இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.

திருவழிப்பாட்டு ஆண்டு B (01-03-2015)

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்./> ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது : என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்./> ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது : என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்./> ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது : என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்./> ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது : என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்./> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/>


திருப்பலி முன்னுரை -1

இறை மக்கள் அனைவருக்கும் தவக்கால இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையின் வாழ்த்தைக் கூறிக்கொள்ளுகிறேன்.
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? என்னும் வார்த்தைகள் இறைவன் நம்மீது கொண்டுள்ள கரிசனையையும், பாசத்தையும், அவருடைய பராமரிப்பையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன. நாம் நிறைவாக வாழ நம்மைத் தடுப்பவை அத்தனையையும் தகர்த்தெறிய கடவுள் எப்படிச் செயலாற்றுகின்றார் என்பது இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நாம் அறிந்து கொள்ளும் மாபெரும் உண்மையாகும். எனவே நம் கடவுளின் பாசத்தை நன்கு உணர்ந்தவர்களாக, இறைவன் மீது நம்பிக்கை கொண்டு அவர் விரும்புவதை நாம் எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றுகின்றவர்களாக வாழ வரம் கேட்ட நம்மை அர்ப்பணித்தவர்களாய் இத் திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

மாட்சிக்கு உரியவர்களே,
எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.

நம் ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் மாட்சியில் பங்குபெற வேண்டுமெனில், முதலாவதாக நாம் அவரது பாடுகளில் பங்கேற்க வேண்டும். நாம் இயேசுவோடு இணையும்போது, இறைத்தந்தையின் உரிமை பிள்ளைகளாக மாற முடியும். இறைமாட்சியில் நாம் பங்கு பெறும்போது, பேதுருவைப் போன்று இயேசுவோடு இருப்பது நலம் என்பதை உணர்வோம். கிறிஸ்து இயேசுவின் வழியாக இறைவன் தரும் மாட்சியை உரிமையாக்கி கொள்ள வரம்வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,

முதல் வாசகத்தில் ஆபிரகாம் என்னும் அன்பான தந்தை இறைவனுக்குப் பணிந்து, தம் ஒரே மகனையே பலியிட முன்வருகின்றார். இறைவன் அவரது இறைப் பற்றில் மகிழ்ந்து, அவரை ஆசிர்வதிக்கின்றார். கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதில் எத்தகைய துன்பம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் கடவுளை நம்பி அக்கட்டளைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வரம்வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று `ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ``ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
திருப்பாடல் 116: 10,15. 16-17. 18-19

மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,

விசுவாசமுள்ள மனிதர் தனது பலத்தைவிட இறைவனின் பலம் தன்னோடு இருப்பதை உணர்ந்தது துன்பங்களை எதிர்கொள்கிறார். ஏனெனில்ஆழமான விசுவாசம் உள்ளவர்கள் சார்பாக இறைவன் இருந்து எல்லா எதிர்ப்புகளிருந்தும் அவர்களைப் பாதுகாக்கின்றார் என்று புனித பவுலடியார் கூறுவதை வாசிக்க கேட்போம்.

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31-34

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், ``மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, `இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

உடன்படிக்கையின் இறைவா,

நீர் திருச்சபையோடு செய்துகொண்ட உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழ திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது அருளாசிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்றும் எம் சார்பாக செயலாற்றம் தந்தையே இறைவா!

நாங்கள் ஒவ்வொரும் இத் தவக்காலத்தில் உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டு, அடுத்தவரின் நல் வாழ்விற்காக எம்மையே அர்ப்பணித்து, உமக்கேற்ற அர்த்தமுள்ள வாழ்வு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!

கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் வாழ்வை அள்ளி வழங்கும் இறைவா!

இன்றைய நாளில் இறைவார்த்தை யூடாக எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும் , சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு, உமது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, தீமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தாயும் தந்தையுமான எம் இறைவா!

இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும் இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக, நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2)

இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை விவரிப்பதில் பழைய ஏற்பாட்டு உருவகங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை, கதிரவனைப்போல் ஒளிரும் முகம், ஒளிமயமான மேகம், மேகத்திலிருந்து வரும் குரல், மோசேயும் எலியாவும் தோன்றுதல் போன்ற உருவகங்கள் ஆழ்ந்த பொருளை உணர்த்துகின்றன. அதாவது மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே உள்ளது. மேகம் என்பது கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளம். மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் குறிக்கின்றார்கள். இயேசு ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை மத்தேயு ஏற்கெனவே அறிவித்தார் (காண்க: மத் 5:17). வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டுகிறது (மத் 17:6). இயேசு வானகத் தந்தையின் ''அன்பார்ந்த மகன்''. நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் (மத் 17:6).

இயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.