யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





ஆண்டின் பொதுக்காலம் இறுதி வாரம் அதாவது 34 ஆம் வாரம் ஞாயிறு

திருவழிபாடு ஆண்டு - B

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
(இன்றைய வாசகங்கள் : தானி7:13-14 , தி.வெ1:5-8 ,யோவா18:33-37)



இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


திருப்பலி முன்னுரை - 1

அன்புக்குரியவர்களே!

ஆண்டின் பொதுக்காலம் இறுதி வாரம் அதாவது 34 ஆம் வாரத்தில் இயேசு அரசர் பெருவிழாவில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் இறைமக்கள் அனைவருக்கும் இயேசு அரசர் பெருவிழாவின் அன்பு வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன். உண்மைக்கு சாட்சியம் கூறுவதே என் பணி, வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைமகன் இயேசுவின் கூற்று அவரது பணி வாழ்வில் நிறைவேறியது. இவ்வுலகில் எத்தனை அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன. ஆனால் ஒன்றுகூட நிலையான அரசு இல்லை, காரணம் உண்மை இல்லை. இயேசு இவ்வுலகிற்கு கொண்டு வந்த அரசு நிலையான அரசு. அந்த நிலையான அரசின் மக்களாக வாழ வேண்டுமென்றால நம்மிடம் உண்மை இருக்க வேண்டும். நல்ல ஆயனாகிய இயேசுவின் மக்களாக நாம் வாழ அருள் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

திருப்பலி முன்னுரை - 2

கிறீஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! இறை இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று தாய் திருச்சபையானது நம் ஆண்டவரும், மீட்பருமான இயேசுக் கிறீஸ்துவை அரசராக நினைந்து விழாக்கொண்டாடுகின்றோம்.

அவருடைய அரசம், செயற்பாடுகளும் இவ்வுலக அரசர்களினதும், அரசுகளினதும் செயற்பாடுகள் போன்றது அல்ல. அவர் நீதிமான்களையல்ல பாவிகளையே தேடிவந்தவர் – தீயவர்கள் சாகவேண்டுமென்பது அவருடைய விருப்பமல்ல மாறாக அவர்கள் மனம்மாறவேண்டுமென்றே விரும்புகின்றவர். அவர் ஒரு நல்ல ஆயன். அமைதியும், அன்பும், கரிசனையும், இரக்கமும், பரிவும், பாசமும், நீதியும், உண்மையும், நேர்மையுமுள்ள ஒரு அரசன். இந்த விழாவைக் கொண்டாடும் இவ் வேளையில் உலக அரசுகளுக்காகவும், அரசியல், சமய, குழுக்களின் தலைவர்களுக்காகவும் இறைவனை மன்றாடுவோம். இவர்கள் அனைவரும் அழிவுக்கான சிந்தனைகளையும் திட்டங்களையும் களைந்தெறிந்துவிட்டு, மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கின்ற மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்து, அவர்களை வழிநடாத்தியருள வேண்டுமென்று அவர்கள் அனைவரையும் இத் திருப்பலியில் ஒப்புக்கொடுத்துச் செபிப்போம்.

முதல் வாசகம்

மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14

அந்நாள்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
திருப்பாடல் 93: . 1-2. 5

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! ``அகரமும் னகரமும் நானே'' என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, ``நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?'' என்று கேட்டார். அதற்குப் பிலாத்து, ``நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?''என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, ``எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார். பிலாத்து அவரிடம், ``அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, ``அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அரசர்கெல்லாம் அரசராகிய இறைவா!

எம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் மக்களுக்குப் பணிபுரியவே வந்தேன் என்ற இறைவனின் வார்த்தைக்கேற்ப, தங்கள் வாழ்க்கையில் நல்ல ஆயர்களாக இருந்து, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்ல வழியில் நடத்திசெல்ல தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தூயகத்தின் திருவுருவே இறைவா!

எம் பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு வாழவும், மனித நேயத்துடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, மதித்துவாழ தேவையான அருளைத்தந்தருளும், அனைத்துக்கும் மேலாக உமது நீதியின் அரசை விரும்பித் தேடவும், பாவம் என்னும் நோயால் உலகில் நிலவும் அன்பின்மை, ஆதரவின்மை, நம்பிக்கையின்மை, உதவியின்மை போன்றவை அகன்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கும் அன்புத் தந்தையே இறைவா!

உலக நாடு முழுவதிலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள், இன்னும் உதவியின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழும் ஏழைக் கைம்பெண்கள் ஆகியோரை உமது இரக்கத்தால் பாதுகாத்து வழி நடாத்திட வேண்டுமென்றும், நாங்கள் ஒவ்வொருவரும் கருணையும, இரக்கமும், அன்பும் உள்ளவர்களாகவும், நிபந்தனையின்றி அன்புப்பணிக்காக எம்மையே அர்ப்பணிக்கும் நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா!

