இன்று பொதுக்காலம் 3 ஆம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (25-01-2015)

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/>


திருப்பலி முன்னுரை - 1

திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் என் இனிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி ஆண்டவரின் அருள்பெற அணிதிரளும் உங்கள் அனைவருக்காகவும் பணிவுடன் இறைவனை வேண்டி நிற்கின்றேன். ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் வாரத்திலிருக்கும் நாம் இன்றைய திருப்பலி வழிபாட்டிலிருந்து இறைவன் முன் உலகோர்முன் புதிய படைப்புக்களாக நிற்க வழிகாட்டப்படுகிறோம். மாறிவரும் உலகில் மாற்றங்கள் எங்கும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இம்மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? வெறுமனே வெளிப்புறத்தில் மட்டும்தானா? அல்லது உள்ளார்ந்த முழுமாற்றமா? என்று இன்றைய பலியின் வழிகாட்டலில் சிறப்பாக சிந்தித்து எத்தகைய இலக்குகளோடு மாற்றங்கள் நம்மில் நிகழவேண்டும் எனும் நோக்கில் ஆய்வு செய்து தீர்மானங்கள் எடுத்து இன்றைய திருப்பலியில் நிறைவான பலன் பெற முயல்வோம்.

திருப்பலி முன்னுரை-2

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு இயேசு அழைத்தபோது படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள். இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே. இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார். பணம், பட்டம், பதவி, பேர், புகழ் இவைகளை விட்டுவிட்டு அவரை பின்தொடர விரும்புகின்றோமா? நாம் எதில் நிறைவு காண்கின்றோம்? உலகச் செல்வத்திலா? இயேசுவிலா? உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.





முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நினிவே நகரத்து மக்கள் யோனாவின் வழியாக இறைவன் கூறிய வார்த்தைகளை கேட்டு உடனே மனம் வருந்தினார்கள், மனமாற்றம் அடைந்தார்கள். இறைவனும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்களை மன்னித்து அன்பு செய்தார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. ஓவ்வொரு நாளும் இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்முடன் பேசுகின்றார். அவரின் குரலுக்கு நம்முடைய பதில் என்ன என்பதை சிந்தித்தவர்களாக இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-5, 10

அந்நாள்களில் இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்த குரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்
திருப்பாடல் 25: 4-5. 6-7. 8-9

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

கொரிந்து நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை மறந்துவிட்டு உலகச் செல்வங்களில் அதிகம் பற்று உடையவர்களாகவும், அவற்றில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைக் கண்ட பவுலடியார் உலகச் செல்வங்களில் உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள் ஏனெனில் அவை நிலையானது அல்ல மாறாக அழிந்துபோககூடியவை என்று கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கவனம் எதன் பக்கம் இருக்கின்றது என்ற சிந்தனையுடன் இப்போது வாசிக்கப்படும் வாசகத்தை கேட்போம்.

இந்த உலக அமைப்பு கடந்துபோகக் கூடியது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 29-31

அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

யோவான் கைதுசெய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ``காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார். ]அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல்ல ஆயன் நானே’ என்று சொன்ன இறைவா!

உமது அன்பு பிள்ளைகளை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும் நலமுடன் வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உம்மிடம் அழைத்து வரவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமது நம்பிக்கை உன்னை குணமாக்கியது’ என்று கூறிய இறைவா,

என் பங்கில் உள்ள நோயாளிகள் அனைவரும் உம்மையே நம்பியுள்ளனர். அவர்களை குணப்படுத்தும். அவர்கள் குணமடைந்து மீண்டும் தங்கள் பணிகளை தொடர தேவையான சக்திகளை தந்தருளவும், பெற்றோர்கள், ஆசான்கள் உமக்குள் என்றும் வாழ்ந்து, பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்வழி காட்டவும், உமக்காகப் பொறுமையுடன் காத்திருந்து, உமது திருவுளத்தை நிறைவேற்றிடவும் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும், துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விண்ணரசு சிறுபிள்ளைகளுக்கே உரியது’ என்று உரைத்த இறைவா,

சிறுவர் சிறுமிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழவும் ஞானத்திலும், பக்தியிலும் வளரவும் உமக்கு உகந்த பிள்ளைகளாக வாழவும் தேவையான வரம்தரம், பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள்மீதும் மனமிரங்கி அவர்கள் உண்மையான மன மாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி திருக்குடும்பமாகிய அன்னை மரியா, தூய யோசேப்பு, இயேசு ஆகியேரைப் பின்பற்றி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்றுரைத்த தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவர் மீதும் மனமிரங்கி நீர் உம் திருமகன் இயேசுவை அனைத்து நலன்களாலும் நிரப்பியது போல எம் இளைஞர்களையும் ஆவியின் வல்லமையால் நிரப்பி, ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும் , உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று இயேசு கூறினார்'' (மாற்கு 1:15)

இயேசு வழங்கிய போதனையின் மையக் கருத்தைச் சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் அது ''இறையாட்சி'' என்னும் ஒரு சொல்லில் அடங்கும் எனலாம். கடவுளின் ஆட்சி பற்றியே இயேசு பேசினார். என்றாலும் இதுதான் கடவுளின் ஆட்சி என்று ஓரிரு சொற்களில் விளக்கிட இயலாது. இயேசு கடவுளாட்சி பற்றி வெவ்வேறு கோணங்களிலிருந்து போதித்தார். கடவுளாட்சி எதில் அடங்கியிருக்கிறது? அந்த ஆட்சியில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுள் நம்மைத் தம் ஆட்சியில் எவ்வாறு ஏற்கின்றார்? கடவுளாட்சியை நாம் எங்கே கண்டுகொள்வது? அதற்கான விவிலிய அடிப்படைகள் என்ன? - இத்தகைய பல கேள்விகளுக்கும் நாம் பதில் காண முனைந்தால் விவிலியம் நமக்குத் துணையாக அமையும். இயேசு கடவுளின் ஆட்சியை மன மாற்றத்தோடு இணைத்துப் பேசுவது கருதத் தக்கது. மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பது இறையாட்சியில் பங்கேற்க முதல் நிபந்தனை ஆகும். மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த புரட்சியை ஏற்படுத்துவதாக அமையும். இதுவரை நாம் எந்த சிந்தனைப் பாணியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தோமோ அதை அடியோடு மாற்றியமைத்து ஒரு புதிய சிந்தனைப் பாணியை, கடவுளின் சிந்தனைப் பாணியை, நமதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது இறையாட்சியில் நாம் பங்கேற்போம்.

கடவுளின் சிந்தனை எதில் அடங்கும்? இக்கேள்விக்கான பதில் இயேசுவின் வாழ்க்கை முழுவதிலும் துலங்குகிறது. இயேசு கூறிய சொற்கள், அவர் புரிந்த செயல்கள், அவர் ஆற்றிய புதுமைகள், அவரது வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற அனைத்தும் கடவுளின் ஆட்சி யாது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. எனவே, கடவுளின் ஆட்சி மனித வாழ்க்கையைக் கடவுளுக்கு உகந்த விதத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. இத்தகைய வாழ்க்கை இவ்வுலகில் தொடங்கி மறுமையில்தான் நிறைவுறும். அப்போது இறையாட்சியின் முழுமையும் வெளிப்படும். இயேசு நம்மிடம் கோருகின்ற மன மாற்றம் இன்றே இப்போதே நிகழ வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சி வருக!