யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இன்று பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு.

திருவழிபாடு ஆண்டு - B



வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./>


திருப்பலி முன்னுரை - 1

ஆண்டவரின் அன்பு மக்களுக்கு அவரின் புனித வேளையில் என் எளிமையான வாழ்த்தைக் கூறி மகிழ்கின்றேன். இன்று பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு.

வாழ்விழந்து, வழியிழந்து, விரக்தியோடும், அங்கலாய்ப்போடும் வாழும் மக்களுக்கு வலுவூட்டுவதாய் இன்றைய இறைவார்த்தைகள் அமைந்துள்ளன. இறைவனே மாபெரும் விடுதலைச் சக்தி. அவரிடம் வேற்றுமை எதுவும் கிடையாது. இறைவன் தம் மக்களை மீட்கவும், குணப்படுத்தவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவுமே விரும்புகின்றார். காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள்பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: என்னும் இறைவார்த்தைகள் எல்லையில்லா இறையன்பின் வெளிப்பா டாக அமைந்தள்ளன. எனவே நாமும் இறைவார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். என்னும் இறைவார்த்தையை வாழ்வாக்கி, வேற்றுமை ஒழித்து உறவின் இறைமக்கள் கமூகமாக வாழ இத்திருப்பலியில் வரங் கேட்டுச் செபிப்போம்.

திருப்பலி முன்னுரை - 2

இறைவன் அன்பு வழிநடத்தல்களில் தங்களை உட்படுத்தி ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். நன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இன்றைய திருவழிபாடு இயேசுவில் செயல்பட்ட கடவுளின் வல்லமையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர்கள் முன்னறிவித்த இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறியதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. அற்புதங்கள் செய்கின்றவராகிய நம் ஆண்டவரை நம்பிக்கையோடு தேடிச் சென்று நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நமது உடல், உள்ளக் குறைகளை நீக்க அவரால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார். நம் ஆண்டவரைப் போன்று பிறருக்கு நன்மை செய்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நன்மைக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுள் இந்த உலகிற்கு வருவார் என்ற நம்பிக்கையின் செய்தியை வழங்குகிறார். கடவுள் அநீதிக்கு பழிவாங்குபவ ராக வந்து மக்களை விடுவிப்பார் என்ற இனிமையான செய்தி தரப்படுகிறது. பார்வையற்றோர் பார்ப்பர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவரது நலந்தரும் வாக்குறுதிகளுக்கு தகுதியுள்ளவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, ``திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
திருப்பாடல் 146: 7. 8-9. 9-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9 ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

9 அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நன்மைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, அனைவரையும் சமமாக கருதும் மனநிலையோடு செயல்படுமாறு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறார். வேறுபாடின்றி அனைவருக்கும் கடவுள் நன்மைகளைப் பொழிவது போன்று, நாமும் வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் நல்லவற்றை செய்ய அழைக்கப்படுகின்றோம். கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்தவர்களாய், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, ``தயவுசெய்து இங்கே அமருங்கள்'' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, ``அங்கே போய் நில்'' என்றோ அல்லது ``என் கால்பக்கம் தரையில் உட்கார்'' என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி `எப்பத்தா' அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வல்லமையும், திடனும் தரும் தந்தையே இறைவா!,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும், இன்றைய உலகில் நாளுக்கு நாள் எழும் சவால்களைக் கண்டு நிலைகுலைந்து விடாது, உறுதியான விசுவாசத்தோடு பணி ஆற்றக் கூடிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டும் தந்தையே இறைவா!,

வாழ்விழந்து, வழியிழந்து, விரக்தியோடும், அங்கலாய்ப்போடும் வாழும் மக்களுக்கு விடுதலையைக் கொடுத்து, அவர்கள் பாதுகாப்பும், மகிழ்ச்சியம் நிறைந்த வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கொடைகள் அனைத்திற்கும் ஊற்றான இறைவா! ,

உமது பிள்ளைகளாகிய நாம், வெறுமனே மேலோட்டமான கொண்டாட்டங்களிலும், சடங்காசாரங்களிலும் எமது கவனத்தைச் செலுத்தாது , ஆவியிலும் , உண்மையிலும் வழிபடுகின்ற மக்களாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றவரும்: ,

பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றவரும் சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றவரும், ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரும்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றவணுமான தந்தையே எம் இளைஞர்களை ஆன்மீகத்திலும் அருள் வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,

உலகெங்கும் நீர் செய்து வரும் அற்புதங்களின் மேன்மையால் மக்கள் உமது வல்லமையை உணரவும், நீர் உண்மை கடவுள் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்றும், எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தன்னலத்தினைக் களைந்து, சமூக நலத்திலும், எளியவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, இறையாட்சிக்குரிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நலந்தரும் ஊற்றாம் இறைவா,

உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் முழுமையாக குணப்படுத்தி, மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக அவர்களை மாற்ற வேண்டுமென்றும், உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்'' (மாற்கு 7:33)

யூத இனத்தைச் சேராத பிற இன மக்கள் வாழ்ந்த பகுதி தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகும். இயேசு அப்பகுதிகளுக்குச் சென்றார் என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 7:31). அங்கே பிற இனத்தைச் சார்ந்த ஒருரை - காது கேளாவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை - இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்குக் குணம் நல்கிய நிகழ்ச்சியை மாற்கு தத்ரூயஅp;பமாகச் சித்தரிக்கிறார். அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் இல்லை, கேள்வித் திறனும் இல்லை. தாம் போதித்தவற்றை மக்கள் கவனமாகக் ''கேட்க வேண்டும்'' என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மாற் 7:6). அவரிடம் வாய்திறந்து சாதுரியமாக ''பேசிய'' ஒரு பெண்ணின் கோரிக்கையை இயேசு நிறைவேற்றி வைத்தார் (காண்க: மாற் 7:24-30). இப்போது இயேசு ஒரு மனிதருக்குப் ''பேசும்'' திறனையும் ''கேட்கும்'' திறனையும் அளிக்கிறார். ''பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது'' (சாஞா 10:21) என்னும் இறைவாக்கின் அடிப்படையில் இயேசு அம்மனிதருக்கு உள்ளறிவையும் ஞானத்தையும் அளித்தார் எனலாம்.

தனியே அழைத்துச் செல்லுதல், விரல்களைக் காதுகளில் இடுதல், உமிழ்நீரால் தொடுதல் ஆகிய செயல்களை மாற்கு குறிப்பிடுவதன் வழியாக இயேசு உண்மையிலேயே ஒரு ''மருத்துவராக'' செயல்பட்டார் என அறிகிறோம். ஆனால் வெளி அடையாளம் என்பது உள் எதார்த்தத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசு அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் கேள்வித் திறனும் வழங்கிய போது அந்த மனிதரின் உள்ளத்தைத் திறந்தார்; அவருடைய இதயத்தைத் திறந்தார்.அதைத் தொடர்ந்து, கடவுளின் வார்த்தையைக் ''கேட்கவும்'' அதைப் ''பேசவும்'' அந்த மனிதர் முன்வந்தார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நமக்கு இத்தகைய கேள்வித் திறனையும் பேச்சுத் திறனையும் நல்குவார். அப்போது நாம் இயேசுவை மாயஜாலம் நிகழ்த்துகின்ற அதிசய மனிதராகப் பார்க்காமல் கடவுளின் அன்பை நம்மோடு பகிர்கின்ற இறைமகனாக நம்பி ஏற்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு இறைஞானம் அளித்து நல்வழி காட்டும் இயேசுவிடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள அருள்தாரும்.