யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

திருவழிபாடு ஆண்டு - B



வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. எசாயா 53:10-11

2. எபிரே 4:14-16

3. மாற். 10:35-45

திருப்பலி முன்னுரை -1

இறையாட்சிக்குரியவர்களே,

இறைமக்கள் கூடி வழிபடும்போது இறைவனையே தங்கள் மத்தியில் வரவழைப்பது என்ற முறையில் ஆண்டின் பொதுக்காலம் 29 ஆம் வாரத்தில் ஞாயிறு வழிபாட்டின் மூலம் ஆண்டவரோடு இருக்க வந்திருக்கும் இறையன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தை உரியதாக்குகிறேன்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது! இயேசுவின் தாழ்ச்சியையும் அதனால் அவர் அடைந்த மாட்சியையும் பற்றி இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அத்தோடு நம்முடைய பலவீனங்களையும், துன்பங்களையும், தேவைகளையும் அறிந்துள்ளார். ஆகவே அருட்துணை நமக்கு என்றும் உண்டு என்பது நமக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்: கொடியோருக்காகப் பரிந்து பேசினர். என்னும் வார்த்தைகள் நமது பாவத்தை உணர்ந்து, மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று புதுவாழ்வு வாழ அழைக்கின்றது. எனவே நாம் தாழ்ச்சி என்னும் பண்பை நம்மில் வளர்த்து நமது பாவத்தை உணர்ந்து, மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று புதுவாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

திருப்பலி முன்னுரை -2

அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத் தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அழைக்கப்பட்டவர்களே,
இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறது. துன்புறும் ஊழியராம் இயேசு, மக்களின் பாவங்களைப் போக்குமாறு தன் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் என்ற உண்மை தெளிவுபடுத்தப்படுகிறது. இயேசுவின் துன்பம் பலருக்கும் மீட்பை அளிக்கும் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றி நேர்மையாளர்கள் ஆகும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11

அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!
திருப்பாடல்33: 4-5. 18-19. 20,22

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அழைக்கப்பட்டவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் இறைமகன் இயேசுவும் நமது துன்பங்களில் பங்கேற்றார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. நமது துன்ப வேளையில் நாம் அவரது உதவியைத் துணிவுடன் நாடுமாறு திருமுக ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டாலும், பாவம் செய்யாமல் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நம் தலைமைக் குருவாம் இயேசுவின் உதவியைத் துணிவுடன் நாடும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16

சகோதரர் சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், ``போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்\'\' என்றார்கள். அவர் அவர்களிடம், ``நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?\'\' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, ``நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்\'\' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?\'\' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``இயலும்\'\' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ``நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்\'\' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ``பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்\'\' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் ஆயரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருச்சபையின் மக்கள் அனைவரையும் உம்மோடும், பிறரோடும், இயற்கையோடும் நல்லுறவு கொண்டவர்களாய் உருவாக்கத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அருள்மழை பொழிபவராம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மேன்மையை உணர்ந்து கொள்ளவும், தனது சிலுவை மரணத்தின் வழியாக அவர் பெற்றுத் தந்த மீட்பின் பலன்களை உரிமையாக்கி கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்றும், உலகில் வறுமை, நோய், தனிமை, முதுமை, இல்லாமை, இயலாமை போன்ற பல துன்பங்களால் வேதனையுறும் மக்கள் அனைவரும், உமது ஆறுதலைப் பெற்று மகிழச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் ஊற்றாம் இறைவா,

உலகில் பண ஆசை, பதவி மோகம், மத வெறி, தன்னலம், இன வெறி போன்ற காரணங்களால் நீதி மறுக்கப்படும் இடங்கள் அனைத்திலும் உம் இறையாட்சியின் மதிப்பீடுகள் விதைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட உதவ வேண்டுமென்றும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உலகப் பொருட்கள் மீதான நாட்டங்களில் இருந்து விலகி, உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ளும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

எம்மை மகிழச் செய்யும் தந்தையே இறைவா!

