திருவழிப்பாட்டு ஆண்டு C (28-04-2013)

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்./> ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்./> ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்./> ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்./> ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்./>


திருப்பலி முன்னுரைஇறைமகன் இயேசுக் கிறிஸ்துவில் மிகவும் இனிமையானவர்களே! உயிர்ப்பின் காலம் 5 ஆம் ஞாயிற்றுக் கிழமையில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்களைக் கூறி வரவேற்கிறேன்.

அந்தத் துறவற மடத்தை அண்டி வந்தவர்கள் பலர். துறவியாக வேண்டும் என்ற ஆசையோடு வந்த இளைஞர்கள் பலர். சுமைகளை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் வந்தவர்கள் பலர். உண்மையில் பலருடைய வாழ்வில் அது ஒரு பாலைவனச் சோலையாகத் திகழ்ந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல வறட்சியால் அது வாடத் தொடங்கியது. இப்போது அதைத்தேடுவோர் யாருமில்லை. இருந்த சில துறவிகளும் கனமான இதயத்தோடு, ஒருவருக்கொருவர் முகம் கொடுத்தும் பேசுவது கிடையாது. மடத்துக்கு அருகிலேயே ஒரு யூத மத ராபி வசித்து வந்தார். அவரிடம் பேசாவிட்டாலும் அவருடைய பிரசன்னம் துறவிகளுக்குத் தெம்பு கொடுத்தது, மடத்துத் தலைவர் ஒரு நாள் ராபியைப் பார்க்கச் சென்றார்.

இருவரும் பிரிந்த சகோதரர்கள் இணைவது போல ஆனந்தக் கண்ணீர் வடித்து மனம் விட்டுப் பேசினர். ராபி, நான் உங்களுக்கு ஓர் இரகசியம் கூறுகிறேன். ஆனால் யாராயினும் அதை ஒரு முறைதான் கூற வேண்டும். உங்களில் ஒருவர் புனிதராயிருக்கிறார் என்றார். ஆம், அன்றே மடத்தில் நிலவிய வறட்சி மறையத் தொடங்கியது. துறவிகள் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்கினர். மீண்டும் மக்கள் கூட்டம் மடத்தை நோக்கி வரத் தொடங்கியது. அன்பு மனித குலத்தின் உயிர்நாடி. மனித குலம் இன்னும் உயிர் வாழ்வதே அன்புடையவர்கள் இருப்பதால் தான். இந்த அன்பைக் கொடுக்கவும், பெறவும் விரும்புவதே மனித இயல்பு. இந்தப் பரிமாற்றம் நிகழாதபோது ஒருவன் உயிரோடு வாழ்ந்தாலும் நடைப்பிணமாகவே கருதப்படுகிறான். பெற்றேரிடமிருந்து, நண்பர்களிடமிருந்து, கணவன் அல்லது மனைவியிடமிருந்து அன்பைப் பெற வேண்டும். அதைத் திருப்பிப் பிறருக்கு கொடுக்க வேண்டும். அன்பு இல்லாத ஒரு வாழ்வு மனித வாழ்வு அன்று.

உன்னைப் போல் உன் அயலானையும் நேசி என்கின்றது பழைய கட்டளை. நான் உங்களுக்கு அன்பு செய்தது போல ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள், என்கிறது புதிய கட்டளை இயேசுவே அன்பின் இலக்கணம். சிலுவையே அன்பின் சின்னம், இயேசுவின் அன்பு கரை காணாதது. அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அவர் ஏற்படுத்திய சமூகம் அன்பின் சமூகமாக இருக்க வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். அவருடைய நிறை அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழவேண்டுமென்றே விரும்புகிறார். இயேசுவின் அன்பு வாழ்வு நம்மில் பிரதிபலிக்கிறதா? தீர்மானங்களுடன் திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:21-27

21 மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்." 22 பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 23 பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், "திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். 24 எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. 25 எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். 26 இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27 எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்
திருப்பாடல்கள்145;8-13

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்


திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 21:1-5

1 பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. 2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. 3 பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" என்றது. 5 அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். மேலும், ""இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை" என எழுது" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா, அல்லேலூயா நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:31-35

