யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2013-02-21


முதல் வாசகம்

என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத்தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.
எஸ்தர்(கிரேக்கம்) நூலிலிருந்து வாசகம் 4:17

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகந்தார்; பகட்டான தம் ஆடைகளைக் களைத்துவிட்டுத் துயரத்துக்கும் புலம்பலுக்கும் உரிய ஆடைகளை அணிந்து கொண்டார்; சிறந்த நறுமணப் பொருள்களுக்கு மாறாகத் தம் தலைமீது சாம்பலையும் சாணத்தையும் இட்டுக் கொண்டார் ; தம் உடலை அலங்கோலப்படுத்திக் கொண்டு, தாம் வழக்கமாக ஒப்பனை செய்யும் உடலுறுப்புகளைத் தம் அவிழ்த்த கூந்தலால் மூடிக் கொண்டார். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார்: 17l "என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத்தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். 17m ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும், அவர்களின் "மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச்சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினிர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். 17n நாங்களோ உம் முன்னிலையில் பாவம் செய்து விட்டோம் ; நீரும் எங்கள் பகைவர்களிடத்தில் எங்களை ஒப்புவித்துவிட்டீர். ஏனெனில் நாங்கள் அவர்களின் தெய்வங்களை மாட்சிப்படுத்தினோம். 17o ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். நாங்கள் கொடிய அடிமைத் தனத்தில் உழல்வதுகூட அவர்களுக்கு மனநிறைவு தரவில்லை. 17p உமது வாக்குறதியைச் செயலற்றதாக்கவும், உமது உரிமைச் சொத்தை ஒழிக்கவும், உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை அடைக்கவும், உம் இல்லத்தின் மாட்சியைக் குலைக்கவும், உமது பீடத்தில் பலி நிகழாமல் தடுக்கவும், தகுதியற்ற தெய்வச் சிலைகளைப் புகழும்படி வேற்றினத்தாரின் வாயைத் திறக்கவும், சாகக்கூடிய ஒரு மன்னரை என்றென்றும் போற்றவும், அவர்கள் தங்கள் தெய்வங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 17q ஆண்டவரே, உயிரில்லாத தெய்வங்களிடம் உமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டாம்; எங்கள் வீழ்ச்சியைக் கண்டு பகைவர்கள் எள்ளி நகையாட இடம் கொடுக்க வேண்டமாம். ஆவர்களின் சூழ்ச்சியை அவர்களுக்கு எதிராகவே திருப்பி, அதைச் செய்தவனைப் பிறருக்கு எச்சரிக்கையாக மாற்றும். 17r ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்: எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும்; தெங்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவே, எனக்குத் துணிவைத் தாரும். 17s சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும். 17t ஆண்வரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத்தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்
திருப்பாடல்கள் 138:1-3,7-8

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7:7-12

7 ' கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ' 8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!12 ' ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

விடாப்பிடியான செபம் !

இன்று செபத்தின் வலிமையைப் பற்றி ஆண்டவர் இயேசு கூறும் உவமைக்கு செவிமடுக்கிறோம். அருமையான உவமை. நண்பரிடம்கூட உதவி கேட்க முடியாத இக்கட்டான நேரம் நள்ளிரவு நேரம். அந்த நேரத்தில் கதவைத் தட்டி உதவி கேட்பரிடம் மறுத்துப் பேசியபின்னும், நண்பர் என்பதற்காக அல்லாது, தொல்லையின் பொருட்டாவது கேட்ட உதவியைக் கொடுத்துவிடுவது மனித இயல்பாக இருக்கிறது என்று உளவியல் வழி பாடம் சொல்கிறார் இயேசு. மனித இயல்பே தொந்தரவுக்குப் பணிகிறதே, இறை இயல்பு நிச்சயம் பரிவு கொள்ளும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் இயேசு. விடாப்பிடியாய் என்று சொல்லாடல் நண்பரின் முயற்சிக்கு அணி சேர்க்கிறது. நாமும் விடாமுயற்சியுடன், தளரா நம்பிக்கையுடன் இறைவனை நோக்கி மன்றாட வேண்டும் என்று அழைக்கிறார் இயேசு. எனவே, நமது நம்பிக்கையைக் கொஞ்சம் ஆழப்படுத்திக் கொள்வோம். அத்துடன், விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் துhய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி என்றும் இயேசு கூறி, எதற்காக விடாப்பிடியாய் மன்றாட வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துகிறார். சொந்த வீடு, பதவி உயர்வு, நல்ல மாப்பிள்ளை போன்ற தேவைகளுக்காக விடாப்பிடியாய் மன்றாடுவதைவிட துhய ஆவியின் ஞானத்திற்காக இடைவிடாமல் மன்றாடுவது சிறப்பானது.

மன்றாட்டு:

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எங்களுடைய தேவைகளில் சலிக்காமல் உம்மை நோக்கி மன்றாட அழைப்பு விடுப்பதற்காக நன்றி. தந்தையே, அனைத்திற்கும் மேலாக துhய ஆவி என்னும் கொடைக்காக உம்மை வேண்டுகிறோம். ஞானத்தின் ஆவியை எங்களுக்குத் தந்து எங்களை நிறைவு செய்வீராக. ஆமென்.