-2. 3-4. 5-6, 9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.. ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' (லூக்கா 9:9)

இயேசு கலிலேயாவில் ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்தபோது புதுமைகள் பல நிகழ்த்தினார். அவரைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பலரும் பல பதில்களைத் தந்தனர். ஏரோதுவின் ஆணைப்படி கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றுகூட மக்கள் இயேவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததுண்டு. ஆனால் ஏரோது அப்படி நினைக்கவில்லை. அவன்தான் யோவானின் தலையைக் கொய்துவர ஆணையிட்டவனாயிற்றே. யோவான் இறந்தொழிந்தார் என்பது ஏரோதுவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பேசிக்கொண்டது வேறு ஒருவரைப் பற்றித்தான் என்பது ஏரோதுவுக்குப் புரிந்தது. என்றாலும் அந்த மர்ம மனிதர் யார் என்பதை ஏரோது தெரிந்திருக்கவில்லை.

இயேசு யார் என நமக்குத் தெரியுமா? பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எத்தனையோ மக்கள் இயேசுவை யார் என அடையாளம் தெரியாமலே வாழ்கின்றார்கள். இவர்களுள் கிறிஸ்தவரும் உண்டு, பிறரும் உண்டு. ''புதியது என்று உலகில் எதுவுமே இல்லை'' (காண்க: சபை உரையாளர் 1:9) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இவர்கள் ஏற்கெனவே யாவும் தெரிந்தவர்களாகத் தம்மைப் பற்றியே நினைத்துக்கொள்வதால் இயேசுவைப் பற்றி ஆழ்ந்த அனுபவ அறிவைப் பெற முயற்சிசெய்வதில்லை. நாம் ஒவ்வொருவரும் புதிய பார்வை பெற வேண்டும்; புதிய இதயம் கொண்டிருக்க வேண்டும்; அப்போது என்றுமே புதிதாகத் துலங்கி ஒளிர்கின்ற நற்செய்தியைப் புது முறையில் ஒவ்வொரு நாளும் அணுகுவோம். இவ்விதத்தில் இயேசு யார் என்பதை மேன்மேலும் ஆழமாக நம்மால் உணர்ந்தறிய இயலும். திறந்த உள்ளம் இருந்தால் கடவுளின் வெளிப்பாடு அங்கே நிகழுமன்றோ!

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தியாக வந்த இயேசுவின் ஒளி புதுப்புது வண்ணங்களில் எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் துலங்கிட அருள்தாரும்.