இன்று பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (15-02-2015)

நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/> நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும/>


திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசுவின் அன்புள்ள சகோதரர்களே! சகோதரிகளே ஆண்டின் பொதுக்காலம் 6 ஆம் வாரத்தில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் திருமகன் இயேசுவின் பெயரால் என் வணக்கத்தையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். தொடுதல் எனும் செயல் தொடுபவர், தொடப்படுபவர் உள்ளளங்களில் உடலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலுள்ள செயல் ஆகும். இதை இன்றைய வழிபாட்டு வாசகங்களடன் இணைந்து ஆய்வு செய்ய முயல்வோம்.

இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க அழைப்பு விடுக்கிறது. 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்ற தாழ்ச்சியுள்ள வேண்டுதலை ஆண்டவர் முன் சமர்ப்பிக்க இன்று நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம்மீது கருணை கூர்ந்து, நமக்கு நிறைவான நலன்களைக் கட்டளையிடுவார். நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள், இடையூறுகளில் கடவுளின் அருட்கரம் நம்மை வழிநடத்த வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.





முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகத்தில், தொழுநோயாளர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் வழங்குவதை நாம் காண்கிறோம். மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாக தொழுநோய் இருந்ததால், தொழுநோயாளர்கள் சமூகத்தில் இருந்து விலகி இருக்குமாறு ஆண்டவர் அறிவுறுத் துகிறார். நமது தீட்டான தீய குணங்களை மற்றவர்களும் கற்றுக்கொள்ளாத வகையில், நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: �ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும். அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, `தீட்டு, தீட்டு', என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
திருப்பாடல் 32: 1-2. 5. 11

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது செயல்கள் அனைத்தும் கடவுளின் மாட்சிக் காகவே செய்யப்பட வேண்டும் என்று திருத்தூதர் பவுல் அறிவுரை வழங்குகிறார். எப்பொழுதும் நான், எனது என்றே இறைவனிடம் கேட்டு பழகிவிட்ட நாம், அவருக்காக என்ன செய்தோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நாம் கடவுளுக்கு விருப்பமானவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்; நீங்கள் என்னைப்போல் நடங்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 - 11: 1

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ``இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

மன்னிப்பு அளிப்பவராம் இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த வழியில் வாழ்ந்து, இறைமக்கள் அனைவரையும் பாவம் என்ற தொற்றுநோயிலிருந்து விடுவித்து வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நல்வாழ்வு அளிப்பவராம் இறைவா,

நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், வேலையின்மை, குழந்தை யின்மை, உணவின்மை, தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வருந்தும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு முழுமையாக நலம் அளித்து உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர்கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும் எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்; பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மகிழ்ச்சி அளிப்பவராம் இறைவா,

வேறுபாடுகளை கடந்து மனிதத்தை போற்றும் உன்னத உணர்வு பெறவும்! நோயின் படுக்கையில் தனிமையில் வருந்தும் உள்ளங்களுக்கு, குணமளிக்கும் ஆவியின் துணை தந்து தேற்றியருளவும், வேறுபாடுகளின் கொடுமையினால் உரிமையை இழந்து நிற்கும் யாவருக்கும் நீரே துணையிருந்து அவர்கள் தங்களது போராட்டத்தில் வெற்றி பெற அருள்தரவும், பரிவுள்ள நெஞ்சத்தினராக நாங்கள் இருந்து பதைபதைத்த உள்ளத்தினருக்கு உதவிட அருள்தரவும், எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமக்கு உகந்தவர்களாக வாழவும், துன்ப வேளைகளில் உமது உதவியைப் பெற்று மகிழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான எம் இறைவா!

இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும் இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக, நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற்கு 1:41)

மக்களுக்கு நன்மை செய்துகொண்டே சென்ற இயேசு நோயுற்றோருக்கு குணம் நல்குவதைத் தம் சிறப்பான பணியாகக் கருதினார். மக்களுக்கு நலம் கொணர்வது அவர்கள் பெறுகின்ற மீட்புக்கு வெளி அடையாளம் ஆயிற்று. இவ்வாறு நலம் பெற்ற மனிதருள் பல தொழுநோயாளரும் இருந்தனர். தோல் சம்பந்தமான எந்நோயும் தொழுநோய் எனவே கருதப்பட்டு, அதனால் பீடிக்கப்பட்டோர் பல வகைகளில் துன்பப்பட்டனர். அவர்கள் சமுதாயத்திலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் விலக்கப்பட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்களை இயேசு தேடிச்செல்கின்றார். அவர்களோடு கடவுளின் அன்பைப் பகிர்ந்துகொள்கின்றார். தொழுநோயாளரின் அருகில் சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசு ''தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற் 1:41). இது ஒரு துணிச்சலான செயல்தான். அக்கால சமுதாயத்தின் மதிப்பீடுகளை இயேசு இங்கே புரட்டிப்போடுகின்றார். நோயோ உடல் ஊனமோ மனிதரை இழிவுபடுத்த முடியாது என இயேசு உணர்த்துகின்றார்.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரை நாடிச் சென்று அவர்களுக்கு நலமளித்து, அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கும் பணியை இயேசு செய்கிறார்; வழிபாட்டில் பங்கேற்க வழிவகுக்கின்றார். இன்றைய உலகம் சிலரைத் தொழுநோயாளர்போலக் கருதி ஒதுக்கிவைக்கிறது; அவர்களுக்கு மனித மாண்பை மறுக்கிறது. இயேசு இப்பார்வையை எதிர்க்கிறார். கடவுளின்முன் அனைத்து மனிதரும் ஒரே மதிப்புடையவர்களே எனக் காட்டுகிறார். இப்பார்வையை நாமும் பெற வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மைத் தூய உள்ளத்தோடு நாடிவர எங்களுக்கு அருள்தாரும்.