திருவழிப்பாட்டு ஆண்டு C (27-10-2013)

இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். 
ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே 
கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'/> இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். 
ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே 
கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'/> இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். 
ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே 
கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'/>


திருப்பலி முன்னுரை

இயேசுவின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களே, ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் வாரத் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றேன். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருந்து, நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றி, தம் ஊழியரின் உயிரை மீட்கும், ஆண்டவரின் சந்நிதானத்தில் நன்றிப்பலி செலுத்த நாமெல்லாம் ஒன்று கூடியுள்ளோம்.

இன்றைய வழிபாடு, ''பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை'' லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. கடவுளை நாம் எவ்வித மனநிலையோடு அணுக வேண்டும் என்பதற்கு இயேசு இக்கதை வழி பதில் தருகின்றார். இன்றைய நாளில்: ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்: அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்: தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். நம்முடைய செபவாழ்வும், பணியும் இறைவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக அமைய வேண்டுமெனவும், நாம் தாழ்ச்சியுடையோராய் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தி நிற்கின்றன. என்னும் இறைவனுடைய செய்தியை இறைவார்த்தைகள் நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டி நம்முடைய செபவாழ்வும், பணியும் இறைவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக அமைய வேண்டுமெனவும், நாம் தாழ்ச்சியுடையோராய் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தி நிற்கின்றன. எனவே, நம்முடைய செபவாழ்வையும், பணியையும் இறைவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக அமைத்துக்கொள்ளவும்; நாம் தாழ்ச்சியுடையோராய் இருக்கவும்; வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18

ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார். ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல்கள் 34: 1-2. 16-17. 18,22

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். -பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ``இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக் கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார். '' இயேசு, ``பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்: எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார்”

அனைத்தையும் ஆண்டு வழிநடத்துபவரே! உம் திருமகனின் வழி பின்பற்றி எங்களை வழி நடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்மார்கள், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் இவர்களை நிறைவாக ஆசிர்வதியும். இந்த நம்பிக்கை ஆண்டில் இறைசமூகத்தின் நம்பிக்கையை ஊக்குவிக்க இவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளையும் ஆசிர்வதிக்க வேண்டுமாய் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

மாசின்மையை நேசிக்கும் இயேசு ஆண்டவரே,

உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உள்ளத்திலிருந்து ஆணவத்தை, இறுமாப்பை, செருக்கை, ‘நான் உயர்ந்தவன்’ என்னும் பெருமையை அகற்றியருளும். தாழ்ச்சியும், சாந்தமும் நிறைந்த உமது இதயத்தைப்போல் எமது இதயங்களை மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய நாம் எம்முடைய செபவாழ்வையும், பணியையும் உமது விருப்பத்திற்கு ஏற்றதாக அமைத்துக்கொள்ளவும், நாம் தாழ்ச்சியுடையோராய் இருக்கவும்; ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன் அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன் என்னும் வார்த்தையை வாழ்வாக்கவும் வேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்”

தாயும் தந்தையுமானவரே! உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும், ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய காட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“நீர் இன்றே என்னோடு பேரின்ப வான் வீட்டில் இருப்பீர்”

அன்பு தந்தையே! இதோ இந்த தருணத்தில் இறந்துபோன ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து உம் வான்வீட்டில் உம்மை முகமுகமாக தரிசிக்கும் வரத்தை பொழிந்தருள இறைவா உம்மை பார்த்து மன்றாடுகிறோம்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'' (லூக்கா 18:10,14)

''பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை'' லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. கடவுளை நாம் எவ்வித மனநிலையோடு அணுக வேண்டும் என்பதற்கு இயேசு இக்கதை வழி பதில் தருகின்றார். அடிப்படையில் இருவித அணுகுமுறைகளை மனிதர் கடைப்பிடிக்கின்றனர். சிலர் தாங்கள் சாதித்த காரியங்களைப் பெரிதுபடுத்தி, தங்களையே உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக அனைவர் முன்னிலையிலும் காட்டிக்கொண்டுத் திரிவார்கள். மற்றவர்களோ இவ்வாறு தம்பட்டம் அடிக்காமல் தங்கள் வாழ்வில் குறை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த இரு அணுகுமுறைகளில் முந்தியது பரிசேயரிடம் காணப்பட்டது; பிந்தியது வரிதண்டுவோரிடம் விளங்கியது. கடவுளை நாடிச் சென்று வேண்டுதல் செய்யும்போது நம்மில் தோன்றுகின்ற மன நிலை பரிசேயரிடம் துலங்கியதை ஒத்திருக்கிறதா அல்லது வரிதண்டுபவரிடம் காணப்பட்டதை ஒத்திருக்கிறதா?

இக்கேள்விக்குப் பதிலளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் நம்மிடம் சில வேளைகளில் ஒரு மன நிலையும் வேறு நேரங்களில் மறு மன நிலையும் தெரிவதுண்டு. நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று கடவுளிடம் எடுத்துக் கூறி நாம் பெருமைகொண்டாடுவதில்லையா? அப்போது நம்மிடையே துலங்குவது பரிசேயரிடம் தெரிந்த மன நிலை தானே! இந்த மன நிலை கொண்டோர் கடவுளிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை, கடவுளிடமிருந்து உதவி கோருவதுமில்லை. தங்கள் சொந்த சக்தியால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற இறுமாப்புத் தான் அங்கே தெரிகிறது. இது சரியான மன நிலையல்ல என இயேசு தெளிவுபடுத்துகிறார். இதற்கு நேர் மாறானது வரிதண்டுபவரின் மன நிலை. அவருடைய தொழில் மக்களால் இகழப்பட்ட ஒன்று. ஏன், பல மக்கள் வரிதண்டுவோரை மனதார வெறுத்தனர். ஆனால் இந்த மனிதர் கடவுளிடம் சென்று தாம் குற்றம் செய்ததை ஏற்கிறார். பிறரை வஞ்சித்ததை ஒத்துக்கொள்கிறார். அதுமட்டுமல்ல. பிறரிடமிருந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அவருடைய வாழ்க்கையில் ஒரு ஆழ்ந்த மாற்றம் ஏற்படுகிறது. கடவுளிடமிருந்து அவர் மன்னிப்புக் கோருகிறார். கடவுளும் அவருடைய மன்றாட்டை ஏற்றுக்கொண்டு அவரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார். நம்மிடம் இந்த மன நிலை துலங்குகிறதா?

மன்றாட்டு:

இறைவா, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.