திருவழிப்பாட்டு ஆண்டு C (05-05-2013)

என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்/> என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்/> என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்/>


திருப்பலி முன்னுரை



இறைமகன் இயேசுக் கிறிஸ்துவில் மிகவும் இனிமையானவர்களே! உயிர்ப்பின் காலம் 6 ஆம் ஞாயிற்றுக் கிழமையில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்களைக் கூறி வரவேற்கிறேன்.

“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்” என்னும் இயேசுவின் சொற்களை இன்று இதயத்தில் இருத்துவோம். அன்பும் கீழ்ப்படிதலும் இணைந்தே செல்லும் என்பது நாம் அறிந்ததே. பெற்றோரை அன்பு செய்யும் பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்து நடக்கின்றன. பெற்றோரின் சொல் கேட்காத பிள்ளைகளை நாம் மதிப்பதில்லை. காரணம், அவர்கள் பெற்றோரை அன்பு செய்வதில்லை. அவ்வாறே, இயேசுவின் சீடர்களும் இயேசுவின் சீடர்களும் அவர்மீது உண்மையான பற்று கொண்டிருந்தால் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. இயேசுவை “ஆண்டவரே” என அன்புடன் அழைக்கும் நாம், அவர் சொல்வதை ஏற்றுக் கடைப்பிடிக்க அருள்வேண்டுவோம். தீர்மானங்களுடன் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்15;1-2,22-29

1 யூதேயாவிலிருந்து வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். 2 அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். 22 பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.23 பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம்.24 எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.25 எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம்.26 இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்.27 எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.28 இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்.29 சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக
திருப்பாடல்கள் 67:2-3,5-6,8

2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். ()பல்லவி

3 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!பல்லவி

5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

இரண்டாம் வாசகம்

கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 21:10-14,22-23

10 தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டுசென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். 11 அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. 12 அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. 13 கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. 14 நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. 22 நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். 23 அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாலோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கஎன்கிறார் ஆண்டவர். . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:23-29

24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். 27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்”“ என்னும் இயேசுவின் சொற்களை இன்று இதயத்தில் இருத்துவோம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்பே உருவான இறைவா,

திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி பெருமைப்படுத்தும் இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். உம்மை ஆண்டவராக அறிக்கையிடும் நாங்கள், உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

உமது அன்பை வெளிப்படுத்த, இந்த உலகில் தோன்றிய உம் திருமகன் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, அவர் வழியாக உம்மை அன்பு செய்யும் வரத்தை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பின் பிறப்பிடமே இறைவா,

உலகில் அன்பின்மையால் உருவாகியுள்ள அனைத்து தீமைகளும் முடிவுக்கு வரவும், இறையன்பும் பிறரன்பும் மக்களிடையே வளர்ச்சி காணவும், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கவும் உதவ வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

எம் சிறுவர்களையும், இளைஞர்களையும், உமது ஆவியின் வல்லமையால் நிரப்பி அவர்கள் இறையுறவிலும், ஞானத்திலும், ஒழுக்கத்திலும், சமூகநல ஈடுபாட்டிலும் வளர்ந்து உமக்கு மகிமையைக் கொண்டுவரும் மக்களினமாகத் திகழும் ஆற்றலை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் தந்தையே இறைவா!

வேலையின்றியும், வதிவிட அனுமதிக்காக வேதனையோடு காத்துக்கொண்டும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்”

திக்கற்றவர்களாக விடமாட்டேன்

நாம் ஒருவர் ஒருவரை எவ்வாறு அறிமுகம் செய்கிறோம் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். அது இயேசு விரும்பும் சமூகத்தை உருவாக்கும். நாம் பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்யும்போது, இவர் M.A , B.E படித்திருக்கிறார்; இவர் 25000 சம்பளம் வாங்குகிறார்; இவர் இந்தப் பதவியில் இருக்கிறார் என்றுச் சொல்லி அறிமுகம் செய்கிறோம்.இவர் அன்புள்ளம் கொண்டவர்; ஏழைகளுக்கு இரங்குபவர்; நியாயம் நீதியோடு வாழ்பவர் என்று யாருடைய நற்பண்புகளையும் சொல்லி அறிமுகம் செய்வது மிக அறிதாகிவருகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்தும்போதெல்லாம் தன்னை அன்புசெய்யும் இறைவனாக அறிமுகம் செய்கிறார். அன்புசெய்து அவர்களோடு குடிகொள்ளும் தெய்வமாக அறிமுகம் செய்கிறார். "நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்"(யோவான் 14:23). "திக்கற்றவர்களாக விடமாட்டேன்"(யோவான்14:18) "கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்"(1 யோவான் 1:9) நம்மை திக்கற்றவர்களாக கைவிடாத இறைவன், நம்மோடு குடிகொள்ள விரும்பியதால், இம்மானுவேல் இறைவனாக இவ்வுலகில் பிறந்தார். தொடர்ந்து நம்மை வாழ்விக்க விரும்பிய இறைவன் தூய ஆவியாம் இறைவனைத் துணையாளரா நமக்கு அனுப்ப வாக்கு கொடுக்கிறார். அன்பை அடிப்படை தகுதியாக வைத்து அறிமுகம் செய்யும் சமூகம் ஒரு தெய்வீக சமூகம். அங்கே யாரும் கைவிடப்படுவதில்லை. திக்கற்றவர்கள் யாரும் இல்லை. இறைவன் அவர்களை தாங்கி வழிநடத்துவார். இத்தயை நற்பண்பில் நம்மை உருவாக்குவோம். எக்குறையும் இன்றி இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.