யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 3வது வாரம் புதன்கிழமை
2018-04-18




முதல் வாசகம்

, சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தன
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்8;1-8

1 ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். 2 இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். 3 சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

`அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
திருப்பாடல்கள் 66;1-7

2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள் பல்லவி .

3 கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர் ;4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள் . பல்லவி

5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை .6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம் பல்லவி .

7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:35-40

35 இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. 36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. 37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். 38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்;ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். 39 "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். 40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார். 35 இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)

இயேசுவை அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ''மன்னா'' என்னும் உணவைப் பெற்று வழங்கினார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ''தோரா'' என்னும் திருச்சட்டத்தை வழங்கினார். இயேசுவால் செய்யக்கூடுமான அதிசய செயல் உண்டா என மக்கள் கேட்கிறார்கள். அதிசயமான விதத்தில் மக்களுக்கு இயேசு உணவு வழங்கியதையும் இயேசுவைத் தங்கள் அரசராக ஏற்படுத்த அவர்கள் முயன்றதையும் மக்கள் மறந்துபோனது நமக்கு அதிசயமாகவே உள்ளது. இருப்பினும் இயேசு அவர்களுக்கு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை வழங்குவார். இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும். இது எவ்வாறு நிகழும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என நாம் விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இயேசுவை நம்புவது என்றால் என்ன? வரலாற்றில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே கையளித்ததால் நமக்கு உணவாக மாறினார். அந்த இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக நாம் ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்; நம் பாவங்களைப் போக்கி, நம்மைக் கடவுளோடு இணைப்பார்.

இயேசுவை நம்புவோர் இயேசுவின் போதனையைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பர்; இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடப்பர். இவ்வாறு நம் வாழ்வு இயேசுவின் போதனைப்படி அமையும்போது இயேசுவே நம் ஆன்ம வாழ்வுக்கு அடிப்படையும் ஊற்றாகவும் இருப்பார். தூய ஆவியை நமக்கு வழங்குவதாக இயேசுவே வாக்களித்துள்ளார். இவ்வாறு ஆவியின் வல்லமையால் திடம்பெறுகின்ற நாம் அவருடைய தூண்டுதலுக்கு அமைந்து நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அப்போது நாம் பெறுகின்ற நிலைவாழ்வு என்பது இவ்வுலகிலேயே தொடங்கி மறுவுலகில் நிறைவுறும். இந்த நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் திருவுளம் (யோவா 6:40).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் ஆன்ம தாகத்தைத் தணிக்கின்ற உம்மை நாடி வர எங்களுக்கு அருள்தாரும்.