31 அவன் வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார். 33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். 35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நல்ல ஆயருக்கும் ஆடுகளுக்கும் இடையே உள்ள உறவுதான் இறைவனுக்கும் மாந்தருக்கும் இடையே உள்ள உறவாகும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் நல்லாயராம் இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, முதலாம் பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

துணையாளராம் இறைவா,

உமது அன்பைப் புறக்கணித்து, தங்கள் மன விருப்பங்களுக்கு ஏற்ப தன்னலத்தோடு வாழும் மக்கள் அனைவரும், உமது திருமகன் வழியாக உம்மில் நம்பிக்கைகொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

உலகில் தீய குணங்களாலும், தீயப் பழக்கங்களாலும், நோய்களாலும், மன அமைதியின்றி வாழ்வோர் அனைவருக்கும் உமது அன்பினால் ஆறுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உதவிசெய்ய அழைப்பவராம் இறைவா,

ஏழ்மை, தனிமை, வன்முறை, நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அன்பை இழந்து வாடும் மக்களிடையே, உமது அன்பின் கருவிகளாக செயலாற்றும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

இயேசுவின் கட்டளை

இயேசுவின் போதனை மனித சமுதாயத்தை மிகவும் பாதிக்கக்கூடியது. காரணம் மனித வாழ்க்கையில் அவசியம் இருக்க வேண்டியதை அவர் வலியுறுத்துகின்றார். வாழ்வின் சாதாரண நிகழ்வைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துகின்றார். உன்னைப் போல் உன் அயலானையும் நேசி என்கின்றது பழைய கட்டளை. (லேவி 19:18) நான் உங்களுக்கு அன்பு செய்தது போல ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள், என்கிறது புதிய கட்டளை (நற்செய்தி)

இயேசுவின் புதிய கட்டளை

இயேசுவே அன்பின் இலக்கணம். சிலுவையே அன்பின் சின்னம், இயேசுவின் அன்பு கரை காணாதது. அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அவர் ஏற்படுத்திய சமூகம் அன்பின் சமூகமாக இருக்க வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். அவருடைய நிறை

அன்புக்கு நாம் சாட்சிகளாக

வாழவேண்டுமென்றே விரும்புகிறார். அன்பு வாழ்வே சாட்சிய வாழ்வு அன்னை தெரசாவின் அன்புப் பணியில் இறைவன் இயேசுவைக் காணும் சமுதாயம், மறுபக்கம் அவருடைய பெயரைத் தாங்கியிருக்கும் திருச்சமூகம் எதிர்சாட்சிய வாழ்வு வாழ்வதைக் கண்டு குழப்பமடைகிறது. உங்கள் வழக்குகளைப் புறவினத்தாரிடம் எடுத்துச்சொல்ல வேண்டாம் என்றார் புனித பவுலடியார் (1கொரி. 6:12). ஆனால் காவல் துறைக்குப் பெரும் வருமானத்திற்கு வழியாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்பது பொய்யாகாது. நீதி மன்றங்களுக்குச் சென்று பெரும் தொகையையும் இழக்கவும் தயங்குவதில்லை. இவையெல்லாம் நம் உள்ளங்களின் வறட்சியைக் காட்டுகின்றன அல்லவா? அஹிம்சைக்காக உயிர் கொடுத்த காந்தியடிகள் பிறந்த இந்நாட்டில் அநீதியாகச் சாகடிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்? இயேசுவின் அன்பை வாழ்வில் பிரதிபலிப்பவனே உண்மையான சீடன். அன்பு வாழ்வே சீடனுக்குரிய மிகச் சிறந்த அடையாளம். அதுவே மிகச் சிறந்த சாட்சியம்.

விளைவு

அன்புச் சமூகமே யோவான் காட்சியில் காணும் புதிய வானம். புதிய பூமி , (இரண்டாம் வாசகம்), அதில் புலம்பலில்லை, அழுகையில்லை, சாவில்லை, நோவில்லை. அத்தகையதொரு சமூகத்தை உருவாக்குவது நம்முடைய கடமை.

கேள்வி

இயேசுவின் அன்பு வாழ்வு நம்மில் பிரதிபலிக்கிறதா?

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு நாங்கள் நல்லுறவில் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.