எங்களைச் சூழ்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு சகோதரனையும், சகோதரியையும் மதித்து ஏற்றுக்கொண்டு, அன்புசெய்து வாழக்கூடிய உள்ளத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்றும், நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா,

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி: அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும், இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை

இயேசுவின் பாடுகள்

நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கு, பெரிய வியாழன் பாதம் கழுவும் பணிமூலம் முன்னுரை எழுதிய இயேசு, பெரிய வெள்ளியில் விரிவுரை எழுதுகிறார்.கெதரோன் நீரோடையில் தொடங்கி கொல்கொத்தா கல்லரையில் அடங்கும் வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்விரிவுரை இரத்தத்தால் வரையப்பட்டுள்ளது. நள்ளிரவில் தொடங்கி, வாதம் விவாதமின்றி விடியலுக்குள் புதிய பாஸ்கா பலியை பலியாக்கிவிட்டனர். "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"(யோவா18:38) " அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" (யோவா19:4) "இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,"(யோவா 19:6) " நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்".பிலாத்துவின்; சாட்சியம் இது. ஆனாலும், கைவசம் உள்ள கைவந்த கொடுஞ்செயல் அனைத்தையும் கையாண்டனர்.வன்சொல், வசை மொழி, கேலி கிண்டல்,அடித்தல் இடித்தல்,முள்முடி சாட்டை அடி.. .. கிழிந்து தொங்கும் சதைகள், இரத்தம் வடியும் உடல், கண்ணீர் சிந்தும் கண்கள், ஏங்கும் இதயம், சிலுவைச் சுமை, சிலுவை மரணம் இவை அனைத்தும் நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கான பல்வேறு விரிவுரைகள்.

மனிதனோடு என்றும் வாழ விரும்பிய இறைவன், அப்ப இரச வடிவில் தன் உடலையும் இரத்தத்தையும், பெரிய வியாழன் இராவுணவின் போது ஆன்ம உணவாக் கினார். இதே செயலின் இன்னொரு வடிவம் பெரிய வெள்ளிக்கிழமை முழுவதும் கடும் வேதனை, சோதனை, கொடுமை மத்தியில் நிகழ்ந்துள்ளது. நம் கணிப்பில் இரு நிகழ்வும் இரண்டு நாள் நிகழ்ச்சிகள். ஆனால் இரண்டும் ஒன்று. ஒரே பொழுதில் நிகழ்ந்தவை. ஆகவே ஒவ்வொரு திருப்பலியிலும் இவை இரண்டும் இணைந்தே நடைபெறுகின்றன..

நற்கருணை எனபது ஆண்டவனை மகிமைப்படுத்துவதை மட்டும் மையப்படுத்தியதல்ல.ஆண்டவன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனின் மீட்பையும் தன்னகத்தே கொண்டது. மனிதனை மீட்பதிலும் இறைவன் மாட்சியடைகிறார். ஒவ்வொரு திருப்பலியும் இவ்விரு நோக்கங்களுக்காகவும் பலியிடப்படுகிறது. கல்வாரியில்; நிகழ்ந்ததும் இதுவே. மனிதனோடு உறவு, சமாதானம் இல்லாத நற்கருணையும் , திருவிருந்தும் பொருளற்றது என்பதாலேயே, நற்கருணை விருந்தில் அமரும்முன் உறவை உருவாக்கிக்கொள்ள, 'ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக்கொள்வோம்' என்ற அழைப்பு கொடுக்கப்படுகிறது.பலியிட வரும் முன் " ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்(மத்5:23-24) இதைச் செய்வதுதான் பெரிய வெள்ளி. கல்வாரிப் பலி..

அயலானுக்காக வாழ்வதென்பது ஒரு பெரிய வெள்ளி வாழ்க்கை. அநியாயத் தீர்ப்பு - பழிச் சொல்லுக்கு குறை இருக்காது. கண்ணீர் வடிக்காத நாளும் நேரமும் சகஐம். அலட்சியமும் அவமானமும் அடுக்கி வரும். நீதி மன்றம் காவல்நிலையம் அலையும் அலைச்சல் அதிகம் இருக்கும். உடலிலும் உள்ளத்திலும் வேதனை தொடரும். உருட்டல் மிரட்டல் சந்திக்க வேண்டியதிருக்கும். மொத்தத்தில் ஒரு பெரிய வெள்ளி, நற்கருணை வாழ்வு அங்கெல்லாம் நடைபெருகிறது. இறைவன் மகிமையடைகிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற புதுவாழ்வுக்கு நன்றி!