யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)



திருவழிப்பாட்டு ஆண்டு C (03-03-2013)

சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் 
மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்/> சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் 
மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்/> சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் 
மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்/> சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் 
மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்பு நிறை சகோதரர்களே! சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். தவக்கால மூன்றாம் வாரத்தில் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமது வாழ்வு கனி தருவதாக அமைந்திருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராயிருப்பதே தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” என்னும் வார்த்தையை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.

இறைவன் நம்மிடமிருந்து நற்கனிகளை எதிர்பார்க்கின்றார். நாம் கனி தராவிட்டால், நாம் பரிதாபத்துக்குரியவர்களே! இயேசு கூறிய அத்திமர உவமையில், உரிமையாளர் தொழிலாளியிடம் சொல்லும் புகாரைக் கொஞ்சம் கவனிப்போம்: மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனியைத் தேடிவருகிறேன். எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?” ஆம், கனி தராத மரம் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது.

கனி தராத ஒவ்வொரு கிறிஸ்த்தவரும், இந்த உலகில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, நாம் கனி தரவேண்டும். உரிமையாளர் அந்த மரத்துக்குப் போதுமான காலம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகளாகக் கனி தேடியபிறகுதான், மரத்தை வெட்டும் முடிவுக்கு அவர் வந்தார். நம்முடைய வாழ்விலும் அப்படியே. எத்தனையோ ஆண்டுகள் நாம் கனி தராமல் இருந்தால், இறைவன் ஏமாற்றமே அடைவார். எனவே, இந்தத் தவக்காலத்தில் நாம் மனமாற்றம் பெறுவோம். நம்முடைய வாழ்வு கனி தருவதாக அமையட்டும். நம்முடைய வாழ்வில் நற்செயல்கள் பெருகட்டும். நம்முடைய வாழ்வு இறைவனுக்கும், பிறருக்கும் உகந்ததாக அமையட்டும். இத்தகைய உணர்வுகளோடு திருப்பலியில் பங்கேற்போம்.

அல்லது

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்பு நிறை சகோதரர்களே! சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். தவக்கால மூன்றாம் வாரத்தில் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

துன்பத்தின் இறையியல் என்னும் முக்கியமான கருத்தை இன்று நமக்குத் தருகிறார் ஆண்டவர் இயேசு. துன்பம் என்பது யாருக்கும் வரும், எப்பொழுதும் வரும். எதன் காரணமாகத் துன்பம் நேர்கிறது என்பதைப் பல வேளைகளில் நாம் அறிவதில்லை. இறைவன் மட்டுமே அறிவார். எனவே, துன்பத்தில் வாடுவோரைக் கண்டு நாம் தீர்ப்பிடக்கூடாது. ஏதோ அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாகத்தான் அவர்கள் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று நாம் முற்சார்பு எண்ணத்துடன் சிந்திப்பதோ, பிறரிடம் பகிர்ந்துகொள்வதோ தவறானது என்று இயேசு எடுத்துக்காட்டுகிறார்.

சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் இயேசு. எனவே, நோயில் வாடுகின்ற, விபத்தில் சிக்கிய, தோல்விகளைச் சந்தித்த யாரையும் நாம் பாவிகள் என்றோ, பாவத்தின் காரணமாகவே அவர்கள் துன்புறுகிறார்கள் என்றோ தீர்ப்பிட்டுவிடாதபடி கவனமாயிருப்போம். அதே நேரத்தில், மனந்திரும்பாவிட்டால் நீங்கள் அழிவீர்கள் என்னும் ஆண்டவரின் எச்சரிக்கையையும் மனதில் கொண்டு, மனம் மாற்றம் பெறுவோம். இத்தகைய உணர்வுகளோடு திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே
விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 3:1-8, 13-15

1 மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.2 அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.3 ″ ″ ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்″ ″ என்று மோசே கூறிக்கொண்டார்.4 அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். மோசே, மோசே என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ″ ″ இதோ நான்″ ″ என்றார்.5 அவர், ″ ″ இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்″ ″ என்றார்.6 மேலும் அவர், ″ ″ உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே″ ″ என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.7 அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்: ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.8 எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு-அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு-அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.3 மோசே கடவுளிடம், ″ ″ இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவர் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?″ ″ என்று கேட்டார்.14 கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ ″ நீ இஸ்ரயேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ ″ என்றார்.15 கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ″ ″ நீ இஸ்ரயேல் மக்களிடம், உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!1

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்
திருப்பாடல்கள் 103:1-2, 3-4, 6-7, 11

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.

6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது.

