இன்று திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (14-12-2014)

யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/> யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்.' எனப் பறைசாற்றினார்/>


திருப்பலி முன்னுரை

அன்பு இறைவனில் நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ள அன்புச் சகோதர சகோதரிகளே, இன்று மகிழ்ச்சியின் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். மகிழ்வையும் நிறைவையும் வழங்கும் இறைத்திட்டத்தில் பங்கேற்க அணியமாயிருந்து இன்று ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன். இன்று திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.

மீட்பரின் வருகை மிக அருகில் உள்ளது என அறிவிக்க வந்த திருமுழுக்கு யோவானைப்பற்றி அறிந்துகொள்ள பரிசேயர் முயன்றனர். நீர் யார்? என்ற கேள்வி அவர்முன் வைக்கப்பட்டது.
மெசியா அல்ல.
எலியா அல்ல.
இறைவாக்கினர் அல்ல.
பாலை நிலக் குரல்.
அன்பானவர்களே இன்றும் நம் மத்திஙில் அவர் அப்படியே உலாவுகிறார்.
பசித்திருக்கும் ஒருவராக.
தாகமுள்ள ஒருவராக
ஆடையற்றவராக.
அன்னியராக
நோயுள்ளவராக
சிறையில் இருப்பவரா
மத்தேயு நற்செய்தியாளர் கூறுவதுபோல இன்றும் நம் அருகாமையில் இருக்கும் அவரை நாம் சந்திக்க முடியும். தேவையில் இருப்போரை சகோதரராக ஏற்று நாம் வாழும்போது அவருடன் நாம் மகிழ்வுடன் வாழ முடியும் எனவே இயேசு வெளிப்படுத்திய இறைத் திருவுளப்படி எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் மறந்து கூட தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். எனவே சகோதரர்களே இன்றைய வார்த்தை வழிபாட்டில் நாம் உணர்த்தப்பட்டது போல எப்பொழுதும் மகிழ்ந்திருப்போம், மகிந்திருக்கச் செய்வோம் இடைவிடாது செபிப்போம், செபிக்கச் செய்வோம் என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம், நன்றிகூறச் செய்வோம் நம்மை அழைக்கும் இயேசுவிடம் கூடிவருவோம். அவர் அனைத்தையும் தூய்மையாக்குவார் உடல், உள்ளம், ஆன்மாவைக் காப்பார். நம் உள்ளங்களை அவரிடம் காணிக்கையாக்குவோம் திருப்பலியில் அவருடன் இணைவோம் ஆமென்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டோரின் பணிகள் பற்றியும், அவ்வாறு தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை ஆண்டவர் விடுதலை, நேர்மை போன்றவற்றால் அழுகுறச் செய்து நல்ல நிலத்தினைபோல் பலன் கொடுக்கச் செய்வார் எனக்கூறும் இறைவாக்கினர் எசாயாவின் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2ய, 10-11

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.
லூக் 1: 47-48. 49-50. 53-54

7 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி

53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமை பெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த மனதுடன் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் பவுல் அடியாரின் குரலுக்கு செவிமடுப்போம்.

வரும்போது கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாராக!
. திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சகோதரர் சகோதரிகளே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8,19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, �நீர் யார்?'' என்று கேட்டபோது அவர், �நான் மெசியா அல்ல'' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, �அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?'' என்று அவர்கள் கேட்க, அவர், �நானல்ல'' என்றார். �நீர் தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?'' என்று கேட்டபோதும், அவர், �இல்லை'' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், �நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "`ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே'' என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், �நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?'' என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், �நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை'' என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ள தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும் நிறைவான ஆன்மிகச் சக்தியையும், பலத்தையும் வழங்கி ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், அருள்தரும் ஆண்டினை முழங்கவும், அவர்களை வழிநடாத்திக் காத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரான தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருக்கவும். இடைவிடாது இறைவனிடம் வேண்டவும். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறவும். எங்களுள் தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்காதிருக்கவும, இறைவாக்குகளைப் புறக்கணிக்காது அனைத்தையும் சீர் தூக்கிப்பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு, எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகி வாழவும் வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும் , உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நல்லதையே அருளும் தந்தையே இறைவா!

ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் இறை அன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழியவும், பல்வேறு சூழ்நிலைகளால் புலம் பெயர்ந்து வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் நிரந்தர வசிப்பிடம் பெற்று அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரும்பெரும் செயல்கள் புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

உலக நாடுகளில் பெருகிவரும் பிரிவினைகளும், ஆணவமும், தன்னலமும், ஊழல்களும் ஒழிந்து மக்கள் அனைவரும் அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

கருணையின் தேவா!

எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

உலக நாடு முழுவதும் பரவிவரும் பல்வேறுபட்ட கொடிய நோய்கள் இல்லாதொழியவும், இயற்கையாகவும், மனிதராலும் உருவாக்கப்படும் எல்லா அழிவுகளும் இல்லாது போகவும்: மக்கள் அனைவரும் உம்முடைய குரலுக்கே செவிகொடுத்து, உம்மைப் பின்பற்றி வாழவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''யோவான், 'நான் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' என்றார்'' (யோவான் 1:26)

திருவருகைக்காலம் - ஞாயிறு 3

ஆண்டவருடைய வருகை எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனென்றால் அவர் �ஒடுக்கப்படுகிறவர்களுக்கு நற்செய்தியாகவும் உள்ளம் உடைந்தோர்க்கு ஆறதலாகவும் சிறைப்பட்டோருக்கு விடுதலையாகவும்� இருப்பார். மணமக்களின் மகிழ்ச்சியைப் போன்றும், விதையை துளிர்க்கச் செய்யும் பசுமையான நிலம் போன்றும் அவர் நம்மை பூரிப்புக்கு உள்ளாக்குவார். இவ்வாறு தாழ்நிலையில் இருப்பவர்களை உயர்த்துவார்.

சமூக, பொருளாதார, பண்பாட்டுத்தளத்தில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கி சமப்படுத்தும் மாண்புமிக்க புதிய சமுதாயத்தை, புரட்சிச் செயல்பாடுகளின் வழியாக உருவாக்கிட கடவுள் மனிதனாக, உலகிற்கு ஒளியாக வர இருக்கிறார். நாம் அவருடைய நிறை வருகைக்காக நம்மைத் தயார் செய்வோம்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவை நாங்கள் அறிந்து அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.