திருவழிப்பாட்டு ஆண்டு C (08-09-2013)

என்னிடம் வருபவர் தம் தந்தை, 
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது/> என்னிடம் வருபவர் தம் தந்தை, 
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது/> என்னிடம் வருபவர் தம் தந்தை, 
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது/> என்னிடம் வருபவர் தம் தந்தை, 
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது/> என்னிடம் வருபவர் தம் தந்தை, 
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது/> என்னிடம் வருபவர் தம் தந்தை, 
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது/>


திருப்பலி முன்னுரை

தந்தையாம் இறைவனின் அன்புமக்களாகி உங்களோடு ஆண்டின் பொதுக்காலம் 23 ஆம் வார ஞாயிறு வழிபாட்டில் உங்களோடு ஒன்றாக இணைவதில் மகிழ்ச்சியோடு இறைவனை புகழ்கின்றேன். ஆவணி மாதத்தில் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைத் சிறப்பித்தோம். இன்று அன்னை மரியாவின் பிறப்பு விழா. அன்னையை வாழ்த்துவோம், அன்னையை நமக்குக் கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். மரியன்னையின் பிறந்த நாளை சிறப்பித்து தாயாக விழா எடுத்து மகிழும் இம்மாதத்தில் அந்த அன்னை எவ்வாறு நினைவுகளால், மனத்தால், இறைவனோடு இணைந்து தாழ்ந்தோரை சார்ந்து உயர்த்தி பாடினாரோ அதே நினைவுகளுக்கு நம்மனங்கள் திறக்கப்படட்டும்.

17, 18 ஆம் நூற்றாண்டில் மரியாவின் திருப்பெயரின் பெருமையை பற்றிப் புனித அல்போன்ஸ் லிசோரியா எழுதிய ‘மரியின் மாண்பு’ என்ற நூலில் மரியாவின் நாமத்தினால் நடந்த அருஞ்செயலை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

துறவி ஒருவர் தமது இல்லத்தில் அருமை பெருமையோடு கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அவருடைய இல்லத்துக்கு வருபவர்களை வரவேற்க இக்கிளிக்கு ‘மரியே வாழ்க’ என்று சொல்லக் கற்றுக் கொடுத்தார். இந்தக் கிளியின் வாழ்த்தைக் கேட்டவர்கள் யாவரும் பரவசம் அடைந்தனர். ஒரு நாள் சற்று வெளியே திரியட்டும் எனக் கூட்டில் இருந்த கிளியை வெளியே திறந்து விட்டார். வெளியே தனியாக உலா வந்த கிளியை ஒரு பருந்து பிடித்துச் செல்ல வட்டமிட்டுத் திடீரெனக் கீழே பதிந்து வந்து அக்கிளியை தாக்க நெருங்கியது. ஆபத்தை உணர்ந்த கிளி ‘மரியே வாழ்க’. ‘மரியே வாழ்க’ என்று சத்தமிட்டது. என்ன ஆச்சரியம். என்ன புதுமை. தாக்க வந்த பருந்து அந்த இடத்திலேயே விழுந்து மடிந்து விட்டது. இது உண்மைச் சம்பவம், கதையல்ல என்பதையும் புனித அல்போன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அற்புதம் செய்யும் புனித மரியாளின் நாமத்தை உச்சரித்து ஆபத்து நேரத்தில் இறை அருளைக் கேட்டுப் பொதுமக்கள் மன்றாடத் தொடங்கினர். அன்னையின் ஆசீரை நாளும் பெற்றிட இந்நாள நம் வாழ்வின் பொன்னான நாள். அன்னையின் அருள்வரங்களை நாளும் பெற்று அன்னையின் தாழ்ச்சியை ஆடையாக அணிவோம்! வரம் கேட்டுச் செபிப்போம்.முதல் வாசகம்

நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9;13-18

13 "கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? 14 நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. 15 அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. 16 மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? 17 நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? 18 இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர். "

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
திருப்பாடல்கள் 90;3-6,12-14,17

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்பல்லவி .

4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர் பல்லவி ;

6 அது காலையில் தளிர்த்துப் ப+த்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். பல்லவி

13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம் பல்லவி

.17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும் பல்லவி

!

