திருவழிப்பாட்டு ஆண்டு A (15-12-2013)

வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/> வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?/>


திருப்பலி முன்னுரை

அன்பு இறைவனில் நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ள அன்புச் சகோதர சகோதரிகளே, இன்று மகிழ்ச்சியின் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். மகிழ்வையும் நிறைவையும் வழங்கும் இறைத்திட்டத்தில் பங்கேற்க அணியமாயிருந்து திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன். காலம் காலமாக மெசியாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் அடுத்தடுத்து வந்த இறைச் செய்திகளைக் கேட்டு நடந்ததின் வழியாகவும் நடைபெற்ற சிறப்புச் செயல்பாடுகளில் பங்கேற்றதன் வழியாகவும் இறைத் திட்டத்துக்குள் இணைந்தார்கள். நாமும் இன்று சிறப்பாக நமக்கு வழங்கப்படும் மகிழ்வு தரும் இறைச் செய்திகளைக் கேட்டு அதன்படி நடந்து இறையரசின் மக்கள் எனும் உயர் நிலையை நமதாக்குவோம்.

ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க வந்துள்ள நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம். இன்றைய நாளில், உறுதியின் உறைவிடமான இறைவன் அருளும் உன்னதமான வாழ்வை இறைவார்த்தைகள் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆறுதல், நிறைவு, செல்வம், இன்பம் அனைத்தையும் பாய்ந்தோடும் ஆறுபோலவும், பெருக்கெடுத்த நீரோடைபோலவும் அவரே அருளுகின்றார். மேலும் ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். என்னும் உண்மைகள் நமக்கு ஆறுதலாய் இருக்கின்றன. அத்தோடு, தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள், நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். என்னும் மனமாற்றச் செய்தியையும் ஆண்டவர் வழங்குகின்றார். எனவே ஆண்டவரின் அழைப்பிற்கேற்ப வாழ வரம் கேட்டுச் செபிப்போம்.முதல் வாசகம்

அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 35:1-10

"பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்: பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்." அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்: லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்: கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்: ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். " அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள்" பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்: அது "தூய வழி " என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்: அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது: அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை: மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்: அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி:

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பல்லவி:

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். பல்லவி:

சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பல்லவி:

இரண்டாம் வாசகம்

ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்.
யாக்கோபு 5:7-10

சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது. சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!"இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:2-11

அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? " என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, " நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்: தொழுநோயாளர் நலமடைகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர்: இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் " என்றார். அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: " நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். "இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் " என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போல வலிமையும், சக்தியும், மாற்றமும் மனப்பக்குவமும் பெற்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனமாற்றத்தை விரும்பும் இறைவா!

நீர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றீர்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றீர்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளீர். இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும்: கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத்தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: என்ற தந்தையே

எம் இளைஞர்களை ஆன்மீகத்திலும் அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாது , துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை மாதிரிகளாகக் கொண்டு வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

''வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'' (மத் 11:3)

வாழ்க்கையில் சில வேளைகளில் ஏமாற்றங்கள் ஏற்படுவது உண்டு. பெரிய பெரிய காரியங்கள் நிகழும் என ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறான நிகழ்வுகள் நடந்து நம்மை மனம் சோர்வடையச் செய்வதும் உண்டு. இத்தகைய ஒரு நிலை இன்றைய நற்செய்தி வாசகத்தில் விவரிக்கப்படுகிறது.

திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி மக்கள் மனமாற்றம் அடைய வேண்டும், தங்கள் வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார்; அவருக்குப் பின்னால் அவரைவிடவும் பெரியவர் ஒருவர் வரவிருக்கின்றார் எனவும் அறிவித்திருந்தார்; பலன் கொடாத மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்படும் என எச்சரித்திருந்தார். வரவிருக்கும் மெசியா மக்களுக்குத் தீர்ப்பளிப்பார் எனவும், தீயோர்களை நேர்மையாளரிடமிருந்து பிரித்து நெருப்பில் வீழ்த்தித் தண்டிப்பார் எனவும் யோவான் முழங்கினார்.

யோவானின் சமகாலத்தவரும் இத்தகைய ஒரு மெசியாவைத்தான் எதிர்பார்த்தனர். மெசியா வரும்போது தங்களை அடிமைநிலையிலிருந்து விடுவிப்பார் என மக்கள் எதிர்நோக்கினர். இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் மிகவும் துன்புற்றிருந்தனர். எகிப்து, பாபிலோன், பெர்சியா, கிரேக்கம், உரோமை போன்ற பேரரசுகளின் ஆதிக்கத்தின்கீழ் இஸ்ரயேலர் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டதுண்டு. எனவே, அன்னிய ஆதிக்கத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் தங்களை விடுவிக்க பலம் வாய்ந்த ஒரு மெசியா வருவார், அவர் தங்கள் எதிரிகளை முறியடித்துத் தண்டிப்பார் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததில் வியப்பில்லை.

மெசியா பெரியதொரு படையைத் திரட்டி, போர் செய்து, எதிரிகளை முறியடித்து சிறப்பானதொரு பேரரசை நிறுவுவார் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. கடவுளுக்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்த மக்கள் அவரிடமிருந்து நன்மைபெறுவர் எனவும் அவர்கள் நம்பினர்.

மன்றாட்டு:

இறைவா, துன்பமும் சாவும் எங்களை வருத்தினாலும் வாழ்வளிக்கும் வள்ளலாக நீர் இருக்கிறீர் என்பதை உணர்ந்தறிய எங்களுக்கு அருள்தாரும்.