இன்று நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.

திருவழிப்பாட்டு ஆண்டு B (22-02-2015)

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்/> இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்./> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/>


திருப்பலி முன்னுரை -1

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த திருமகன் இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து அவர் நமக்கு விடுத்துள்ள செய்திகளைக் கேட்டு வாசித்து உலக மக்களின் மீட்புக்கென முடிவில்லாக் காலத்துக்கும் ஒரேமுறையில் தன்னை ஈகம் செய்த இயேசுவின் பாடுகளை சிறப்பாகச் சிந்திக்க வாய்ப்பாயுள்ள இந்தத் தவக்காலத்தில் முதல் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க என்று அணியமாகியிருக்கும் உங்கள் ஒவ்வோருவருக்கும் இயேசு தரும் அருளும் சமாதானமும் இறை அமைதியும் உண்டாவதாக. புதிய சிந்தனைகளை சீரிய முறையில் ஏற்றுக்கொள்ளத் தூண்டும் இந்த நாட்கள் உயர் மதிப்பீடுகளை நம் வாழ்வாக்கி வாழ்ந்திட மாற்றத்திற்கான ஏற்ற காலமாக உள்ளன.

ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்: எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். என்னும் ஆறுதலும், ஆசீர்வாதமும் நிறைந்த செய்தியொன்று நமக்குத் தரப்படுகின்றது. இயேசு நம்மை வாழ்விப்பதற்காக நாற்பது நாட்கள் நோன்பிருந்து தன்னை அர்ப்பணித்தார். இறைத் தந்தையின் வாக்குறுதிகளும், இயேசுவின் அர்ப்பணமும் நம்மைப் பாவம், அழிவு போன்ற பேராபத்துக்களிலிருந்து மீட்கின்றன. இறைவனின் இந்த அருட்பெருக்கிற்காக நன்றி கூறுவதோடு, ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது வழியில் செல்ல வரம் கேட்போம். அத்தோடு, ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: என்று தூய உள்ளத்தோடு இறைவனிடம் சரணடைந்தவர்களாய் இத் திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த திருமகன் இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து அவர் நமக்கு விடுத்துள்ள செய்திகளைக் கேட்டு வாசித்து உலக மக்களின் மீட்புக்கென முடிவில்லாக் காலத்துக்கும் ஒரேமுறையில் தன்னை ஈகம் செய்த இயேசுவின் பாடுகளை சிறப்பாகச் சிந்திக்க வாய்ப்பாயுள்ள இந்தத் தவக்காலத்தில் முதல் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க என்று அணியமாகியிருக்கும் உங்கள் ஒவ்வோருவருக்கும் இயேசு தரும் அருளும் சமாதானமும் இறை அமைதியும் உண்டாவதாக. புதிய சிந்தனைகளை சீரிய முறையில் ஏற்றுக்கொள்ளத் தூண்டும் இந்த நாட்கள் உயர் மதிப்பீடுகளை நம் வாழ்வாக்கி வாழ்ந்திட மாற்றத்திற்கான ஏற்ற காலமாக உள்ளன.

மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் சோதனைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், நமது வாழ்க்கை சோதனைகளில் வெற்றிபெற இறைவனின் உதவி வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,
உலகையும் அதை ஆண்டு நடத்த மனிதரையும் படைத்த கடவுள் உலகில் பாவம் மிகுவதைக் கண்டு வருந்துகிறார். நோவா மற்றும் அவருடைய குடும்பம் தவிர மற்றெல்லா மனிதரையும் வெள்ளப் பெருக்கால் அழித்துவிடுகிறார். வெள்ளப் பெருக்கு முடிந்ததும் கடவுள் நோவாவுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறார். உலகத்தில் பேரழிவு கொணர்கின்ற வெள்ளப் பெருக்கால் கூட கடவுளின் நிலையான அன்பை அழித்துவிட இயலாது என்று வெளிப்படுத்தும் இன்றைய முதல் வாசகத்திற்கு செவிக் கொடுப்போம்.

வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: ``இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், ``எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.
திருப்பாடல் 25: 4-5 6-7. 8-9

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,
கிறிஸ்துவர்கள் வேதனையை மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவிக்க வேண்டும். அப்பொழுது கடவுள் அவர்களோடு இணைந்து நட்புறவு கொள்கிறார். அவர்களை மலை அளவுக்கு உயர்த்தவும் செய்கிறார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவாகக் கூறுவதைகேட்போம்

இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்துகொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வானதூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

உடன்படிக்கையின் இறைவா,

நீர் திருச்சபையோடு செய்துகொண்ட உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழ திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது அருளாசிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மீட்பு அளிப்பவராம் இறைவா,

உமது திருமகன் வழியாக உலக மக்கள் அனைவரோடும் செய்துள்ள உடன்படிக்கையை புதுப்பித்து, உம்மை ஏற்காத மக்கள் எல்லோரும் உமது மீட்புத் திட்டத்தில் பங்குபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புதுவாழ்வு தருபவராம் இறைவா,

இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் பல்வேறு நோய்கள், பிரச்சனைகள், துன்பங் களால் வருந்தும் மக்கள் அனைவரும் உமது இரக்கத்தால் புதுவாழ்வைப் பெற்றுக் கொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!

கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனை களைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தாயும் தந்தையுமான எம் இறைவா!

இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும் இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக, நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

"அலகை அகன்றது. வானதூதர்; பணிவிடை செய்தனர்"

ஓவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. பிறப்புக்கு ஒரு காலம் உண்டு, இறப்புக்கு ஒரு காலம் உண்டு. அழுகைக்கு ஒரு காலம் உண்டு, சிரிப்புக்கு ஒரு காலம் உண்டு, போருக்க ஒரு காலம் உண்டு, அமைதிக்க ஒரு காலம் உண்டு என (சபைஉரை.03:01-11 சபை உரையாளர் உரைக்கின்றார். அதுபோல, இறைவன் நம் மனமாற்றத்திற்கு காலத்தை கொடுக்கின்றார். இது இரக்கத்தின் காலம், மன்னிப்பின் காலம், அதை பயன்படுத்தி நாம் மனமாற்றத்தை இந்தக்காலங்களில் பெறுவோம்.

இறைமகன் தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார், பாலை நிலத்தில் நாற்பது நாள் இருந்தார். சாத்தனால் சோதிக்கப்பட்டார், காட்டு விலங்குகளிடையே இருந்தார் என இன்றைய நற்செய்தி கூறுகிறது. புhலைநில வாழ்வு, சாத்தான் சோதனை, காட்டு விலங்குகள் என அந்த வாழ்வை நினைக்கவே கடினமான ஒன்று. பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களை நாற்பது ஆண்டுகள் வழிநடத்திய இறைவன், இன்று தன் ஒரே மகனை நாற்பது நாட்கள் பாலைநில வாழ்விற்கு உட்படுத்துகிறார். உண்ணவோ, குடிக்கவோ, தங்கிடவோ, உடனிருக்க யாருமில்லா நிலை என எதுவுமே இல்லா நிலை. பல துன்பங்கள், சோதனைகள். இன்னல்கள் கொண்ட வாழ்வு. அத்தகைய நிலையில்தான் நாம் இறையன்பை, நம்மை உணர முடியும்.

சோதனைகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வந்து கொண்டேதானிருக்கும். அந்தச் சோதனைகளில் சாத்தான் நம்மை பலவீனப்படுத்தி பாவத்தில் விழவைக்கும். ஏனென்றால், உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்காலமெனக் கர்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது (01பேதுரு,05:08). ஆகவே, நாம் அலகையின் சோதனையில் வீழ்ந்திடாது விழிப்புணர்வுடனிருக்கும்போதுதான் பாவத்திலிருந்து தப்பிக்க முடியும். அன்று, ஆதாம், ஏவாளை பாவத்தில் விழச்செய்த அலகை இன்றும் அதன் வேலையை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. ஒருவன் சோதனைக்குள்ளாவது அவனது சொந்த இச்சையாலேதான். தாவீது தன் வாழ்வில் சோதனைக்குள்ளாகி பாவத்தில் வீழ்ந்தது, அவரது சொந்த இச்சையாலேதான். யூதாஸ் வாழ்விலும் அலகை பணத்தின் வழியாக வந்து அவனை சோதனைக்குள்ளாக்கியது. அலகை விரித்த வலையில் அவன் விழுந்ததுபோலவே நாமும் இன்று அலகையின் பலவகை சோதனையில் விழுந்து விடுகின்றோம். இறைவன் யாரையும் சோதிப்பதில்லை, ஆனால், சோதிக்க அனுமதிக்கிறார்(யோபு.02:05,06). அதில் நம் மனஉறுதி புடமிடப்படுகிறது. யோபு எப்படி அலகையின் எல்லாச்; சோதனைகளிலும் பாவத்தில் வீழ்ந்திடாமல் மனஉறுதியோடிருந்தாரோ, அத்ததைகய மனஉறுதியுடன், விழிப்பணர்வுடன் இருந்து, பாவத்தில் வீழ்ந்திடாமலிருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நாடி வருவோரை நீர் அன்புடன் ஏற்பதுபோல நாங்களும் செயல்பட அருள்தாரும்.