இரண்டாம் வாசகம்

அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 10:1-6, 10-12

1 சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.2 அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.3 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.4 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை.5 அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.6 அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.10 அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.12 எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-9

1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7 எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8 தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்த, 16ம் பெனடிக்ட் திருத்தந்தைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். அவர் தொடர்ந்தும் பிரார்த்தனையிலும், தியானத்திலும் தனது வாழ்நாளைச் செலவிடவும், நம் அனைவரோடும் அவர் செபத்தால் ஒன்றித்திருக்கவும், திருஅவைக்குத் தனது செபத்தால் உதவவும், நாமும் செபத்தால் அவரோடு ஒன்றித்திருக்கவும், திருஅவைக்கு புதிய திருத்தந்தையைத் தந்தருளவும், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தம்மை வந்தடையும் எல்லாவித சோதனைகளையும் வென்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய வலிமையும், சக்தியும், மனப்பக்குவமும் பெற்று செயற்படுவதற்கு, ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கொடைகளின் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற கொடைகள், ஆற்றல்கள், திறமைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறுகிறோம். இந்தத் திறமைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், பிறருக்கும் கனிகளை வழங்கும் அருளை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் எங்கள் வாழ்வில் மாற்றங்களை அருளும். நற்கனி கொடுப்பவர்களாக எங்களை மாற்றிருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறேன். பிறரது துன்பத்தைக் கண்டு அவர்களைத் தீர்ப்பிடாத அருளைத் தாரும். அதே வேளையில் என்னுடைய வாழ்வில் மனமாற்றத்தைப் பெற்று புது வாழ்வு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்'' (லூக்கா 13:1-2).

குற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு பொதுத் தத்துவமாகக் கொண்டிருப்போர் பலர். அதுபோலவே, பாவம் செய்தால் அதற்குத் தண்டனையைக் கடவுள் கொடுப்பார் என்பது கடவுள் நம்பிக்கை கொண்டோர் பலரின் கருத்து. நில நடுக்கம், சூறாவளிக் காற்று, நிலச் சரிவு, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்ற மக்கள் பாவம் செய்ததால் தண்டிக்கப்படுகிறார்களா? சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இயேசு வாழ்ந்த காலத்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்தது. பிறவியிலேயே பார்வை இழந்து பிறந்த ஒருவருக்கு இயேசு மீண்டும் பார்வை வழங்கியபோது அவரிடமும் இக்கேள்விதான் கேட்கப்பட்டது. ''ரபி, அவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று கேட்டவர்களுக்கு இயேசு அம்மனிதர் பார்வையற்றவராகப் பிறக்க யார் பாவமும் காரணமாக இருக்கவில்லை என்ற பதிலளித்தார் (காண்க: யோவா 9:1-3). அதே கருத்தை விளக்குகின்ற இன்னொரு நிகழ்ச்சியை லூக்கா பதிவு செய்துள்ளார். பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்னும் செய்தியைக் கேட்ட இயேசு, அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மற்ற கலிலேயரை விடப் பாவிகள் எனக் கூறுவது சரியல்ல என்று கற்பிக்கிறார் (காண்க: லூக் 13:1-2). பிலாத்து கலிலேயரைக் கொன்ற நிகழ்ச்சி வேறு எந்த வரலாற்று ஆதாரத்திலும் காணப்படவில்லை. என்றாலும் அவன் உண்மையிலேயே கொடியவன் என்பதற்கு வேறு பல நிகழ்ச்சிகள் ஆதாரமாக உள்ளன. -- பிறருக்குத் துன்பங்கள் ஏற்படும்போது அவர்கள் பாவம் செய்ததால்தான் அவ்வாறு துன்புறுகின்றனர் என நாம் முடிவு செய்வது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இதனால் பாவத்தின் விளைவாக யாதொரு துன்பமும் ஏற்படாது என நாம் முடிவுசெய்துவிடலாகாது. சில வேளைகளில் நாம் செய்கின்ற தவறான செயல்களின் விளைவாக நமக்கோ பிறருக்கோ துன்பம் ஏற்படுவது இயல்பு. எனவே தவறான நடத்தையை நாம் விலக்க வேண்டும் என்னும் முடிவுக்கு நாம் வந்தால் அது சரியானதே. ஆனால் பிறருக்கு ஏற்படும் துன்பங்கள் அவர்கள் பாவம் செய்ததின் விளைவே என நாம் முடிவுசெய்வதோ, அந்த முடிவின் அடிப்படையில் அவர்களை இழிவாக நோக்குவதே கிறிஸ்தவ மனப்பான்மைக்கு எதிரான ஒன்று. துன்பம் ஏன் வருகிறது என்பதற்கு நம்மால் முழுமையான பதில் காண்பது இயலாது. ஆனால் குற்றமற்றவராக இருந்த இயேசுவே நமக்காத் துன்பங்களை ஏற்றார் என்பது நமக்கு ஆறுதலாக அமைய வேண்டும். இயேசுவைப் போல நாமும் துன்பங்கள் வழியாக நன்மை நிகழ வழியாக மாறிட வேண்டும். பிறருடைய துன்பங்களைக் கண்டு அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு மாறாக, அவர்கள் மேல் குற்றம் சாட்டுகின்ற மனப்பான்மை நம்மிலிருந்து மறைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்களைக் காக்கிறது என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.