இரண்டாம் வாசகம்

நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வது போல் அவனையும் ஏற்றுக் கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1;9-10,12-17

9 அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் 10 பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.12 அவனை உம்மிடம் திரும்ப அனு;பபுகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். 13 நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக் கொள்ள விரும்பினேன். 14 ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டு மென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. 15 அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! 16 இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! 17 எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வது போல் அவனையும் ஏற்றுக் கொள்ளும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாதுஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்;14;25-38

5 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது; 26 "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 28 "உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30 "இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை" என்பார்களே! 31 "வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமது அன்னையை எங்களுக்கும் தாயாகத் தந்த இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். மரியாவை தாயாக ஏற்க மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அவரைத் தாயாக ஏற்று மகிழும் நாங்கள், அந்தத் தாயின் மனம் குளிரும்படி, உம் வார்த்தைகளின்படி வாழ அருள்தந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரே

கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

''இயேசு, 'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது' என்றார்''

அழைத்தலின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களை உமது சீடர்களாக அழைத்ததற்காக நன்றி கூறுகிறோம். கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கலாகாது என்னும் மொழிக்கேற்ப, நாங்கள் உலகைத் திரும்பிப் பாராமல், உமது சிலுவையை முன்னோக்கிப் பார்த்து நடைபோட அருள்தர வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,

உம் திருமகன் வழியாக நீர் எங்களோடு எந்நாளும் தங்கியிருக்கும் அருள்செயலுக்கு நன்றி! அன்னை மரியாவைப் போல நாங்களும் உமது திருவுளத்தை நிறைவேற்ற எப்போதும் முன்வர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

பலியிலே பங்கேற்கும் நாங்கள் உம்மை ஏற்று பயணிப்பதால் வரும் இடர்பாடுகளை ஏற்று துணிவுடன் சந்திக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

''உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது'' (லூக்கா 14:33)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தம் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பது சிலருக்குக் கடினமான ஒரு போதனையாகத் தோன்றலாம். மனிதருடைய உள்ளத்தில் இடம் பிடித்துக்கொள்கின்ற எதுவும் அவரைத் தமக்கு அடிமையாக்க முயற்சி செய்யக் கூடும். பொருள், உறவு, குடும்பம் போன்ற தளைகள் நம்மை இறுகப் பிணைத்துவிட்டால் கடவுளோடு நமக்குள்ள உறவு முறிவதற்கான ஆபத்து எழக் கூடும். இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவைப் பின்செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் வேறு எந்த பொருளுக்கோ மனித ஆளுக்கோ நாம் முதன்மையிடம் அளித்தலாகாது. இதனால் நம் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் நாம் ''வெறுக்கவேண்டும்'' என்று பொருளாகாது. ஆனால், மனித உறவு எதுவும் கடவுளின் உறவுக்கு அடுத்த படியில்தான் அமைய வேண்டுமே ஒழிய அதை முந்திவிடக் கூடாது. இதையே இயேசு போதிக்கிறார்.

நம் உயிர் மட்டில் நமக்குப் பற்று இருப்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் ஒன்றில் நாம் அந்த ஆபத்தை எதிர்த்துப் போராடுவோம், அல்லது அந்த ஆபத்திலிருந்து தப்பித்து ஓடிப்போவோம். ஆனால் இயேசு நம் உயிர்மட்டில் நமக்கு இருக்கின்ற பற்றினைவிட அதிகப் பற்றோடு நாம் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறார். இதற்கு ஒரு காரணம் நம் உயிரே கடவுளின் கொடை என்பதுதான். கடவுளிடமிருந்தே அனைத்தையும் நாம் கொடையாகப் பெற்றுக்கொள்வதால் கொடையைத் தருகின்ற வள்ளலை நாம் ஏற்கும்போது அவர் தருகின்ற கொடைகளையும் நன்றியோடு ஏற்போம். ஆனால், நாம் பெறுகின்ற கொடையே அக்கொடையை நமக்கு அளித்தவரின் இடத்தைப் பிடித்துக்கொள்ளா விதத்தில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். பொருளையும் உறவையும் குடும்பத்தையும் நட்பையும் இயேசுவின் பொருட்டுத் துறந்துவிடுதல் அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தும் வகையில் இயேசு ''நாம் நம் சிலுவையைச் சுமந்துகொண்டு அவர்பின் செல்ல'' நம்மை அழைக்கிறார் (காண்க: லூக்கா 14:27). இயேசுவின் சிலுவை என்பது இயேசு அனுபவித்த துன்பத்திற்கு அடையாளம்; அதுவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பத்திற்கும் அடையாளம். ஆக, இயேசுவின் பின் செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் பற்றற்ற நிலை உருவாக வேண்டும்; அதே நேரத்தில் கடவுளிடத்தில் நம் பற்று வளர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவைப் பின்செல்வதில் நாங்கள் நிலையாய் இருக்க அருள்தாரும்.