தாழ்ச்சி என்னும் பண்பை எம்மில் வளர்த்து எமது பாவத்தை உணர்ந்து, மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று புதுவாழ்வு வாழ வரமருள வேண்டு மென்றும், எவ்வேளையிலும் உமது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த உமது அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்லும் மனவுறுதியோடு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன் றாடுகின்றோம்.

இரக்கம் காட்டுபவரே இறைவா,

பல்வேறு பிரச்சனைகளாலும், நோய்களாலும், அடக்கு முறைகளாலும் துன்புறுவோருக்கு இரக்கம் காட்டும் மனதை மக்கள் அனைவருக்கும் வழங்கி உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

இளையோருக்காக :

அன்புத் தந்தையே இறைவா! உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டு மென்றும், இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை

''யாக்கோபும் யோவானும் இயேசுவை நோக்கி, 'நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்' என்று வேண்டினர்'' (மாற்கு 10:37)

கலிலேயாவில் பணியாற்றியபின் இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரோடு பன்னிரு திருத்தூதர்களும் பயணமாகப் போகின்றனர். வழியில் இயேசு மக்களுக்கும் சீடர்களுக்கும் போதிக்கிறார்; புதுமைகள் நிகழ்த்துகிறார்; தாம் துன்பங்கள் அனுபவித்து இறுதியில் கொடூரமான சிலுவைச் சாவுக்கு ஆளாகப் போவதையும் ஒருமுறையன்று, மூன்று முறை முன்னறிவிக்கிறார் (காண்க: மாற் 10:32-34). தம்மை எதிர்கொண்டு வருகின்ற துயரங்கள் பற்றிப் பேசுகின்ற இயேசுவுக்குத் துணையாக இருப்பார்கள் அவருடைய சீடர்கள் என நாம் எதிர்பார்ப்பது சரியே. ஆனால் அவர்களுடைய கவனமெல்லாம் வேறிடம் இருக்கிறது. அவர்கள் தங்கள் பதவி, அந்தஸ்து, புகழ், அதிகாரம் போன்றவற்றைப் பற்றியே கவலைப்படுவதாகத் தெரிகிறது. எனவேதான் யாக்கோபு, யோவான் ஆகிற இரு சீடர்களும் இயேசுவிடம் தனிச் சலுகை கேட்டது சரியல்ல என நாம் நினைக்கிறோம். ஏன், இயேசுவின் பிற பத்து சீடர்களும் அவ்வாறுதான் நினைத்தார்கள். தாங்கள் எல்லாருமே தம் குருவாகிய இயேசுவைப் பின்செல்லும்போது தங்களில் இருவர் மட்டும் சுயநலப் பார்வையோடு சலுகை கேட்டது ஏற்கத்தகாதது என்று அவர்கள் கோபப்பட்டனர். மாற்கு கூறுவதுபோல, ''இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்'' (மாற் 10:41).

தங்களுக்கென்று தனிச் சலுகை கேட்ட யாக்கோபும் யோவானும் செபதேயுவின் மக்கள். அவர்கள் இயேசுவுக்கு நெருக்கமான சீடர்களாக இருந்தவர்கள். இயேசு உருமாற்றம் அடைந்ததைக் காணும் பேறு அவர்களுக்கு வழங்கப்பட்டது (காண்க: மாற் 9:2-9). அதுபோலவே, இயேசு கெத்சமனியில் துன்புற்ற போதும் அந்த இரு சகோதரர்களும் அவரோடு இருக்கும் பேறு பெறுவார்கள் (மாற் 14:32-42). இவ்வளவு சலுகை பெற்றவர்கள் இன்னும் தங்கள் பதவி பற்றிக் கவலைப்பட்டது அதிசயமாக நமக்குத் தெரிகிறது. ஆனால் இன்றைய திருச்சபையில் தலைமைப் பணி ஏற்போரும் தங்களுக்கென்று பதவிகளைத் தேடாமல் இயேசுவைப் போலத் ''தொண்டு ஆற்றுவோராக'' மாற வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனைப் பின்பற்றி நாங்களும் பிறருக்குப் பணிசெய்து வாழ்ந்திட அருள்தாரும்.